அறிவிப்பு

கவிஞனின் ஒரு நாள்

அகழ் இணைய இதழில் என்னுடைய ஒரு நாள் என்று மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணனின் கட்டுரை வெளியாகியுள்ளது. தமிழாக்கம் செய்திருப்பவர் அழகிய மணவாளன். சரளமான, நேர்த்தியான மொழியாக்கம். கல்பற்றா நேரடியாகத் தமிழில் எழுதியது போலிருக்கிறது. நான் கல்பற்றா நாராயணன் கவிதைகளை மொழிபெயர்ப்பில் வாசித்திருக்கிறேன். அவரது கவிதைகளை மிகவும் பிடிக்கும். மலையாளத்தின் முக்கியக் கவிஞர் என்பதாக மட்டுமின்றிச் சர்வதேச அளவிலான முக்கியக் கவிஞர்களில் ஒருவராகவே அவரைக் கருதுகிறேன். அவரது இத்ரமாத்ரம் நாவல் சுமித்ரா என ஷைலஜா மொழியாக்கத்தில் தமிழில் …

கவிஞனின் ஒரு நாள் Read More »

சென்னையும் நாவல்களும்

சென்னையைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்கள் குறித்து தமிழ் இந்துவில் வெளியாகியுள்ள கட்டுரையில் யாமம் நாவல் குறித்து விபின் எழுதியுள்ளார். அவருக்கு எனது அன்பும் நன்றியும்.

கவிதையின் வெளிச்சம்

இயக்குநர் சீனு ராமசாமியின் புதிய கவிதைத்தொகுப்பு வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டேன். அண்ணா நூலக அரங்கில் நடைபெற்றது. பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல் கவிதை நூலை நான் வெளியிட நடிகர் விஜய் சேதுபதி பெற்றுக் கொண்டார். இந்த நூல் குறித்து கவிஞர் நந்தலாலா சிறப்புரை ஆற்றினார். செறிவான உரை. கவிதையை சமகால நிகழ்வுகளுடன் பொருத்திக் காட்டிப் பேசியது சிறப்பு. நிகழ்வில் தோழர் எஸ்.ஏ.பெருமாள், கவிதா சொக்கலிங்கம், இரா.தே. முத்து, பாரதி நாகராஜன் கலந்து …

கவிதையின் வெளிச்சம் Read More »

ஜெர்மனியில்

எனது திருடனின் மூன்று அற்புதங்கள் சிறுகதை ஜெர்மனியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஹேம் மகேஷ் இதனை மொழியாக்கம் செய்துள்ளார். இக்கதை மலையாளம். தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் முன்பே மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள் சிறுகதை தொகுப்பில் இக்கதை இடம்பெற்றுள்ளது.

குலேப் என்ற மலர்

குலேபகாவலி படம் பார்த்துக் கொண்டிருந்தேன். குலேப் என்ற மலரை தேடி பகாவலி நாட்டிற்கு மேற்கொள்ளும் இளவரசனின் சாகசபயணமே படம். அந்த மலரைக் கொண்டு வந்தால் மட்டுமே தந்தையின் பார்வையை மீட்க முடியும். இளவரசன் தாசன் குலேப் மலரைத்தேடி செல்லும் வழியில் சூதாடி இளவரசர்களை அடிமைப்படுத்தும் லக்பேஷா என்ற இளம்பெண்ணைப் பற்றி அறிந்து கொண்டு தந்திரமாக அவளை வெல்கிறான் குலேப் என்ற சொல் படம் பார்த்து முடித்த நிமிஷத்திலிருந்து மனதில் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டேயிருந்தது. கண்பார்வையை மீட்கும் …

குலேப் என்ற மலர் Read More »

கிறுகிறுவானம்

எனது சிறார் நூலான கிறுகிறுவானம் பற்றி எம்.ஜே.பிரபாகர் சிறப்பான அறிமுகம் ஒன்றை எழுதியுள்ளார். அவருக்கு மனம் நிறைந்த நன்றி

புதுக்கோட்டை புத்தகக் கண்காட்சியில்

புதுக்கோட்டைப் புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரியின் வெளியீடுகள் அனைத்தும் கடை எண் 81 & 82 சக்சஸ் புக் ஷாப் அரங்கில் கிடைக்கின்றன. இன்று காலை புதுக்கோட்டைப் பகுதியை சேர்ந்த ஆசிரியர் முத்தரசன் எனக்கு தொலைபேசி செய்து நூறு சிறந்த சிறுகதைகள் தொகுதிகள் வேண்டும் எனக் கேட்டார். அவரை கண்காட்சியில் வாங்கிக் கொள்ளும்படி சொன்னேன். எனது அனைத்து நூல்களும் அங்கே விற்பனைக்கு கிடைக்கின்றன. வாசகர்கள். நண்பர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

காஃப்காவின் சுழலும் தலை

காஃப்கா மறைந்து நூறு ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு உலகெங்கும் அவரது நினைவைக் கொண்டாடுகிறார்கள். காஃப்காவின் உலகை அறிமுகம் செய்யும் விதமாக நான் எழுதிய கட்டுரை தமிழ் இந்து நாளிதழில் வெளியாகியுள்ளது. (28.7.24) தமிழ் இந்து நாளிதழுக்கும் மண்குதிரைக்கும் மனம் நிறைந்த நன்றி.

கோவை புத்தகத் திருவிழாவில்

கோவை புத்தகத் திருவிழாவில் மூன்று நாட்கள் இருந்தேன். நிறைய வாசகர்களைச் சந்தித்து உரையாடினேன். புத்தகங்களில் கையெழுத்து போட்டுக் கொடுத்தேன். சனி,ஞாயிறு இரண்டு நாட்களும் நிறையக் கூட்டம். விமானநிலையத்தின் அருகிலுள்ள மேரியட் ஹோட்டலில் ( Fairfield by Marriott) தங்கியிருந்தேன்.மேரியட் குழுமத்தின் தங்கும்விடுதிகள் இந்தியாவில் நிறைய இடங்களில் இருக்கின்றன. நானே தங்கியிருக்கிறேன். கோவையில் உள்ள விடுதி வெளித்தோற்றத்தில் மட்டுமே சிறப்பாக உள்ளது. உள்ளே எந்த வசதியும் கிடையாது. மிகச்சிறிய அறை. அவர்கள் போட்டுள்ள நாற்காலியை நகர்த்த இடம் கிடையாது. …

கோவை புத்தகத் திருவிழாவில் Read More »