அறிவிப்பு

ரேடியோ நாடகம்

எனது காந்தியைச் சுமப்பவர்கள் சிறுகதை ரேடியோ நாடகமாகத் தயாரிக்கபட்டு வருகிறது. விரைவில் சென்னை வானொலியில் ஒலிபரப்பு செய்ய இருக்கிறார்கள். இந்தச் சிறுகதை ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. காந்தியை மையமாகக் கொண்ட தமிழ் சிறுகதைகளை சுனில் கிருஷ்ணன் தொகுத்துள்ளார். அதன் தலைப்புக் கதையாகவும் இடம் பெற்றுள்ளது.

கிதார் இசைக்கும் துறவி

விகடன் தீபாவளி மலரில் வெளியாகியுள்ள எனது சிறுகதை கிதார் இசைக்கும் துறவி குறித்து நிறையப் பாராட்டுகள் வந்தபடியே இருக்கின்றன. மூன்று நாட்களுக்குள் றாற்பது பேர் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். கதை மிகவும் பிடித்திருப்பதாக வண்ணதாசன் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். முகநூலிலும் கதை குறித்து எழுதியுள்ளார். அகரமுதல்வன் போனில் அழைத்துக் கதையைப் பாராட்டி உரையாடினார். பேராசிரியர் சரவணன் கதை குறித்து மிக விரிவான மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார். இந்தக் கதை மலையாளத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. கிதார் இசைக்கும் துறவி என்ற தலைப்பில் தான் …

கிதார் இசைக்கும் துறவி Read More »

கே.ஜி. ஜார்ஜின் திரைப்படங்கள்.

மலையாள இயக்குநர் கே.ஜி.ஜார்ஜின் நினைவைப் போற்றும் விதமாகச் சிறப்பு மலர் ஒன்றை மலையாளத்தில் கொண்டு வருகிறார்கள். அந்த மலரில் கே.ஜி.ஜார்ஜின் திரைப்படங்கள் குறித்த கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறேன். நண்பர் ஷாஜி இதனை மலையாளத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார். **

ரஷ்ய இலக்கியக் கட்டுரைகள்

ரஷ்ய இலக்கியம் குறித்து நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு மாஸ்கோவின் மணியோசை. புஷ்கின் துவங்கி இன்று முக்கியக் கவியாக விளங்கும் வேரா பாவ்லோவா வரை இதில் இடம்பெற்றுள்ளார்கள். இந்நூல் டிசம்பர் 25 மாலை சென்னையில் வெளியிடப்படுகிறது.

நிமித்தம் / ஆங்கிலத்தில்

எனது நாவல் நிமித்தம் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. டாக்டர் சந்திரமௌலி இதனை மொழிபெயர்ப்பு செய்துள்ளார். விரைவில் இந்த நாவல் வெளியாகும்.

மறதியின் பாடல்

அமெரிக்காவின் தேசியக் கவியாக கொண்டாடப்படும் பில்லி காலின்ஸ் பல்வேறு இதழ்களுக்கு அளித்த நேர்காணல்கள் தொகுக்கபட்டு தனிநூலாக வெளியிடப்பட்டுள்ளது. மிகச்சிறந்த நேர்காணல்களின் தொகுப்பு. கவிதை எழுதுவது குறித்தும் கவிஞனின் அகம் குறித்தும் சிறப்பாக தனது பார்வைகளை முன்வைக்கிறார் பில்லி காலின்ஸ். ‘பிக் டேட்டா காலத்தில் கவிதைகளின் தேவை அல்லது கவிதை எழுதுவது எப்படியிருக்கிறது என ஒரு கேள்வியை முன்வைக்கிறார்கள். அதற்கு அவர் கவிதை என்பது ஸ்மால் டேட்டா என்று பதில் சொல்கிறார். உண்மை தான். பில்லி காலின்ஸ் சொன்னதைப் …

மறதியின் பாடல் Read More »

இந்திய இலக்கியத்தின் முகம்

இந்திய இலக்கியத்தின் சிறந்த படைப்புகளை இரண்டு தொகுதிகளாகத் தொகுத்துள்ளார் கே.எம்.ஜார்ஜ். இதனைச் சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ளது. முதல் தொகுதி கவிதைகளும் இலக்கிய வரலாறும் கொண்டது. இரண்டாவது தொகுதி புனைகதைகள். இரண்டும் சேர்ந்து 2400 பக்கங்கள். 1993ல் இந்தத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. அதன் மறுபதிப்பை 2013ல் வெளியிட்டிருக்கிறார்கள். இரண்டு தொகுதிகளும் சேர்ந்து ஆயிரம் ரூபாய் விலைக்கு இணையத்தில் வாங்கினேன். புனைகதைகள் தொகுப்பில் 22 மொழிகளிலிருந்து 178 எழுத்தாளர்களின் 115 சிறுகதைகள், 68 நாவல்களின் சிறிய பகுதிகள் இடம் பெற்றுள்ளன. …

இந்திய இலக்கியத்தின் முகம் Read More »

நேற்றைய நிகழ்வு

இணைய வழியில் நடைபெற்ற எஸ்.ரா கதைகள் -நூறு நிறைவு நிகழ்ச்சியில் நேற்று மாலை கலந்து கொண்டேன். எனது உரைக்குப் பதிலாக கலந்துரையாடலை வைத்துக் கொள்வோம் என்று சொன்னேன். நிறைய வாசகர்கள் நல்ல கேள்விகளைக் கேட்டார்கள். இரண்டு மணி நேரம் உரையாடல் நீண்டது, இன்னும் நிறைய கேள்விகள் மிச்சமிருந்தன. நேரமில்லாத காரணத்தால் அவர்களுக்குப் பதில் அளிக்க இயலவில்லை. பேராசிரியர் வினோத் நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்தார். அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றி. அய்யா ஆறுமுகசாமி நேற்றைய நிகழ்விலும் …

நேற்றைய நிகழ்வு Read More »