தோற்றம் சொல்லாத உண்மை
நான் பார்த்து ரசித்த சர்வதேசத் திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு தோற்றம் சொல்லாத உண்மை. தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது சென்னையில் டிசம்பர் 25 மாலை இந்நூல் வெளியிடப்படுகிறது.
நான் பார்த்து ரசித்த சர்வதேசத் திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு தோற்றம் சொல்லாத உண்மை. தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது சென்னையில் டிசம்பர் 25 மாலை இந்நூல் வெளியிடப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் கவிதைகள் குறித்து நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு கவிஞனும் கவிதையும் என்ற தலைப்பில் வெளியாகிறது டிசம்பர் 25 அன்று இந்த நூல் வெளியிடப்படுகிறது. தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது இந்தக் கட்டுரைத் தொகுப்பில் தமிழ் மற்றும் அயல்மொழிக் கவிதைகள் குறித்து எழுதியிருக்கிறேன்.
ரஷ்ய இலக்கியங்கள் குறித்து நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு மாஸ்கோவின் மணியோசை இந்த நூல் டிசம்பர் 25 அன்று வெளியாகிறது. தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது. ரஷ்ய இலக்கியங்களை அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்த நூல் சிறந்த அறிமுகத்தை வழங்கும். கவிஞர் அலெக்சாண்டர் புஷ்கின், கோகோல், லியோ டால்ஸ்டாய். தஸ்தாயெவ்ஸ்கி, இவான் துர்கனேவ், லேர்மன்தேவ், குப்ரின், ஆன்டன் செகாவ். கொரலன்கோ,இவான் கோன்சரோவ், சிங்கிஸ் ஐத்மாதவ், ஐசக் பேபல், மாக்சிம் கார்க்கி, போரிஸ் பாஸ்டர்நாக், பாஸீ அலீயெவா ,அலெக்சாண்டர் …
எனது புதிய சிறுகதைத் தொகுப்பு கிதார் இசைக்கும் துறவி டிசம்பர் 25 ல் வெளியாகிறது. தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது
பெடரல் இணையதளம் சமீபத்தில் வெளியான சிறந்த பத்து ஆங்கில மொழியாக்க நூல்களைப் பட்டியலிட்டுள்ளது. அதில் எனது சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு THE MAN WHO WALKED BACKWARDS AND OTHER STORIES இடம் பெற்றுள்ளது. Ten recent titles in translation that you must add to your TBR list இணைப்பு https://thefederal.com/category/features/international-translation-day-2023-10-new-books-you-must-not-miss-97166 Courtesy: the federal.com online magazine
அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் சார்பில், சிறந்த மொழி பெயர்ப்பு நூல்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன விருதுக்கான நூல்களைத் தேர்வு செய்யும் நடுவர் குழுவில் பணியாற்றினேன். என்னோடு பேராசிரியர் பழனி கிருஷ்ணசாமி, மொழிபெயர்ப்பாளர் சா.தேவதாஸ் ஆகியோர் நடுவர்களாகப் பணியாற்றினார்கள். இந்த விருது வழங்கும் விழா நேற்று சென்னை, ஏவி.எம்.ராஜேஸ்வரி மண்டபத்தில் நடைபெற்றது. அரங்கு நிறைந்த கூட்டம். விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினேன். டேவிட் கிராஸ்மேன் எழுதிய ‘நிலத்தின் விளிம்புக்கு’ நாவலை மொழியாக்கம் செய்த அசதாவிற்கு இரண்டு லட்சம் ரூபாய் …
அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம் சார்பில் எனது நூறு சிறுகதைகள் குறித்துத் தமிழ்த்துறை ஆய்வாளர்கள், பேராசிரியர்கள். வாசகர்கள் இணைய வழி உரை நிகழ்த்துகிறார்கள். இதனைப் பேராசிரியர் வினோத் ஒருங்கிணைப்பு செய்கிறார். இணைய நிகழ்வு குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள். ••• விருதுநகர் அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம். இணைய வழி நூற்பொழிவு 17.09.2023 அன்று முதல் 20.11.2023 வரை நடைபெற உள்ளது. எஸ்.ராமகிருஷ்ணனின் நூறு சிறுகதைகள் என்ற தலைப்பில் நிகழ உள்ளது. எஸ்.ராமகிருஷ்ணனின் ஏதேனும் ஒரு சிறுகதையைத் தேர்ந்தெடுத்து பத்து நிமிடங்கள் …
சாமுராய்கள் காத்திருக்கிறார்கள் – குறித்த அறிமுகம் மீ. சித்ரா ராஜம். உலகச் சினிமாவை நேசிக்கும் பார்வையாளனுக்கும், உலகச் சினிமாவே தெரியாத சாமானியனுக்குமான அருமையான புத்தகம் .இந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்து எஸ்.ரா சொன்ன படங்களைத் தேடித் தேடி பார்க்க ஆரம்பித்ததால் இந்தப் புத்தகத்தை முடிக்கவே எனக்கு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. ஆயினும் ஓரிரண்டு படங்களே பார்க்க முடிந்தது. அவர் குறிப்பிட்டுள்ள ஒரு படத்தைக் கூடக் கடந்து செல்ல முடியாமல் ஒரு வரியையேனும் நானும் இப்பகிர்வில் குறிப்பிட்டிருக்கிறேன். தேர்ந்த …
கரூர் மாவட்ட மைய நூலகம் சார்பில் நடைபெற்ற சிந்தனை முற்றம் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினேன். அரங்கு நிறைந்த கூட்டம். கோவை ,திண்டுக்கல், சேலத்திலிருந்தும் வாசகர்கள் வந்து கலந்து கொண்டது மகிழ்ச்சி அளித்தது. சக்தி நர்சிங் கல்லூரி மற்றும் சிறகுகள் எப்எம் தலைவர் சிதம்பரம் இந்நிகழ்விற்கு உறுதுணையாக இருந்து சிறப்பாக உபசரித்தார். நூலகர் சிவகுமார் கரூர் மாவட்ட மைய நூலகத்தினை முன்மாதிரி நூலகமாக உருவாக்கியுள்ளார். குளிர்சாதனவசதி கொண்ட அரங்கு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்திருக்கிறார். அவருக்கு எனது …
ஓவியர் ரவி பேலட்டின் ஓவியக் கண்காட்சியில் இன்று மாலை கலந்து கொள்கிறேன் ரவி பேலட் மதுரையைச் சேர்ந்தவர். அவரது வண்ணத்தேர்வும் கோடுகளும் தனித்துவமானவை. மினிமலிசம் பாணியில் அவர் வரைந்த ஓவியங்கள் சிறப்பானவை. தற்போது டிஜிடல் ஓவியக் கண்காட்சியை சென்னையில் நடத்தி வருகிறார்.