அறிவிப்பு

பறவைகளின் வீடு

கே. பாஸ்கரன். பகலின் சிறகுகள் என்ற எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய சிறுகதையைப் படித்தேன். படிக்கப் படிக்க சினிமா பார்ப்பது போலவே இருந்தது. இதனை அப்படியே சினிமாவாக எடுக்கலாம். கொரோனா காலத்தில் கூண்டு பறவைகள் விற்கும் பெண் அத்தனை பறவைகளையும் தன்னுடைய அபார்ட்மெண்டிற்குக் கொண்டு வந்து பாதுகாக்கிறாள்.  கொரோனா வந்துவிடுமோ என்ற பயத்தில் மக்கள் பறவைகளை வெறுக்கிறார்கள். அதே அடுக்குமாடிக்குடியிருப்பில் பறவைகளின் இன்னிசையைக் கேட்டு நம்பிக்கை கொள்ளும் வாட்ச்மேன் இருப்பதைச் சரியாக அடையாளம் காட்டியிருக்கிறார். இந்தச் சிறு கதையில் வரும் அப்பாவைப் போலவே கொரோனா துவங்கும் போது இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நானும் நினைக்கவில்லை. அப்பா ஆட்கள் யாருமில்லாத …

பறவைகளின் வீடு Read More »

கரூர் – உரை

கரூர் மாவட்ட மைய நூலகம் சார்பில் நடைபெறும் சிந்தனைமுற்றம் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன் நாள் : செப்டம்பர் 24 ஞாயிறு நேரம் : காலை 10.30

டால்ஸ்டாயின் காலடிச்சப்தம்

யூ.ஜி.அருண்பிரசாத் மண்டியிடுங்கள் தந்தையே நாவல் குறித்த விமர்சனம். •• எஸ்ராவின் இந்த நாவலை டால்ஸ்டாயின் பிறந்த செப்டம்பர் மாதத்தில் அவரது நினைவாக வாசிக்கத் துவங்கினேன். இந்த நாவல் மூலம் எஸ்ரா நம்மை ரஷ்யா அழைத்துச் செல்கிறார். பனி படர்ந்த ரஸ்யாவில் நான் பார்த்த காட்சிகள் வியப்பளிக்கின்றன . டால்ஸ்டாயிக்கு சொந்தமான யஸ்னயா போல்னயா பண்ணை, ஒரு ஆள் ஒளிந்து கொள்ளும் அளவுள்ள எல்ம் மரம், டால்ஸ்டாயின் பெரிய குடும்பம், அங்குள்ள பண்ணையில் வேலை செய்பவர்கள், வசந்த காலத்தில் …

டால்ஸ்டாயின் காலடிச்சப்தம் Read More »

ஓவியம் சொல்லும் கதை

லண்டனிலுள்ள நேஷனல் கேலரி பற்றிய ஆவணப்படத்தைப் பார்த்தேன். ஃபிரடெரிக் வைஸ்மேன் இயக்கியுள்ளார் இந்தக் கேலரியில் 2400 அரிய ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. காட்சியகத்தில் உள்ள ஓவியங்களின் சிறப்பு மற்றும் அவற்றை எவ்வாறு காட்சிப்படுத்துகிறார்கள் ஓவியங்களை மறுசீரமைப்பு செய்யும் பணி எப்படி நடைபெறுகிறது என்பது குறித்து விரிவாக விளக்குகிறார்கள் லியனார்டோ டா வின்சியைப் பற்றிய சிறப்புக் கண்காட்சிதான் படத்தின் முக்கியப் பகுதியாக உள்ளது. ரெம்ப்ரான்ட்டின் உருவப்படத்தை மீட்டெடுப்பவர்கள் காட்டும் கவனமும் அக்கறையும் வியப்பளிக்கிறது. பார்வையற்றவர்கள் எவ்வாறு ஓவியத்தை ரசிப்பது என்பதற்கான …

ஓவியம் சொல்லும் கதை Read More »

கர்னலின் நாற்காலி – அறிமுகவுரை

எனது கர்னலின் நாற்காலி குறுங்கதைகள் தொகுப்பு குறித்து விரிவான அறிமுகவுரையை நிகழ்த்தியிருக்கிறார் முனைவர். சு.வினோத். இவர் சிவகாசியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இந்த நிகழ்வு சங்க இலக்கிய ஆய்வு நடுவத்தில் நடைபெற்றிருக்கிறது. சிறப்பாக உரையாற்றிய பேராசிரியர் வினோத்திற்கு எனது அன்பும் நன்றியும். இதனைக் கவனப்படுத்திய சாத்தூர் ஆறுமுகசாமிக்கு அன்பான நன்றி. தேசாந்திரி பதிப்பகம்ரூ 350

டால்ஸ்டாயைக் கொண்டாடுகிறார்கள்

தூத்துக்குடியில் சலூன் நூலகம் நடத்திவரும் பொன். மாரியப்பன் மற்றும் அவரது நண்பர்கள் ஜெயபால், அருண்பிரசாத் மற்றும் ராம்குமார் இணைந்து நூலக மனிதர்கள் என்ற வாசிப்பு இயக்கத்தை உருவாக்கியுள்ளார்கள் இந்த இயக்கத்தின் மூலம் சிறந்த புத்தகங்களை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்கிறார்கள். பொது நூலகத்திற்குத் தேவையான உதவிகளை மேற்கொள்கிறார்கள். பள்ளி மாணவர்களிடம் புத்தக வாசிப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். நேற்று ரஷ்ய தூதரகம் சார்பில் டெல்லியில் டால்ஸ்டாயின் 195வது பிறந்த நாள் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது பற்றிய செய்தியை டிவியில் …

டால்ஸ்டாயைக் கொண்டாடுகிறார்கள் Read More »

நூலகமே உலகம்

உம்பர்தோ ஈகோவின் பிரம்மாண்டமான நூலகம் பற்றி ஒரு ஆவணப்படம் வெளியாகியுள்ளது. அதன் முன்னோட்டக் காட்சியே வியப்பூட்டுகிறது. ஈகோவின் நூலகத்தில் முப்பதாயிரத்திற்கும் அதிகமான புத்தகங்கள் இருந்தன. சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த நூலகத்திற்கு அவர் நடந்து செல்லும் காணொளி ஒன்று வெளியாகிப் பரபரப்பானது. ஈகோவின் மறைவிற்குப் பிறகு இந்த நூலகம் குறித்து விரிவாக ஆவணப்படம் எடுத்திருக்கிறார்கள் Umberto Eco: A Library of the World

மார்டின் லூதர் கிங்

இன்றைய இந்து தமிழ்திசை நாளிதழில் மார்டின் லூதர் கிங்கின் புகழ்பெற்ற ”I have a dream” உரை குறித்து எழுதியுள்ளேன். 1963 ஆண்டு இதே ஆகஸ்ட் 28ம் தேதி தான் அந்த உரை நிகழ்த்தப்பட்டது.

அறிமுகவிழா

எனது சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்க நூல் The Man Who Walked Backwards and Other Stories ஒரியண்ட் பிளாக்ஸ்வான் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான அறிமுகவிழா ஒன்றினை சென்னையில் நடத்த திட்டமிட்டு வருகிறார்கள். இந்நூலை பிரபாஸ்ரீதேவன் சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார். The Man Who Walked Backwards and Other Stories is an anthology of eighteen short stories by S. Ramakrishnan, the popular and critically acclaimed master of modern …

அறிமுகவிழா Read More »