அறிவிப்பு

குறுங்கதை- ஆங்கிலத்தில்

எனது இரண்டு குறுங்கதைகள் பிரண்ட்லைன் இதழில் வெளிவந்துள்ளன. ஆங்கிலத்தில் இதனை மொழிபெயர்ப்பு செய்தவர் மாலினி சேஷாத்ரி. ‘They fell silent’ Amirthavarshini was the first to notice it. When she was cooking, a large spoon slipped off the stand and fell to the floor. There was no sound. How could such a large spoon fall on the floor and not produce …

குறுங்கதை- ஆங்கிலத்தில் Read More »

தந்தையெனும் வெளிச்சம்

சிங்கப்பூரில் வசிக்கும் எழுத்தாளர் அழகு நிலா தனது தந்தையைக் குறித்து அப்பன் என்ற நூலை எழுதியிருக்கிறார். நூல்வனம் பதிப்பகம் மிக நேர்த்தியாக வெளியிட்டிருக்கிறார்கள் காஃப்காவில் துவங்கி புதுமைப்பித்தன் வரை தந்தையோடு பிணக்கும் மோதலும் கொண்ட படைப்பாளிகளே அதிகம். நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான நாடின் கோடிமர் காஃப்காவின் தந்தையின் கோணத்தில் ஒரு கதை எழுதியிருக்கிறார். அது தந்தையின் மனதைப் பிள்ளைகள் புரிந்து கொள்வதில்லை என்பதன் வெளிப்பாடு. தந்தையைப் பற்றி எப்போது நினைக்கும் போது ஷேக்ஸ்பியரின் லியர் அரசனே …

தந்தையெனும் வெளிச்சம் Read More »

கடல் பிரார்த்தனை

ஆங்கிலப் பேராசிரியரான திலா வர்கீஸ் கனடாவில் வசிக்கிறார். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்து வரும் சிறந்த மொழிபெயர்ப்பாளர். அவர் தற்போது காலித் ஹுசைனியின் கவிதைத் தொகுப்பை கடல் பிரார்த்தனை எனத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். மத்தியதரைக்கடலில் மூழ்கி இறந்த மூன்று வயது சிரிய நாட்டு அகதியான ஆலன் குர்தி என்ற சிறுவனின் வாழ்வை மையமாக கொண்டு எழுதப்பட்டவை இந்தக் கவிதைகள் தந்தை மகனுக்கு எழுதிய கடிதமாக விரியும் இக்கவிதைகள் சமகாலப் பிரச்சனையைத் தொட்டு அகதி வாழ்வின் துயரைப் …

கடல் பிரார்த்தனை Read More »

காந்தியின் சாட்சி

மலையாள எழுத்தாளர் எம்.என் காரசேரி எழுதியுள்ள காந்தியின் சாட்சி என்ற நூலின் வெளியிட்டு விழாவில் கலந்து கொள்கிறேன். இந்த நூலைத் தமிழில் மொழியாக்கம் செய்திருப்பவர் குமரி எஸ். நீலகண்டன். ஆல் இந்தியா ரேடியோவில் பணியாற்றும் நீலகண்டன் காந்தியை மையமாகக் கொண்டு ஆகஸ்ட் 15 என்ற நாவலை எழுதியுள்ளார். மதராஸ் கேரள சமாஜத்தில் நடைபெறும் புத்தக வெளியீட்டுவிழாவில் எம்.என். காரசேரி , கே.பி. சங்கரன், கே.சி. நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கிறார்கள். இந்த இடம் தாசபிரகாஷ் அருகிலுள்ளது. …

காந்தியின் சாட்சி Read More »

கனவில் வந்தவர்கள்

ஒரு கனவிலிருந்து தான் இங்மர் பெர்க்மென் தன்னுடைய ‘க்ரைஸ் அன்ட் விஸ்பர்ஸ்’ (Cries and Whispers: Ingmar Bergman) திரைப்படத்தை உருவாக்கினார் என்கிறார்கள். அது சாத்தியமே. ஒரு சிவப்பு அறையில் வெள்ளை ஆடை அணிந்த நான்கு பெண்கள் ஒருவரோடொருவர் கிசுகிசுத்துக்கொண்டிருக்கும் தொடர் கனவு தான் இந்தப் படம் உருவாகக் காரணமாக இருந்திருக்கிறது கனவில் தோன்றும் நிகழ்வுகள். காட்சிகள் விழித்தெழுந்த பின்பும் மறையாமல் நமக்குள் குமிழ் விட்டபடியே இருக்கின்றன படைப்பாளிகள் அதை உருமாற்றிப் புனைவாக்கிவிடுகிறார்கள். பெர்க்மென் திரைக்கதையாக எழுதியிருக்கிறார். …

கனவில் வந்தவர்கள் Read More »

இரண்டு சிகரங்கள்

லியோ டால்ஸ்டாயும் தஸ்தாயெவ்ஸ்கியும் நேரில் சந்தித்துக் கொண்டதில்லை. ஆனால் ஒருவர் மீது மற்றவர் பெருமதிப்பு கொண்டிருந்தனர். வீட்டை விட்டு வெளியேறிய டால்ஸ்டாய் தனது இறுதிப்பயணத்தின் போது தஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் நாவலைக் கையில் வைத்திருந்தார். இன்றைய AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டாக்டர் ஜி. கிருஷ்ண மூர்த்தி இருவர் சந்திப்பை அழகிய புகைப்படமாக்கியுள்ளார். ரஷ்ய இலக்கியங்களைக் கொண்டாடும் எனக்குப் பரிசாக இதனை அனுப்பி உள்ளார். அவருக்கு மனம் நிறைந்த நன்றி.

சிறிய கண்டுபிடிப்பாளன்

புதிய சிறுகதை அசோக் ராஜன் இன்றைக்கும் பத்திரிக்கையாளர்களை வரவழைத்திருந்தார். மாதம் ஒருமுறை ஏதாவது புதிய கண்டுபிடிப்புகளைப் பற்றிச் சொல்லி பத்திரிக்கையாளர்களின் கேலிக்கு ஆளாவது அவரது வழக்கம். ஆனால் அதனால் அவர் மனச்சோர்வடைவதில்லை. உற்சாகமாகப் புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி நகர்ந்துவிடுவதுண்டு. அன்றைய சந்திப்பிற்கு ஆறு பத்திரிக்கையாளர்கள் வந்திருந்தார்கள். அசோக் ராஜன் தானே தயாரித்த தேநீரை அவர்களுக்கு வழங்கினார். தேநீரை அருந்தியபடியே ஒரு பத்திரிக்கையாளர் “ஏன் இப்படி முட்டாள்தனமான வேலையைத் தொடர்ந்து செய்கிறீர்கள்“ என்று கேட்டார் அதற்கு ராஜன் புன்சிரிப்போடு“ …

சிறிய கண்டுபிடிப்பாளன் Read More »

விழித்திருப்பவனின் இரவு

ஹாரிஸ் வாசிப்பின்/மீள் வாசிப்பின் போது எந்த ஒரு புத்தகம் எத்தனை வருடங்கள் சென்ற பின்னும் புதிய அனுபவத்தை அல்லது அன்றைய நிகழ்வுகளை படிப்பது போல் உணர வைக்கிறத்தோ அதுவே சிறந்த புத்தகம் என்பது எனது அபிப்பிராயம்.  எஸ் ராமகிருஷ்ணனின் ஒவ்வொரு கட்டுரை தொகுப்புகளும்  அவ்வகையானவையே…. விழித்திருப்பவனின் இரவு தொகுப்பை (மீள்)வாசித்து கொண்டிருக்கின்றேன்.  Dracula பற்றிய கட்டுரை – இப்போது கூட Dracula untold என்று ஒரு படம் வந்துள்ளது… எத்தனை வருடங்கள் கடந்தாலும் சிறந்த புத்தகங்கள் obsolete …

விழித்திருப்பவனின் இரவு Read More »

உப பாண்டவம் புதிய பதிப்பு

மலையாளத்தில் கே.எஸ் வெங்கிடாசலம் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ள உப பாண்டவம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது அதன் இரண்டாம் பதிப்பு வெளியாகியுள்ளது.