அறிவிப்பு

கதைப்பயணி

தேசாந்திரி யூடியூப் சேனல் சார்பாக கதைப்பயணி என்ற புதிய காணொளித் தொடரை துவக்குகிறேன். சென்னையும் நானும், எஸ்ராவிடம் கேளுங்கள். திரைப்பயணி போன்ற எனது முந்தைய காணொளித் தொடர்கள் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றன. ரஷ்ய இலக்கியங்கள் குறித்தும். உலகப்புகழ்பெற்ற எழுத்தாளர்கள். திரைப்பட இயக்குநர்கள் குறித்தும் நான் பேசிய விரிவான உரைகள் இணையத்தில் காணக்கிடைக்கின்றன. பல்வேறு புத்தக கண்காட்சிகளில் நான் ஆற்றிய உரைகள். எனது நூல் வெளியீட்டில் ஆற்றிய சிறப்புரைகள், புத்தக அறிமுகங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட எனது உரைகளை …

கதைப்பயணி Read More »

அஞ்சலி

தமிழ் திரையுலகின் நிகரற்ற இயக்குநர் பாரதிராஜாவின் மறைவிற்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள். தமிழ் சினிமாவிற்கு புதிய அழகியலை உருவாக்கியவர். தெற்கத்தி மண்ணையும் மக்களையும் திரையில் அழியாச்சித்திரங்களாக உருவாக்கிய பெருங்கலைஞர். சிறந்த நண்பர். பண்பாளர். அவரது மறைவு மிகுந்த துயரமளிக்கிறது.

தெலுங்கு மொழியாக்கம்

எனது முணுமுணுப்புக் கட்டணம் சிறுகதை தெலுங்கில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் அவினேனி பாஸ்கர். ஆந்திர ஜோதி இதழில் வெளியாகியுள்ளது

பஞ்சாபியில்

சிறந்த இந்தியச் சிறுகதைகளைத் தேர்வு செய்து பஞசாபியில் தொகைநூலாக வெளியிடுகிறார்கள். இந்தத் தொகுப்பில் எனது கேள்வியின் நிழல் சிறுகதை இடம் பெற்றுள்ளது. இதனை ராதிகா மொழியாக்கம் செய்துள்ளார்.

சாய்ந்தாடும் குதிரை மதிப்புரை

இன்றைய இந்து தமிழ்திசை நாளிதழில் எனது சாய்ந்தாடும் குதிரை சிறுகதைத் தொகுப்பிற்கான மதிப்புரை வெளியாகியுள்ளது. தேவதாசன் இதனை எழுதியுள்ளார். நன்றி : தேவதாசன் தி இந்து தமிழ் திசை

சிறுகதை / தெலுங்கு மொழிபெயர்ப்பு

எனது நடைத்துணை சிறுகதை தெலுங்கில் மொழியாக்கம் செய்யப்பட்டு உதயினி இதழில் வெளியாகியுள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் அவினேனி பாஸ்கர், இக்கதை நிறையப் பாராட்டுகளைப் பெற்று வருவதாக பாஸ்கர் தெரிவித்தார். அவரது மொழியாக்கத்தில் எனது சிறுகதை தொகுப்பு ஒன்று விரைவில் வெளியாகவுள்ளது. கதையின் இணைப்பு.

புதுக்கோட்டை / விருது விழா

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் இலக்கிய விருதுகள் வழங்கப்படுகின்றன. அறமனச் செம்மல் சீனு. சின்னப்பா இலக்கிய விருதுகள் வழங்கும் விழா மே 2ல் புதுக்கோட்டையில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி உரையாற்றுகிறேன்.

ஹாம்லெட்

ரஷ்ய இயக்குநர் Grigori Kozintsev இயக்கிய ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் நிகரற்ற திரைப்படம். இப்படம் புதுப்பிக்கப்பட்ட வடிவில் யூடியூப்பில் சப் டைட்டிலுடன் காணக் கிடைக்கிறது. மிகச்சிறந்த ஒளிப்பதிவு. அரங்க அமைப்பு. தேர்ந்த நடிப்பு, இயக்கம் என இதுவரை வெளியான ஹாம்லெட் திரைப்படங்களில் இதுவே மிகச் சிறந்தது.

யாமம் / தெலுங்கில்

எனது யாமம் நாவல் தெலுங்கில் வெளியாகிறது. ஜில்லேல பாலாஜி மொழியாக்கம் செய்துள்ளார். பாலா புக்ஸ் இதனை வெளியிடுகிறார்கள்.