அறிவிப்பு

புலிக்கட்டம் – மொழியாக்கம்

எனது புலிக்கட்டம் சிறுகதையை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார் பரத் குமார்.www.usawa.in இணைய இதழில் கதை வெளியாகியுள்ளது நன்றி : https://www.usawa.in/issue-8/Translation/lambs-and-tigers-bharath-kumar.html

சி. மோகன் விழா

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், கலைவிமர்சகர் சி.மோகன் அவர்களின் கலை இலக்கியப் பங்களிப்பைக் கொண்டாடும் விதமாக அவரது படைப்புகள் குறித்த கருத்தரங்கம் நடைபெறுகிறது. அத்துடன் அவருக்குப் பணமுடிப்பு அளித்து கௌரவிக்கும் விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறேன் டிசம்பர் 18 மாலை இந்த நிகழ்வு நடைபெறுகிறது இடம் கவிக்கோ மன்றம் சென்னை.

புத்தக வெளியீட்டு விழா

தேசாந்திரி பதிப்பகம் சார்பில் டிசம்பர் 25 2022 ஞாயிறு மாலை எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டுவிழா நடைபெறவுள்ளது. நிகழ்வினைத் தலைமையேற்று புத்தகங்களை எழுத்தாளர் வண்ணநிலவன் வெளியிடுகிறார் சென்னை சிஐடி நகரிலுள்ள கவிக்கோ மன்றத்தில் மாலை ஆறுமணிக்கு நிகழ்வு நடைபெறுகிறது

டிசம்பர் 25 – உலக இலக்கியப் பேருரை

டிசம்பர் 25 ஞாயிறு மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் பால்சாக் பற்றி உரை நிகழ்த்த இருக்கிறேன். தேசாந்திரி பதிப்பகம் ஒருங்கிணக்கும் இந்த நிகழ்வில் எனது புதிய நூல்களும் வெளியாகின்றன இந்த ஆண்டு எனது மூன்று புதிய நூல்கள் வெளியாகின்றன பகலின் சிறகுகள் -சிறுகதைத் தொகுப்பு வான் கேட்கிறது – உலக- இந்திய இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு நிறங்களை இசைத்தல் – ஒவியங்கள் குறித்த கட்டுரைகள். •• புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர் பால்சாக்கின் வாழ்வும் …

டிசம்பர் 25 – உலக இலக்கியப் பேருரை Read More »

கி.ராஜநாராயணன் மணி மண்டபம் – விழா

கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணன் அவர்களுக்கு தூத்துகுடி மாவட்டம் கோவில்பட்டியில் சிறப்பான மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதனைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காணொளி மூலம் நாளை (02.12.22) திறந்து வைக்கிறார். மாலை ஐந்து மணிக்கு கிரா நினைவரங்கத்தில் கலை இலக்கிய நிகழ்வினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். கிராவைப் போற்றும் இந்த நிகழ்வில் கலந்து கொணடு உரையாற்றுகிறேன்.

கேரளா இலக்கிய விழா

2023 ஆண்டிற்கான KLF-KERALA LITERATURE FESTIVAL கோழிக்கோடு கடற்கரையில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருக்கிறேன்.

கடைசி குதிரைவண்டி – ஆங்கிலத்தில்

எனது கடைசி குதிரைவண்டி சிறுகதையை ஆர். சதீஷ் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார் இந்தக் கதை Usawa Literary Review இதழில் டிசம்பர் மாதம் வெளியாகிறது.