அறிவிப்பு
இடக்கை நாடகம்
சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற ஔவை மன்றத் துவக்கவிழாவில் கலந்து கொண்டேன். இந்நிகழ்வில் மாணவியர் எனது இடக்கை நாவலின் முக்கியப் பகுதியை நாடகமாக்கியிருந்தார்கள். மிகச்சிறப்பான நாடகமாக உருவாக்கபட்டிருந்தது. குறிப்பாக ஔரங்கசீப்பாக நடித்துள்ள பெண் அபாரமாக நடித்தார். இடக்கை நாவலை ஆழ்ந்து படித்து உள்வாங்கிக் கொண்டு சிறப்பாக நடித்திருந்தார்கள். நாடகத்தை மானசி இயக்கியிருந்தார். நாடகத்தில் பங்கேற்ற அனைவருக்கும் எனது பாராட்டினைத் தெரிவித்தேன். அவர்கள் இந்த நாடகத்தை வெளி அரங்கில் நிகழ்த்தினால் இன்னும் அதிக கவனமும் பாராட்டும் பெறும் …
பெட்னா நிகழ்வு
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இணைய வழி இலக்கிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன். தலைப்பு : எழுதப்படாத உண்மைகள் நாள் : சனிக்கிழமை, அக்டோபர் 22 நேரம் : இந்திய நேரம் இரவு 9 மணி அமெரிக்க நேரம் காலை 11 30 மணி நேரலை – Zoom Live : https://tinyurl.com/FETNAIK2022 Zoom Meeting ID: 893 5830 7330Passcode: 577073
பொள்ளாச்சியில்
16.10.22 ஞாயிறு காலை பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் 100 வது நிகழ்வில் கலந்து கொண்டு கவிதையும் கவிஞனும் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன்
ஆங்கில இதழில்
எனது புருவமில்லாத பொம்மைகள் சிறுகதை borderlessjournal இதழில் வெளியாகியுள்ளது. மொழியாக்கம் செய்திருப்பவர் டாக்டர் சந்திரமௌலி இணைப்பு
துகளின் பயணம்.
ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் பட இயக்குநர் டுடோக் இயக்கிய குறும்படம் The Aroma of Tea (Michael Dudok de Wit.)2006 ஜப்பானிய சித்திர எழுத்து பாணியில் நேர்த்தியான இசையோடு அற்புதமாக உருவாக்கியிருக்கிறார்.
பொள்ளாச்சியில்
பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நூறாவது நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன் அக்டோபர் 16 ஞாயிறு காலை பொள்ளாச்சி என்,ஜி. எம் கல்லூரியில் இந்நிகழ்வு நடைபெறுகிறது.
அரூ இதழில்
அக்டோபர் மாத அரூ இணைய இதழில் எனது சிறுகதை மற்றும் இரண்டு குறுங்கதைகள் வெளியாகியுள்ளன இணைப்பு – https://aroo.space/issue-15/
தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்
எழுத்தாளர் ச. தமிழ்செல்வன் எழுதியுள்ள தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் நூலின் வெளியீட்டுவிழா அக்டோபர் 8 மாலை சென்னை தேனாம்பேட்டையில் பாரதி புத்தகாலயம் துவங்கியுள்ள புதிய கடையினுள் நடைபெறுகிறது 900 பக்கங்கள் கொண்ட பெரிய நூல். தமிழ் சிறுகதையுலகினை விரிவாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார். நூலை நான் வெளியிடுகிறேன். பாராளுமன்ற உறுப்பினர், கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் பெற்றுக் கொள்கிறார். அண்ணன் தமிழ்செல்வனின் நூலை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அவரது நிழலில் கோணங்கியோடு சேர்ந்து வளர்ந்தவன் என்பதால் அந்தப் பசுமையான …
அன்பு வந்தது
சுடரும் சூறாவளியும் படத்தில் இடம்பெற்ற அன்பு வந்தது என்னை ஆள வந்தது பாடல் எனக்கு பிடித்தமானது. இந்த பாடல் இருமுறை படத்தில் இடம்பெறுகிறது.தாயினை இழந்த பிள்ளைகளை தந்தை ஆறுதல்படுத்திப் பாடும் பாடல் ஜெமினி நடித்த இப்படத்தின் இசை எம்.எஸ்.வி பாடலை எழுதியவர் கண்ணதாசன். எஸ்பிபி பாடிய அன்பு வந்தது பாடலை எப்போது கேட்டாலும் மனது கரைந்துவிடுகிறது. அருமையான பாடல். எஸ்பிபியின் குரல் அமிர்தமாக இனிக்கிறது. கண் இரண்டில் கலக்கம் இன்றிஅமைதி காணலாம்காலம் வெல்லும் வெல்லும் என்றுஉறுதி கொள்ளலாம் …









