அறிவிப்பு

நூலக மனிதர்கள்

பொது நூலகங்கள் குறித்தும் நூலகத்தில் சந்தித்த பல்வேறு மனிதர்களைப் பற்றிய நினைவுக்குறிப்புகளும் கொண்ட புத்தகம். நூலகமனிதர்கள் டிசம்பர் 25 மாலை சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறும் விழாவில் வெளியிடப்படுகிறது இந்நூலை தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது

திசை எட்டும் இதழில்

திசை எட்டும் இம்மாத இதழில் எனது சிறுகதையின் ஆங்கில மொழியாக்கம் வெளியாகியுள்ளது. மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் டாக்டர் சந்திரமௌலி.

விகடன் இணையதளத்தில்

ஆனந்தவிகடன் இணையதளத்தில் எனது நேர்காணல் வெளியாகியுள்ளது. “கூழாங்கல்லின் மௌனம் போன்றதே எனது நிதானம்”- எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்பு நேர்காணல் நா.கதிர்வேலன் தமிழ் இலக்கிய உலகின் வசீகர படைப்பாளுமைகளில் ஒருவர் எஸ். ராமகிருஷ்ணன். தன் எழுத்து வாழ்வில் காவிய கட்டத்தில் நிற்கிற அவர் தற்போது ‘மண்டியிடுங்கள் தந்தையே’ என்ற தலைப்பில் டால்ஸ்டாயை முன்வைத்து நாவல் ஒன்றை எழுதியிருக்கிறார். வரும் ஆண்டின் புத்தகத் திருவிழாவின் முக்கியமான புத்தகமாக இந்நாவல் வாசகர் மனம் கவரக் காத்திருக்கிறது. அதற்கான உரையாடலாக நடந்தது இந்த சந்திப்பு. …

விகடன் இணையதளத்தில் Read More »

டான்டூனின் கேமரா

ஒரு எறும்பு போட்டோகிராபராக மாறும் கதை தான் டான்டூனின் கேமரா இந்த சிறார் நூலுக்காக அழகிய வண்ண ஓவியங்களை பிரபல ஓவியர் கே.ஜி. நரேந்திரபாபு வரைந்து கொடுத்திருக்கிறார் டிசம்பர் 25 மாலை சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில் இந்நூல் வெளியிடப்படவுள்ளது தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது

மண்டியிடுங்கள் தந்தையே

டால்ஸ்டாய் நாவலுக்கான அட்டை வடிவமைப்பினை முடித்து மணிகண்டன் அனுப்பியிருந்தார். மிக நன்றாக வந்துள்ளது. நாவலின் அட்டைப்படம் சரியாக வரவேண்டும் என்பதற்காக பத்திற்கும் மேற்பட்ட அட்டைகள் வடிவமைத்துப் பார்த்துவிட்டோம். எதுவும் என் மனதிற்கு நெருக்கமாகயில்லை முடிவில் டால்ஸ்டாயின் இந்த படமும் அதிலுள்ள அவரது முகபாவமும் நாவலின் மையக்கதைக்கு மிக நெருக்கமாக இருந்தது. இதுவே நாவலின் அட்டை வடிவம். நாவல் கெட்டி அட்டை பதிப்பாக வெளியாகிறது விலை ரூ 350 டிசம்பர் 25 மாலை சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் …

மண்டியிடுங்கள் தந்தையே Read More »

ஜீவன் லீலா

காகா காலேல்கர் இந்திய நதிகளைத் தேடிச் சென்ற தனது பயணத்தை ஜீவன்லீலா என்ற நூலாக எழுதியிருக்கிறார். மிக முக்கியமான புத்தகம். இதைப் பற்றி நான் தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன். நீண்டகாலமாக அச்சில் இல்லாத இந்த நூலை சாகித்ய அகாதமி மீண்டும் பதிப்பித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு கூட என்னிடம் ஒரு வாசகர் இதன் பிரதியை நீண்டகாலமாகத் தேடிவருவதாக மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். சாகித்ய அகாதமி அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இந்த நூலைப் பெறலாம். சென்னைப் புத்தகக் கண்காட்சியில் …

ஜீவன் லீலா Read More »

அழைப்பிதழ்

டிசம்பர் 25 மாலை ஆறுமணிக்கு எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்

திரையெங்கும் முகங்கள்

உலக சினிமா குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இத்தாலிய நியோ ரியலிசப் படங்களில் துவங்கி சென்ற ஆண்டு ஆஸ்கார் விருது பெற்ற படங்கள் வரையான பல்வேறு நாடுகளின் திரைப்படங்களை அறிமுகம் செய்யும் இந்நூல் திரை அழகியலின் மாற்றங்களை அடையாளப்படுத்துகிறது

சிறிய உண்மைகள்

போர்ஹெஸ் தனது The Book of Sand கதையில் NEITHER THE BOOK NOR THE SAND HAS ANY BEGINNING OR END என்கிறார் வாசிப்பின் போது சில வரிகள், சில நிகழ்வுகள். நினைவுகள் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். அவற்றைச் சேகரித்து வைத்துக் கொள்வேன். இவை எழுத்தாளனுக்கான கச்சாப் பொருட்கள். எழுத்தின் ஆதாரங்களைப் பற்றிப் பேசும் இந்தக் கட்டுரைகள் எனது இணையதளத்தில் வெளியானவை. தேசாந்திரி பதிப்பகம் வெளியிடும் இந்நூல் டிசம்பர் 25 மாலை ரஷ்ய கலாச்சார …

சிறிய உண்மைகள் Read More »

புத்தக வெளியீட்டு விழா

டிசம்பர் 25 சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறவுள்ள எனது பத்து புதிய நூல்களின் வெளியீட்டுவிழா சம்பிரதாயமான முறையிலிருந்து மாறுபட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது தலைமை, வாழ்த்துரை என எதுவும் கிடையாது. பத்து நூல்களுக்கும் தனி உரைகள் நிகழ்த்தப்படப்போவதில்லை நிகழ்வின் துவக்கத்தில் புதிய நூல்களை வெளியிடுகிறோம். அன்பிற்குரியவர்கள் அதைப் பெற்றுக் கொள்கிறார்கள் எனது புதிய நாவலை எனது நண்பரும் தேர்ந்த இலக்கியவாசகருமான திருப்புகழ் IAS அவர்கள் வெளியிட்டு உரை நிகழ்த்துகிறார் அதைத் தொடர்ந்து நாவலின் சில பகுதிகளை நான் …

புத்தக வெளியீட்டு விழா Read More »