அறிவிப்பு

வண்ணதாசனின் வாழ்த்து

எஸ்.ராமகிருஷ்ணனின் ‘மண்டியிடுங்கள் தந்தையே’ 248 பக்கங்கள் தான். புத்தாண்டு முதல் நாள் இரவு வாசிக்கத் துவங்கி, நேற்றிரவு முடித்தேன். வழக்கத்தை விட வேகம் குறைவாக அமைந்த வாசிப்பு. ஒரு குறிப்பிட்ட நாளில் வெறும் பதினாறு பக்கங்களே வாசித்திருக்கும் படி, அன்றாடத்தின் பாரம் என் மேல் சரிந்திருந்தது. அன்றாடம் புது வருடம் பழைய வருடம் எல்லாம் பார்ப்பதில்லையே.ஆனால் கடந்த நான்கு நாட்களும் அதன் பக்கங்களின் வரிகளாகவே இருந்தேன். ஒரு சிறிய வெளிச்சமும் சிறிய துக்கமும் சதா என் மேல் …

வண்ணதாசனின் வாழ்த்து Read More »

வாழ்த்துகள்

இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ள எழுத்தாளர் அம்பைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். மிகச்சிறந்த சிறுகதைகளை எழுதியுள்ள அம்பை மும்பையில் வசிக்கிறார். சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை என்ற சிறுகதைத் தொகுதிக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. •• சிறார் இலக்கியத்திற்காக வழங்கப்படும் பாலபுரஸ்கார் விருது கவிஞர் மு. முருகேஷிற்கு வழங்கப்பட்டுள்ளது. முருகேஷிற்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள். அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை என்ற நூலிற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது ••

ஜாக் லண்டன் நாவல்

டாக்டர் சந்திரமௌலி ஜாக் லண்டனின் ஒயிட் ஃபேங் நாவலை மொழியாக்கம் செய்திருக்கிறார். சர்வதேச அளவில் மிகவும் கொண்டாடப்பட்ட நாவலிது. 1906ல் வெளியான இந்நாவல் திரைப்படமாக வெளியாகி மிகுந்த வரவேற்பு பெற்றது. டாக்டர் சந்திரமௌலி இதனைச் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். தேசாந்திரி பதிப்பகம் சார்பில் இந்நூல் சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியாகிறது

டான்டூனின் கேமிரா – ஆங்கிலத்தில்

சிறார்களுக்காக நான் எழுதியுள்ள டான்டூனின் கேமிரா நூல் ஆங்கிலத்தில் வெளியாகவுள்ளது. தற்போது மொழிபெயர்ப்பு பணி முடிந்துள்ளது. சென்னை புத்தகக் கண்காட்சியில் இதனை வெளியிடலாம் என்று நினைக்கிறேன்.

இரண்டு இழைகள்

கணேஷ்பாபு சிங்கப்பூரில் வசிப்பவர். தீவிரமான இலக்கிய வாசகர். எழுத்தாளர். இவரது முதற்சிறுகதை தொகுப்பு வெயிலின் கூட்டாளிகள் யாவரும் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது. கணேஷ்பாபுவின் சிறுகதைகள் வடிவ ரீதியாக புதிய முன்னெடுப்புகளைக் கொண்டிருக்கின்றன. கவித்துவமான மொழியில் கதை சொல்கிறார். நடுத்தர வர்க்கத்தின் அன்றாட உலகினை, குறிப்பாக அவர்களின் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அகப்போராட்டங்களை சித்தரிக்க முயலும் இக்கதைகள் மீபுனைவின் கூறுகளை இரண்டாம் இழையாக கொண்டு கதையை புதுமையாக்குகின்றன. வாழ்க்கை குறித்த ஆழமான தத்துவார்த்த கேள்விகளை எழுப்பும் இவரது கதைகள் …

இரண்டு இழைகள் Read More »

புத்தக வெளியீட்டு நிகழ்வு.

நேற்று எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிரம்பிய கூட்டம். நிறைய இளைஞர்கள் வந்திருந்தார்கள். கோவை, சேலம், திருச்சி, மதுரை, தஞ்சை. கும்பகோணம் என பல ஊர்களிலிருந்தும் நிகழ்விற்காக வாசகர்கள் வந்திருந்தது மகிழ்ச்சி அளித்தது. திருப்புகழ் ஐஏஎஸ் எனது மண்டியிடுங்கள் தந்தையே நாவலை வெளியிட்டுச் சிறப்பான உரையை நிகழ்த்தினார். ஒரு நாவலை எப்படி வாசிக்க வேண்டும். அதில் எந்தெந்த விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பதைப் பற்றி அவரது பார்வைகள் மிக முக்கியமானவை. அபாரமான …

புத்தக வெளியீட்டு நிகழ்வு. Read More »

புத்தக வெளியீட்டு விழா

டிசம்பர் 25 சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு ரஷ்ய கலாச்சார மையத்தில் எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இதில் அனைவரும் கலந்து கொள்ளலாம். முகக் கவசம் அணிந்து வருவது கட்டாயம். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். வெளியிடப்படவுள்ள நூல்கள் மண்டியிடுங்கள் தந்தையே / நாவல் ஐந்து வருட மௌனம் / சிறுகதை தொகுப்பு காந்தியின் நிழலில் / கட்டுரைத் தொகுப்பு நேற்றின் நினைவுகள் / கட்டுரைத் தொகுப்பு டான்டூனின் கேமிரா / சிறார் நாவல் காலத்தின் …

புத்தக வெளியீட்டு விழா Read More »

பார்வையற்றவர்களுக்கான சிறப்பு நூல்

பார்வையற்றவர்கள் வாசிப்பதற்காக பிரெயில் முறையில் டான்டூனின் கேமிரா என்ற எனது சிறார் நூல் வெளியிடப்படுகிறது. இதனைச் சாத்தியப்படுத்தியவர் எனது நண்பர் ஆடிட்டர் சந்திரசேகர். தேசிய பார்வையற்றோர் சம்மேளனம் சார்பில் இதனைக் கொண்டுவருகிறார்கள். அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றியும் வாழ்த்துகளும் இந்த நூலும் டிசம்பர் 25 மாலை சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் வெளியிடப்படுகிறது.