அறிவிப்பு

கவிஞர் சிற்பி ஆவணப்படம்

இந்திரன் தமிழின் முன்னோடி கலைவிமர்சகர். ஓவியம். சிற்பம். வரைகலை எனக் கலைகள் குறித்துத் தொடர்ந்து எழுதியும் பேசியும் வரும் இவர் தமிழ் அழகியல் குறித்துத் தனித்த பார்வைகள் கொண்டவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் இவர் எழுதியுள்ள கட்டுரைகள் மிகுந்த பாராட்டிற்குரியவை. தனித்துவமான கலையாளுமையாக விளங்கும் இந்திரன் கவிஞர் சிற்பி குறித்த ஆவணப்படம் ஒன்றை இயக்கியுள்ளார். சிற்பி பாலசுப்பிரமணியம் எனும் கவிஞர் சிற்பி, பேராசிரியர் மொழிபெயர்ப்பாளர், ஆய்வாளர், பாடத்திட்டக்குழு உறுப்பினர். இதழாசிரியர் சாகித்ய அகாதமி தமிழ் ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளர் …

கவிஞர் சிற்பி ஆவணப்படம் Read More »

தபால்காரனின் நாட்கள்

நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளரான ரோஜர் மார்டின் தூகார்டு எழுதிய தபால்காரன் நாவல் பற்றிக் காலம் இலக்கிய இதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த நாவலிது. க.நா.சு மொழியாக்கம் செய்திருக்கிறார். தபால்காரனை முக்கியக் கதாபாத்திரமாகக் கொண்ட கதைகளையும் இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன்.

புத்தகத் தயாரிப்பு

தமிழில் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வெளியாகின்றன. ஆனாலும் புத்தகம் தயாரிப்பது எப்படி என்பது பற்றி முறையான வழிகாட்டும் புத்தகம் நம்மிடம் இல்லை இன்று உருவாகியுள்ள நவீனத் தொழில்நுட்பம், மற்றும் அச்சிடுவதில் உருவாகியுள்ள மாற்றங்கள். வண்ணத்தில் அச்சிடல். காகிதங்களின் வகைகள். பைண்டிங் செய்யப்படும் விதம் என்பது பற்றி ஒரு இளம் பதிப்பாளர் அல்லது வாசகர் அறிந்து கொள்வதற்குச் சரியான புத்தகம் எதுவுமில்லை. 1967ல் புத்தகத் தயாரிப்பு என்றொரு புத்தகம் வெளியாகியிருக்கிறது. இதை எழுதியவர் பி.ந. வெங்கட்டாச்சாரி. தென்மொழிகள் …

புத்தகத் தயாரிப்பு Read More »

டால்ஸ்டாய் ஓவியம்

எனது மண்டியிடுங்கள் தந்தையே நாவலை வாசித்த சுரேஷ் என்ற வாசகர் டால்ஸ்டாயின் ஓவியம் ஒன்றை வரைந்திருக்கிறார். ஒரு நாவல் இப்படியான மனஎழுச்சியைத் தருவது மகிழ்ச்சி அளிக்கிறது

பிடித்த புத்தகங்கள்

பெப்பர்ஸ் டிவியின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் திருப்புகழ் IAS தனக்குப் பிடித்த புத்தகங்கள் பற்றி பகிர்ந்து கொண்டிருக்கிறார். இதில் எனது மண்டியிடுங்கள் தந்தையே நாவல் பற்றி குறிப்பிட்டுள்ளார். திருப்புகழ் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி நன்றிபெப்பர்ஸ் டிவி

உதயம்.

ஜெயகாந்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பு உதயம். 1952 முதல் 54 வரை அவர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. இந்த நூலை அவரே அச்சுக் கோர்த்து பவானி பிரஸ் எனும் அச்சகத்தில் டிரெடில் மிஷினில் தானே அச்சிட்டிருக்கிறார். இப்படி ஒரு எழுத்தாளரின் முதற் தொகுப்பு அவராலே அச்சடிக்கப்பட்டிருப்பது ஆச்சரியமானது. அட்டை ஓவியம் வரைந்திருப்பவர் ஓவியர் ஆனந்தன். இந்தத் தொகுப்பில் சாந்தி பூமி, சுமை பேதம், கண்ணன் பிறந்தான், உதயம் பிழைப்பு மீனாட்சி ராஜ்யம், காந்தி ராஜ்யம் என ஏழு …

உதயம். Read More »

ரயில் கதைகள்

தமிழில் எழுதப்பட்ட ரயில் சார்ந்த சிறுகதைகளைத் தொகுத்து சா. கந்தசாமி ஒரு தொகைநூல் கொண்டு வந்திருக்கிறார். இதனை சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ளது. இந்தத் தொகுப்பில் எனது ரயில் நிலையத்தில் ஒருவன் சிறுகதை இடம் பெற்றுள்ளது. ரஸ்கின் பாண்ட் இது போல ரயில் கதைகள் கொண்ட ஆங்கிலத் தொகுப்பு நூல் ஒன்றை கொண்டுவந்திருக்கிறார். அது போல ஒன்றை தமிழில் தொகுக்க வேண்டும் என்று கந்தசாமி விரும்பினார். இந்நூல் அவரது மறைவிற்குப் பிறகு தற்போது வெளியாகியுள்ளது,

சிறப்பு சலுகை

பெருந்தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள காரணத்தால் புதிய லாக்டவுன் விதிகள் அறிவிக்கபட்டுள்ளன. சென்னைப் புத்தகக் கண்காட்சி ஒத்திவைக்கபட்டுள்ளது. இந்தச் சூழலில் புதிய நூல்களை வாங்க விரும்பும் வாசகர்களுக்காக தேசாந்திரி பதிப்பகம் சிறப்பு சலுகை அறிவித்துள்ளது தேசாந்திரி இணையதளத்திலிருந்து புத்தகங்களை ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். தேசாந்திரி பதிப்பகத்தின் அலுவலகம் சாலிகிராமத்திலுள்ளது. நேரில் இந்த நூல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் இந்த ஆண்டு வெளியான புதிய நூல்கள்