அறிவிப்பு

டான்டூனின் கேமிரா ஆங்கிலத்தில்

சிறார்களுக்காக நான் எழுதிய டான்டூனின் கேமிரா நூலை கவிஞர் சசிகலா பாபு மற்றும் மேகலா உதயசங்கர் இணைந்துஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது. புத்தகக் கண்காட்சியில் இந்நூல் வெளியாகிறது.

ஆங்கிலத்தில்

எனது மலைப்பாம்பின் கண்கள் சிறுகதையை டாக்டர் சந்திரமௌலி ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார். அந்தக் கதை borderlessjournal என்ற இணைய இதழில் வெளியாகியுள்ளது இணைப்பு

தேசாந்திரி அரங்கு எண்

சென்னை நந்தனத்தில் நடைபெறுகிற 45வது புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது அரங்கு எண் 317 மற்றும் 318 ஐந்தாவது நுழைவாயில் வழியே வந்தால் அரங்கினைக் காணலாம். எல்லா நாட்களும் புத்தகக் கண்காட்சிக்கு வருவேன். சந்திக்க விரும்புகிறவர்கள் தேசாந்திரி பதிப்பகத்தின் அரங்கில் என்னைச் சந்திக்கலாம். எனது நூல்கள் யாவும் தேசாந்திரியில் கிடைக்கின்றன.

பாலம் வாசகர் சந்திப்பு

சேலத்தில் இயங்கி வரும் பாலம் புத்தகக் கடை சார்பில் ஏற்பாடு செய்யப்படும் பாலம் வாசகர் சந்திப்பு 400 கூட்டங்களைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் பிப்ரவரி 12 சனிக்கிழமை மாலை 7 மணிக்கு எனது மண்டியிடுங்கள் தந்தையே நாவல் குறித்த அறிமுகக் கூட்டம் நடைபெறவுள்ளது. இணையவழியாக நடைபெறும் இந்த நிகழ்வில் வெ.திருப்புகழ் ஐஏஎஸ் அவர்கள் நாவல் குறித்து உரை நிகழ்த்துகிறார். இதில் நானும் கலந்து கொள்கிறேன். முகநூல் நேரலையில் இந் நிகழ்வினைக் காணலாம்.

45 வது புத்தகக் காட்சி

சென்னை நந்தனத்தில் 45 வது புத்தகக் காட்சி பிப்ரவரி 16 முதல் மார்ச் 6 வரை நடைபெறவுள்ளது. காலை 11 முதல் இரவு 8 மணி வரை கண்காட்சி நடைபெறும் என பபாசி அறிவித்துள்ளது. தேசாந்திரி பதிப்பகம் இந்தக் கண்காட்சியில் பங்குபெறுகிறது. தேசாந்திரி பதிப்பகத்தின் அரங்கில் எனது நூல்கள் யாவும் கிடைக்கும்.

கற்பனையுலகின் வரம்பு.

 செர்பிய நாவலாசிரியரான மிலோராட் பாவிக் நேர்காணலின் ஒரு பகுதி . தமிழில்: லதா ராமகிருஷ்ணன். தானாஸிஸ்: கற்பனாதீதம் (fantasy) என்பது வாழ்க்கையின் உண்மைகளுக்கெதிராகப் போரிட ஒருவர் பயன்படுத்தும் ஆயுதமா? பாவிக்: மெய்யுலகிற்கும், கற்பனையுலகிற்கும் இடையே தெளிவான, திட்டவட்டமான வரம்பெல்லைகள் என்று எதுவும் கிடையாது. ஒரு சுதந்திர மனிதன் அந்த இரண்டு உலகங்களுக்கும் இடையேயான வரம்பெல்லைகளை அழுத்தி, அடக்கி வைக்கிறான். ஒரு எழுத்தாளனாக இந்த உணர்வு எனக்கு அடிக்கடி ஏற்படுகிறது. ஒரு எழுத்தாளனிடம் இடம் பெற்றிருக்க வேண்டிய மிக …

கற்பனையுலகின் வரம்பு. Read More »

வங்காளத்தில்

வங்காளத்தில் வெளியாகவுள்ள சிறந்த இந்தியச் சிறுகதைகள் தொகுப்பில் எனது ஐந்து வருட மௌனம் சிறுகதை இடம் பெற்றுள்ளது. இந்தக் கதையை மொழியாக்கம் செய்திருப்பவர் கிருஷ்ணசாமி.

தெலுங்கு மொழிபெயர்ப்பு

அவளது வீடு கதையின் தெலுங்கு மொழிபெயர்ப்பு ஈமாட்ட இணையபத்திரிகையில் வெளியாகியுள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் அவனி பாஸ்கர் இணைப்பு: ஆமெ இல்லு இந்த கதையினை பாராட்டிதெலுங்கின் முதுபெரும் இலக்கிய விமர்சகரும், மொழிபெயர்ப்பாளருமான திரு.கணேஸ்வர் ராவ் அவர்கள் எழுதிய குறிப்பு உங்கள் மொழிபெயர்ப்பு எங்கேயும் மொழிபெயர்ப்புபோல் தோன்றவில்லை, காரணம் மூலக்கதையின் நேர்த்தியாக இருக்கலாம். ‘Home'(இந்தப் பொருளில் தெலுங்கு சொல் இல்லை) என்ற கதைக்கருவை வைத்து உலக அளவில் கதைகள் இருக்கின்றன, புதினங்கள் இருக்கலாம. தீவிர பெண்ணீய எழுத்தாளராக இருந்திருந்தால் …

தெலுங்கு மொழிபெயர்ப்பு Read More »

வாழ்த்துகள்

2021-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் யுவபுராஸ்கார் விருது கார்த்திக் பாலசுப்பிரமணியன் எழுதிய நட்சத்திரவாசிகள் என்ற நாவலுக்காக வழங்கப்படுகிறது. இராஜபாளையத்தை சேர்ந்த கார்த்திக் பாலசுப்ரமணியன் மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார். நட்சத்திரவாசிகள் நாவல் மென்பொருள் துறை சார்ந்த வாழ்க்கையை சிறப்பாகப் பதிவு செய்துள்ளது. கார்த்திக் பாலசுப்ரமணியனுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.

நூலகம் என்பது

போஜே போஜன் நூலக மனிதர்கள் குறித்த வாசிப்பனுபவம். நூலக மனிதர்கள் : இதை ஒரு கட்டுரை தொகுப்பு என்று சொல்வதை விட வாசிப்பு குறித்த அனுபவங்களின் தொகுப்பு என்று தான் சொல்ல வேண்டும் புத்தகத்திற்குச் செல்வதற்கு முன்னாள் இந்தப் புத்தகம் பேசும் நூலகம் பற்றிய செய்திகள் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது . தமிழ்நாட்டைப் பொறுத்த வரை நூலகம் என்பது ஒரு வெற்றுச் செலவு என்கிற மனநிலை உள்ளது குறிப்பாகச் சில எல்லாம் தெரிந்த அறிவு …

நூலகம் என்பது Read More »