சென்னை புத்தகத் திருவிழா -1
கடந்த இரண்டு நாட்களாக சென்னை புத்தகத் திருவிழாவிற்குச் சென்று வந்தேன். நேற்று நல்ல கூட்டம். நிறைய இளம் வாசகர்களைக் காண முடிந்தது. தேசாந்திரி பதிப்பகத்தின் அரங்கு எண் 317 318ல் வாசகர்களைச் சந்தித்துப் புத்தகங்களில் கையெழுத்து போட்டுக்கொடுத்தேன். மண்டியிடுங்கள் தந்தையே நாவல் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒரு பதிப்பு விற்று முடிந்து அடுத்த பதிப்ப வெளியாகியுள்ளது. தினசரி மாலை நான்கு மணிக்குப் புத்தக் கண்காட்சிக்கு வருகை தருவேன். எட்டு மணி வரை இருப்பேன். வழியில் சந்தித்து …









