அறிவிப்பு

கனடாவில்

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணைய வழிக் கலந்துரையாடல் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘மண்டியிடுங்கள் தந்தையே’  என்ற நாவல் குறித்த பார்வை கருத்துரைப்பவர்:  ‘கனடா’ மூர்த்தி நாள்:      18-03-2022 வெள்ளிக்கிழமை  கனடா ரொறன்ரோ நேரம்:    இரவு 8:00 – 10:00 மணி (இந்தியா, இலங்கை நேரம்: 19 03 2022 சனிக்கிழமை காலை 5:30 – 7:30) Join Zoom Meeting Meeting ID: 847 7725 7162 Passcode: 554268

நாவலின் ஒவியம்

ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை நாவலில் வரும் சுப்புவை படம் வரைந்திருக்கிறார் கோபாலகிருஷ்ணா. ஒரு நாவல் எப்படி எல்லாம் கொண்டாடப்படுகிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நாவலைத் திரைப்படமாக எடுப்பதற்கு மூன்று இயக்குநர்கள் வேறுவேறு தருணங்களில் தொடர்பு கொண்டார்கள். ஆனால் எதுவும் சாத்தியமாகவில்லை. அதற்கான சரியான தருணம் விரைவில் வரக்கூடும் என நம்புகிறேன்

தெலுங்கில்

எனது சிற்றிதழ் சிறுகதை தெலுங்கில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் ஜி. பாலாஜி. நன்றி vaartha.com ஜி. பாலாஜி

காந்தியின் நிழலில் – அறிமுகக் கூட்டம்

காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டம் சார்பில் எனது காந்தியின் நிழலில் நூல் குறித்து அறிமுகக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் முனைவர் ம. பிரேமா அண்ணாமலை உரையாற்றுகிறார். சென்னை தியாகராயநகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயாவினுள் நிகழ்ச்சி நடைபெறுகிறது Google Meet வழியே நேரலையிலும் பங்குபெறலாம். இணைப்பு தொடர்பு எண்கள் 97907408869952952686 நாள்: 09.03.2022 நேரம்: மாலை .6 45

நன்றியுடன்

நேற்றுடன் புத்தகக் கண்காட்சி நிறைவுபெற்றது. கடந்த மூன்று நாட்களாகப் பெருந்திரளாகக் கூட்டம். நிறைய இளைஞர்கள். பெண்கள். அவர்கள் பைநிறைய புத்தகங்களுடன் வலம் வருவதைக் காண மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்த ஊரடங்கு வாழ்க்கை அனைவரின் கவனத்தையும் புத்தகங்களின் மீது திருப்பியிருப்பதன் விளைவாகவே இதனைக் கருதுகிறேன். இப்படி ஒரு அறிவுத் திருவிழாவிற்கு அனுமதி தந்து, புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடக்க முதற்காரணமாக இருந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி புத்தகக் …

நன்றியுடன் Read More »

சௌமியின் கசப்பு

ஓவியர் கே.விக்னேஷ்வரன். எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய உடலின் அலைகள் என்னும் சிறுகதையை வாசித்தேன். மிகவும் அருமை. இக்கதையின் கரு சிறியதுதான், ஆனால் அவர் இந்தக் கதையைக் கையாண்ட விதம் மிகவும் லாபகமானது. இக்கதையில் ஒரு மனிதன் தொழிற்சாலையில் பணி புரிகிறான். திருமணமாகாதவன். மதுரையைச் சார்ந்தவன் பணி நிமித்தம் காரணமாக வெளிமாநிலத்தில் பணிபுரிகிறான். எப்போது தனது சொந்த ஊருக்குப் பணியிடைமாற்றம் கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருக்கிறான். ஒரு சமயத்தில் ரயில் பயணம் செய்யும்போது தனக்கு எதிரே உள்ள …

சௌமியின் கசப்பு Read More »

அன்பும் நன்றியும்.

புத்தகக் கண்காட்சியில் ஏன் நாற்காலியில் அமர்ந்திருக்கிறீர்கள். உடல் நலமில்லையா என்று பலரும் அன்போடு விசாரிக்கிறார்கள். மூட்டு அழற்சி காரணமாக எனது வலது முழங்காலில் வீக்கம் ஏற்படுகிறது. அதனால் நாற்காலியில் அமர்ந்து வாசகர்களைச் சந்திக்கிறேன். அதைப் புரிந்து கொள்ளாமல் சிலர் தவறாக நினைத்து கண்டனக்குரல் எழுப்பி வருகிறார்கள். நின்றபடியே புத்தகங்களில் கையெழுத்துப் போடுவது சிரமமானது. மேலும் தொடர்ந்து நிற்பதால் கால் வீக்கம் அதிகமாகிறது என் அருகிலே இரண்டு நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. விரும்புகிறவர்கள் அதில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். …

அன்பும் நன்றியும். Read More »

டால்ஸ்டாய் ஓவியம்

எனது மண்டியிடுங்கள் தந்தையே நாவலின் முகப்பிலுள்ள டால்ஸ்டாய் ஓவியத்தை 11வயதான சித்தார்த் வரைந்து அனுப்பியிருக்கிறான். சித்தார்த்திற்கு எனது மனம் நிறைந்த அன்பும் வாழ்த்துகளும்

அக்ஸின்யா

எனது மண்டியிடுங்கள் தந்தையே நாவலில் வரும் அக்ஸின்யாவை ஓவியமாக வரைந்திருக்கிறார் சுரேஷ். நாவலைப் படித்த நண்பர் வேலூர் லிங்கம் அக்ஸின்யாவை யாராவது ஓவியமாக வரைந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். அவரது விருப்பம் இன்று நிறைவேறியுள்ளது. சுரேஷிற்கு மனம் நிறைந்த நன்றி