அறிவிப்பு

கோவையில் உரையாற்றுகிறேன்

புகழ் பெற்ற பட்டிமன்றப் பேச்சாளர் சாலமன் பாப்பையா தனது பட்டிமன்ற நிகழ்ச்சிகளின் மூலம் உலகெங்கும் வாழும் தமிழர்களின் மனதில் தனியிடம் பிடித்தவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக இருந்தவர். சங்க இலக்கியம் குறித்து ஆழ்ந்து அறிந்தவர். இவரது தமிழ்பணியைப் போற்றும் விதமாக 2021ல் பத்மஸ்ரீ விருது அளிக்கபட்டது. அவரது நகைச்சுவை உணர்வும் , சமூக அக்கறையும் மிகுந்த பாராட்டிற்குரியது நீண்டகாலமாக அவரை அறிவேன். சிறந்த பண்பாளர். காலவரிசைப்படுத்தி, புதிய உரையுடன் இவர் வெளியிட்ட ‘புறநானூறு’ – …

கோவையில் உரையாற்றுகிறேன் Read More »

திருப்பூர் புத்தகத் திருவிழாவில்

திருப்பூர் புத்தகத் திருவிழா ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 24 வரை நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது ஏப்ரல் 16 சனிக்கிழமை மாலை கண்காட்சி வளாகத்தில் உரையாற்றுகிறேன் தலைப்பு : பசியின் கதை அன்று மாலை 4 மணி முதல் தேசாந்திரி பதிப்பக அரங்கில் இருப்பேன். விருப்பமான நண்பர்கள். வாசகர்கள் சந்திக்கலாம் •••

புரவி முதலாம் ஆண்டுவிழா

வாசக சாலையின் சார்பில் வெளியிடப்படும் புரவி இதழின் முதலாம் ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன். இந்த நிகழ்வு ஏப்ரல் 9 சனிக்கிழமை மாலை தி.நகரிலுள்ள தக்கர்பாபா வளாகத்தினுள் நடைபெறுகிறது

மாநில கல்விக் கொள்கை குழு

தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது “தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை இந்த அரசு அமைக்கும்’’ எனத் தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாகப் புதிய குழுவினை, மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இக்குழுவின் தலைவராக டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் …

மாநில கல்விக் கொள்கை குழு Read More »

யுவபுரஸ்கார் விழா

நேற்று நடைபெற்ற சாகித்திய அகாதமியின் யுவபுரஸ்கார் விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினேன். இந்திய அளவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை ஊடகங்கள் கண்டுகொள்ளவேயில்லை. நிகழ்ச்சி நடக்கும் இடம் மற்றும் நாள் பற்றி பலருக்கும் தெரியவில்லை. மிகவும் குறைவான கூட்டம். புகைப்படங்கள் நன்றி : ஸ்ருதி டிவி

கிரா ஓவியம்

கி.ராவின் கன்னிமை கதை குறித்து எழுதிய பதிவை வாசித்த சேது வேலுமணி நாச்சியாரை ஓவியமாக வரைந்திருக்கிறார். அவருக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்

சாகித்திய அகாதமி விழா

சாகித்திய அகாதமியின் யுவபுரஸ்கார் விருது வழங்கும் நிகழ்வு சென்னையில் மார்ச் 30 மாலை நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன் வடபழனியிலுள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரி அரங்கில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது

கதாவிலாசம் ஆங்கிலத்தில்

தமிழக அரசின் முன்னெடுப்பு காரணமாக சிறந்த தமிழ் படைப்புகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் சார்பில் இந்த ஆண்டு வெளியான நூல்களில் எனது கதாவிலாசமும் இடம்பெற்றுள்ளது. கதாவிலாசம் ஆங்கிலப் பிரதிகளை வேண்டுகிறவர்கள் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளவும்