உலகெங்கும் விரியும் தமிழ்
இன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் உலகப் புத்தக தினம் குறித்து சிறப்பு கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அதில் தமிழின் இளம் சிறுகதையாசிரியர்கள் மற்றும் அயலில் வாழும் முக்கிய தமிழ் படைப்பாளிகள் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்
இன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் உலகப் புத்தக தினம் குறித்து சிறப்பு கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அதில் தமிழின் இளம் சிறுகதையாசிரியர்கள் மற்றும் அயலில் வாழும் முக்கிய தமிழ் படைப்பாளிகள் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்
P பொன் மாரியப்பன் தூத்துக்குடி டால்ஸ்டாய் என்பவர் யார்? நான் ஏன்? அவரைத் தெரிந்துகொள்ளவேண்டும், பல கேள்விகளோடு நாவலை வாசிக்க ஆரம்பித்தேன். டால்ஸ்டாய் பற்றி நான் வாசித்த முதல் நாவல் இதுதான். முதல் தொடக்கமே உள்ளம் உருக வைத்தது. முதல் அத்தியாயம் முதல் கடைசி அத்தியாயம் வரை டால்ஸ்டாய் என் பக்கம் இருப்பதை உணர்ந்து கொண்டேன். அந்த வயது முதிர்ந்த டால்ஸ்டாயின் அட்டை படம் புதிய வாசனையாக என்னைச் சூழ்ந்தது. நான் வாசிக்கும் போது அவரும் வாசித்தார். …
கலை கார்ல்மார்க்ஸ் திருவாரூர் ••• நிலவழி குறித்த வாசிப்பனுபவம் இந்நூலில் பத்துக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இக்கட்டுரைகள் சமகால இந்திய இலக்கியத்தின் தனிப்பெரும் ஆளுமைகளையும் அவர்களது படைப்புகளின் முக்கியத்துவத்தையும் பற்றி எடுத்துக் கூறுகின்றது. முதல் கட்டுரையில் ஞானபீட பரிசு பெற்ற அசாமிய எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமி அவர்களின் ‘தென் காமரூபத்தின் கதை’ என்ற நாவல் பற்றி விளக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திரா கோஸ்வாமி பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் வெளியிட்ட நாவல்கள் அதன் பொருட்டு அவருக்கு வந்த …
சுவாமிநாதன் பாலசுப்ரமணியன் தனது அலுவல் காரணமாகத் தொடர் பயணங்களை மேற்கொள்கிறவர். இவர் எனது தேசாந்திரி புத்தகத்தை விருதுநகர் ரயில் நிலையத்தில் படிக்கத் துவங்கி மதுரை, கொச்சி, கொல்லம், பெங்களூரு போன்ற இடங்களுக்குச் செல்லும் போதெல்லாம் படித்து டெல்லி மெட்ரோவில் முடித்திருக்கிறார். பயண நூலை இப்படிப் படிப்பது மகிழ்ச்சி தருகிறது. சுவாமிநாதனுக்கு என் அன்பும் வாழ்த்துகளும்.
சென்னை மாநிலக்கல்லூரியில் ஏப்ரல் 22 வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு நாம் ஏன் இலக்கியம் வாசிக்க வேண்டும் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன். இதைத் தொடர்ந்து ஐந்து வருட மௌனம் என்ற எனது புதிய சிறுகதைத் தொகுப்பு குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல் நடைபெறுகிறது நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் இரா. இராமன் தலைமை தாங்குகிறார்.
தியேட்டர் லேப் குழுவின் 16வது ஆண்டுவிழாவை முன்னிட்டு அதன் இயக்குநர் ஜெயராவ் மே 7 மற்றும் 8 தேதிகளில் நாடகவிழா ஒன்றினை ஏற்பாடு செய்திருக்கிறார். சென்னை பெசன்ட் நகரிலுள்ள ஸ்பேசஸ் அரங்கில் இந்த நாடகங்கள் நடைபெற இருக்கின்றன. இந்த விழாவில் பியோதர் தஸ்தாயெவ்ஸ்கியின் Notes from Underground யை மையமாகக் கொண்டு நான் எழுதிய மரணவீட்டின் குறிப்புகள் நாடகம் நிகழ்த்தப்படுகிறது.
16.4.22 சனிக்கிழமை திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன் புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைக்க இயலவில்லை. ஆகவே மீனாட்சி புக்ஸ் அரங்கில் மாலை நாலு மணி அளவில் இருப்பேன். விருப்பமான நண்பர்கள், வாசகர்கள் சந்திக்கலாம் மாலை ஆறுமணிக்கு பசியின் கதை என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன்
நேற்று எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றி. தூத்துக்குடியில் தனது சலூனில் நூலகம் அமைத்துள்ள P பொன்மாரியப்பன் எனது பிறந்தநாளுக்காக ஊர்முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி தனது அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருடன் தொலைபேசியில் பேசினேன். “எழுத்தாளர்களின் பிறந்த நாளை ஊரே கொண்டாடணும். என்னாலே முடிஞ்சதை நான் செய்திருக்கிறேன்“ என்றார். வாசிப்பின் வழியே உருவான இது போன்ற மனிதர்களே நாம் கொண்டாட வேண்டியவர்கள். ஒரு நண்பர் ரிஷிகேஷில் எனக்காக பிரார்த்தனை செய்து …