புதிய சிறுகதை
டிசம்பர் மாத அந்திமழை இதழில் எனது புதிய சிறுகதை மலைப்பாம்பின் கண்கள் வெளியாகியுள்ளது.
ராகவ் வெங்கடராமன் எனது படைப்புகள் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறந்த புகைப்படங்களை எடுத்திருக்கிறார். அவர் எடுத்த இரண்டு புகைப்படங்கள் மிக அழகாக உள்ளன நன்றி ராகவ் வெங்கடராமன்
Aleph Book Company தமிழின் முப்பது சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து THE GREATEST TAMIL STORIES EVER TOLD என ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கிறார்கள் சுஜாதா விஜயராகவன் மற்றும் மினி கிருஷ்ணன் இந்தத் தொகுப்பினைத் தேர்வு செய்து உருவாக்கியிருக்கிறார்கள். இந்தத் தொகுப்பில் எனது சிறுகதை புறாப்பித்து இடம்பெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற எனது படைப்புகளுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிறைந்த பார்வையாளர்கள். காலை பத்து மணிக்குத் துவங்கிய நிகழ்வு நிறைவுபெற இரவு எட்டுமணியாகிவிட்டது. எனது படைப்புகள் குறித்துப் பேசியவர்கள் ஆழ்ந்து படித்துச் சிறப்பாக உரையாற்றினார்கள். படைப்பின் நுண்மைகளை அவர்கள் எடுத்துக்காட்டிய விதம் மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. காலை அமர்வில் பேசிய நீதி நாயகம் சந்துரு அவர்கள் இடக்கை நாவல் பற்றிச் சிறப்பாகப் பேசினார். எனது ஆசான் எஸ்.ஏ.பெருமாள் அவர்கள் எனது படைப்புகள் மற்றும் …
நாளை எனது படைப்புகள் குறித்து ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வினை யாவரும் பதிப்பகத்துடன் இணைந்து நற்றுணை அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. என்னைத் தொடர்ந்து வாசித்து வரும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து இப்படி ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருப்பது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கல்விப்புலங்களில் எனது படைப்புகள் குறித்த கருத்தரங்குகள் நிறையவே நடந்துள்ளன. எனது படைப்புகளை ஆராய்ந்து இருபதுக்கும் மேற்பட்டவர்கள் எம்.பில் பட்டம் பெற்றிருக்கிறார்கள். ஆறு பேர் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். பொதுத்தளத்திலும் நிறைய விமர்சனக் …
நாளை (13/11/2021) மாலை பபாசி வழங்கும் கலைஞர் பொற்கிழி விருது விழா நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு விருதுவிழா நடைபெறாத காரணத்தால் 2020 மற்றும் 2021ம் ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்வு இணைந்து நடைபெறுகிறது. இந்நிகழ்வில் 2021ம் ஆண்டிற்கான உரைநடை பிரிவில் விருது பெறுகிறேன் நாள் 13.11.2021நிகழ்வு நடைபெறும் இடம் வாணி மஹால்103 ஜி.என். செட்டி சாலை தி.நகர். சென்னை 17நேரம் மாலை 6 மணி இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்
இந்தியாவின் தேசிய கீதத்தை மகாகவி தாகூர் பாடும் காணொளி ஒன்றைக் கண்டேன். அவர் எழுதிய தேசியகீதத்தை அவரே பாடிக் கேட்பது அபூர்வமான தருணம். தாகூர் மெய்மறந்து பாடும் அழகும் ஜெயகே என உணர்ச்சிப்பூர்வமாகச் சொல்வதும் மனதைத் தொடுவதாக இருந்தது. நான் பள்ளியில் படித்த காலத்தில் மாணவர்களே ஜன கண மன சேர்ந்து பாட வேண்டும். வெறுமனே உதடு அசைத்தால் ஆசிரியர் கண்டுபிடித்துவிடுவார். ஆகவே மாணவர்கள் தேசியகீதத்தை மனப்பாடம் செய்து வைத்திருப்பார்கள். பள்ளி ஆண்டுவிழாவின் போது மட்டும் மாணவிகள் …
எனது படைப்புலகம் குறித்து நடைபெறவுள்ள ஒரு நாள் கருத்தரங்கின் நிகழ்வு நிரல். நவம்பர் 14 காலை பத்து மணி முதல் மாலை ஆறு மணி வரை இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்
நவம்பர் 14 ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை எனது படைப்புகள் குறித்து ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வினை யாவரும் பதிப்பகம் மற்றும் நற்றுணை கலந்துரையாடல் அமைப்பு இணைந்து நடத்துகிறது. இந்த நிகழ்வு மயிலாப்பூரிலுள்ள நிவேதனம் அரங்கில் நடைபெறுகிறது. இந்த அரங்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் Yellow Pages அருகில் அமைந்துள்ளது. (234, Venkatachalam St, Dwarka Colony, Mylapore, Chennai – 600004) அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி …