அறிவிப்பு

அஞ்சலி

பெருமதிப்பிற்குரிய தோழரும் மதுரைக்கிழக்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நன்மாறன் இன்று காலமானார். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவரை அறிவேன். எளிமையும் நேர்மையும் கொண்ட அற்புதமான தோழர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சார்பில் 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 10 ஆண்டுகள் பதவியிலிருந்தார். அந்த நாட்களில் மதுரை மக்களின் மேம்பாட்டிற்காகப் பல்வேறு நலத் திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார். நன்மாறனின் மேடைப்பேச்சில் நகைச்சுவையும் சிந்தனை தெறிப்பும் ஒன்று கலந்திருக்கும். …

அஞ்சலி Read More »

முழுநாள் கருத்தரங்கம்

எனது படைப்புகள் குறித்து ஒரு நாள் கருத்தரங்கம் நவம்பர் 14 ஞாயிறு (14.11.2021) சென்னை மயிலாப்பூரில் உள்ள நிவேதனம் அரங்கில் நடைபெறவுள்ளது. தேர்ந்த வாசகர்களே இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த முழுநாள் கருத்தரங்கில் எனது சிறுகதைகள். குறுங்கதைகள், நாவல். உலக இலக்கியக் கட்டுரைகள். வரலாறு சார்ந்த கட்டுரைகள். வாழ்வியல் கட்டுரைகள். சிறார் புனைவுகள் எனப் பல்வேறு பிரிவுகளில் உரைகள் நிகழ்த்தபட இருக்கின்றன. நிகழ்வு குறித்த முழுவிபரங்களை இரண்டு நாட்களில் வெளியிடுகிறேன் இந்த நிகழ்வை முன்னிட்டு மாலை …

முழுநாள் கருத்தரங்கம் Read More »

சீனன் சாமி

வனம் இணைய இதழில் சித்துராஜ் பொன்ராஜ் சீனன் சாமி என்ற சிறுகதையை எழுதியிருக்கிறார். சமீபத்தில் நான் படித்த மிக முக்கியமான சிறுகதை. சிங்கப்பூர் வரலாற்றையும் கடந்த கால நினைவுகளையும் மடிப்பு மடிப்புகளாகக் கொண்டு வியப்பூட்டும் ஒரு நிகழ்வைச் சிறுகதையாக்கியிருக்கிறார். மலைப்பாம்ப வச்சுக் கும்பிட்டா அதிர்ஷ்டம்னு சீனனுங்க சொல்லுவானுங்க,” என்றான் வீரா என ஒருவன் மலைப்பாம்பை பிடித்துக் கொண்டு வருவதில் கதை துவங்குகிறது. மலைபாம்பை என்ன செய்வது என்பதைப்பற்றிய உரையாடலின் ஊடாகவே அவர்கள் நிரந்தர வேலையில்லாத மலேசிய கேஷுவல் …

சீனன் சாமி Read More »

உயிர்மை 200

உயிர்மை 200வது இதழ் வெளியாகியுள்ளது. தமிழின் முக்கிய படைப்பாளிகள் அனைவரும் கைகோர்த்து வந்துள்ள இந்த இதழ் குறிப்பிடத்தக்கது. இதில் வெளியாகியுள்ள தேவதச்சனின் கவிதைகள் அபாரமானவை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு எனது சிறுகதை உயிர்மை இதழில் வெளியாகியுள்ளது. மனுஷ்யபுத்திரன் என்றும் என் அன்பிற்குரிய நண்பர். அவர் தொலைபேசியில் அழைத்துக் கதை கேட்டதும் உடனே அனுப்பி வைத்தேன். எனது கதைக்கு மனோகர் வரைந்துள்ள ஒவியம் அத்தனை பொருத்தமாக உள்ளது. மனோகருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்.

வாழ்த்துகள்

கனலி இணையதளம் கலை இலக்கியம் சார்ந்து சிறப்பான முன்னெடுப்புகளைத் தொடர்ந்து செய்து வருகிறது. இணைய இதழுடன் அச்சில் கனலி இருமாத இதழாக வெளிவரவுள்ளது. கனலி விக்னேஷ்வரன் உள்ளிட்ட நண்பர்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்

யாமம் – தெலுங்கு மொழிபெயர்ப்பு

எனது யாமம் நாவல் தெலுங்கில் வெளியாகியுள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் திருப்பதியைச் சேர்ந்த ஜில்லேல பாலாஜி. நூலின் பிரதி வேண்டுவோர் தேசாந்திரி பதிப்பகத்தை தொடர்பு கொள்ளவும் விலை ரூ 250 தேசாந்திரி பதிப்பகம் டி&1, கங்கை அப்பார்ட்மெண்ட், 110, 80 அடி ரோடு, சத்யா கார்டன், சாலிக்கிராமம், சென்னை – 600 093, தொலைபேசி: 044 2364 4947, +91 96000 34659. desanthiripathippagam@gmail.com www.desanthiri.com

மலையாளத்தில்

எனது யாமம் நாவல் மலையாளத்தில் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் வாசிக்க விரும்புகிறவர்கள் இங்கே பெறலாம் https://keralabookstore.com/book/yamam/15009/

நோபல் பரிசு

இந்த ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு தான்சானியா எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. A Companion to Salman Rushdie என இவர் சல்மான் ருஷ்டி பற்றிய நூல் ஒன்றைத் தொகுத்திருக்கிறார். அதைப் படித்திருக்கிறேன். மற்றபடி இவரது நாவல்கள் எதையும் வாசித்ததில்லை. இந்த ஆண்டு நோபல் பரிசு யாருக்கு கிடைக்கும் என நேற்று வரை பத்திரிக்கைகள் கணித்த எந்தப் பட்டியலிலும் இவரது பெயர் இல்லை. 2005ம் ஆண்டின் புக்கர் பரிசு பட்டியலில் இவரது நாவல் இடம்பெற்றிருந்திருக்கிறது. …

நோபல் பரிசு Read More »