அறிவிப்பு

சிறப்பு சலுகை

எனது அனைத்து நூல்களுக்கும் தேசாந்தரி பதிப்பகம் சிறப்பு சலுகை அறிவித்துள்ளது. இருபது சதவீதத் தள்ளுபடியில் நீங்கள் ஆன்லைன் மூலம் பெறலாம் Desanthiri Pathippagam : D1 ,Gangai apartments, 80 Feet Road, Sathya Garden, Saligramam, Chennai, Tamil Nadu 600093 Phone: 044 2364 4947 Mobile 9789825280 https://www.desanthiri.com/

கலைஞர் பொற்கிழி விருது

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்(பபாசி) சார்பில் வழங்கப்படும் கலைஞர் பொற்கிழி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கவிதை, புனைவிலக்கியம், உரைநடை, நாடகம் ஆகியவற்றில் சிறந்த 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் எழுதும் சிறந்த ஒருவருக்கும் ஒரு லட்சம் பணமும் பாராட்டு பத்திரமும் அளித்துக் கௌரவிக்கப்படுகிறது. 2021-ம் ஆண்டுக்கான விருதாளர்களில் உரைநடைக்காக எனக்குக் கலைஞர் பொற்கிழி விருது அறிவிக்கபட்டுள்ளது இதற்காக வாழ்த்து தெரிவித்த நண்பர்கள் வாசகர்கள் பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் நன்றி தேர்வு செய்யப்பட்ட …

கலைஞர் பொற்கிழி விருது Read More »

புத்தகம் சுவாசிக்கிறது

தானாஸிஸ்: நீங்கள் ஒரு நாவலை எழுதிக் கொண்டிருக்கும் போது, முந்தைய நாள் எங்கே நிறுத்தினீர்களோ அங்கிருந்தே தான் எப்பொழுதும் தொடர ஆரம்பிப்பீர்களா? பாவிக்: இல்லை. நான் ஒருபோதும் இந்த விதமாக எழுதுவதில்லை. வெவ்வேறான கதை நிகழ்வுகள் இருக்கின்றன. மெதுவாக அவையெல்லாம் ஒரு வரைச்சட்டகத்திற்குள் பொருந்திக் கொள்கின்றன. மனக் கணக்கு என்ற ஒன்றை மட்டும் சார்ந்து எழுதுகிறேன் – ஒரு நாவலுக்கென அதற்கேயுரிய வாழ்க்கை இருக்கிறது (அவர் ஒரு சிறிய, பச்சை நிற நோட்டுப்புத்தகத்தைத் தனது காற்சட்டைப் பையிலிருந்து …

புத்தகம் சுவாசிக்கிறது Read More »

சினிமா பார்வையாளர்கள்

Italian Cinema Audiences என்றொரு புத்தகம் படித்தேன். 1950 -70களில் இத்தாலியின் சினிமா பார்க்கும் பழக்கம் எப்படியிருந்தது. எது போன்ற படங்கள் வரவேற்பு பெற்றன. சினிமா தியேட்டர்கள் எவ்வளவு இருந்தன. அன்று திரைப்படம் பார்த்த அனுபவம் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள். திரைப்பட விநியோகத்திலிருந்த நடைமுறைகள் இவற்றை விரிவாக ஆய்வு செய்து வெளியிட்டிருக்கிறார்கள். இத்தாலியில் நடந்த விஷயங்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெரிய வேறுபாடில்லை. திரையரங்கிற்குச் சென்று படம் பார்ப்பதை மிகச்சிறந்த மகிழ்ச்சியாக இத்தாலியர்கள் நினைத்தார்கள். சினிமா பாரடிஷோ திரைப்படம் …

சினிமா பார்வையாளர்கள் Read More »

கண்கள் சொல்லாதது

மா. சண்முகசிவா எழுதிய ஓர் அழகியின் கதை வல்லினம் இணைய இதழில் வெளியாகியுள்ளது. கதையின் வடிவமும் சொல்லப்பட்ட விஷயமும் சொல் முறையும் மிக அழகாக உள்ளது. சமீபத்தில் நான் படித்த சிறந்த கதை இதுவென்பேன். ஜூலியின் கதாபாத்திரம் கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும் பாம்பைக் காண்பது போலவே இருக்கிறது. பாம்பின் கண்களை இப்படி உற்றுப் பார்த்திருக்கிறேன். அது சட்டென நம்மைக் கவ்வி இழுத்துவிடும். இந்தக் கதையில் வரும் ஜூலி துயரத்தின் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்கும் தேவதையைப் போலிருக்கிறாள். கடந்த …

கண்கள் சொல்லாதது Read More »

ராஜபாளையத்தில்

கடந்த வாரம் ஒரு திருமண நிகழ்விற்காக ராஜபாளையம் சென்றிருந்தேன். நண்பர் பொன்னுச்சாமி மாலையில் சிறிய சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். நிறைய இளைஞர்கள். இரண்டு மணி நேரம் நடந்த சந்திப்பில் வாசிப்பு. பயணம், வரலாறு என நிறைய கேள்விகேட்டார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு மொழிபெயர்ப்பாளர் சா. தேவதாஸ் அவர்களையும் சுதந்திர சிந்தனையை சார்ந்த நரேந்திரகுமார் மற்றும் நண்பர்களைச் சந்தித்து பேசியது மகிழ்ச்சி தந்தது. திருமண நிகழ்வு முடிந்தவுடன் ராஜபாளையத்தில் நடைபெற்று வந்த மீனாட்சி புக் ஷாப் நடத்தும் …

ராஜபாளையத்தில் Read More »

மலையாளத்தில்

பஷீரின் திருடன் என்ற எனது குறுங்கதையை ஷாஜி மலையாளத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். Truecopythink இணைய இதழில் இந்தக் கதை வெளியாகியுள்ளது. நன்றி ஷாஜி. https://webzine.truecopy.media/packet-41

பாலபுரஸ்கார்

எழுத்தாளர் யெஸ்.பாலபாரதி எழுதிய ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ சிறார் நூலுக்கு  சிறுவர் இலக்கியத்திற்கான பால சாகித்ய புரஸ்கார் விருது கிடைத்துள்ளது. பாலபாரதிக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள் புத்தகம் வெளியிட்ட வானம் மணிகண்டனுக்கு பாராட்டுகள்.

கிரா விருது

2021ம் ஆண்டுக்கான கி.ரா விருது பெறும் அன்பு நண்பர் எழுத்தாளர் கோணங்கிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் நேற்று அவருடன் தொலைபேசியில் பேசினேன். கோணங்கியோடு பல ஆண்டுகள் ஒன்றாகச் சுற்றித்திரிந்த நாட்கள் நினைவில் வந்து போனது. கோணங்கி உற்சாகமாகப் பேசினார். அடுத்த வாரம் கோவில்பட்டிக்கு நேரில் சென்று சந்திக்க இருக்கிறேன். கிரா பெயரில் கோணங்கி கௌரவிக்கப்பட்டது மிகப் பெரிய மகிழ்ச்சி. நாளை வெளிவரும் டைம்ஸ் ஆப் இந்தியா இதழில் அவரைப் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். ••