அறிவிப்பு

தானே உலரும் கண்ணீர்

கிஷோர் குமார்  எஸ். ராமகிருஷ்ணனின் இடக்கை நாவல் குறித்து. *** சமூகத்தின் கடைக்கோடி மனிதர்களையும், அதிகாரத்தால் அநீதி இழைக்கப்பட்டவர்களையும் பற்றி தமிழ் இலக்கியம் தொடர்ந்து பேசிக்கொண்டு வந்துள்ளது.  இக்கருவை வரலாற்றுக் காலத்தில் வைத்து ஆராய்கிறது ராமகிருஷ்ணனின் இடக்கை நாவல். அத்தோடு மட்டும் இந்நாவலைக் குறுக்கிக்கொள்ள முடியாதபடி வாசிப்பால் விரித்தெடுக்க வேண்டிய பலதளங்களையும் இந்நாவல் தொட்டுச் சென்றுள்ளது. முகலாய பேரரசரான அவுரங்கசீபின் இறுதிக் காலத்தில் அனைத்து வரலாற்று நாயகர்களும், மாமன்னர்களும், புரட்சி வீரர்களும் அனுபவிக்கும் அந்த கொடுந் தனிமையை …

தானே உலரும் கண்ணீர் Read More »

பிரான்சில் தமிழ் இலக்கிய விழா

பிரான்சு வரலாற்றில் முதன்முறையாக பாரீசுக்கு அருகில் Centre- Val de Loire மாகாணத்தில் இரண்டு நகரங்களில் (Jargeau & Châteaudun) ‘ Tu Connais la nouvelle எனும் இலக்கிய அமைப்பு இருவாரங்கள் தமிழ் நவீன இலக்கியம், தமிழ் பண்பாடு சார்ந்த விழாவை எடுக்கிறார்கள். Editions Zulma என்ற பிரெஞ்சு பதிப்பாளர் இந்த நிகழ்வினை ஒருங்கிணைக்க எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவை சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறார்கள் அவருடன் Yanne Dimai என்கிற பிரெஞ்சு படைப்பாளியும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார். …

பிரான்சில் தமிழ் இலக்கிய விழா Read More »

அஞ்சலி

தமிழ் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணன் மறைந்துவிட்டார். இறுதி நிகழ்விற்குப் போக முடியவில்லையே எனக் கண்ணீர் பெருகுகிறது கரிசல் மண்ணிலிருந்து உருவான படைப்பாளிகள் அனைவருக்கும் அவரே பேராசான். ஞானத்தந்தை. நிகரற்ற எழுத்தாளராக மட்டுமின்றி விவசாயிகளின் பிரச்சனைக்காகக் களத்தில் இறங்கிப் போராடி சிறை சென்ற போராளியாகவும் இருந்தவர் . கரிசல் நிலத்தின் தொல் நினைவுகள், வரலாறு யாவும் அவர் மூலம் எழுத்து வடிவம் பெற்றன. நாட்டுப்புறக்கதைகளையும் பாடல்களையும் தேடிச் சேகரித்து ஆய்வு செய்து ஆவணப்படுத்திய ஆய்வாளர். கரிசல் வட்டார அகராதியை …

அஞ்சலி Read More »

கலைஞனின் காத்திருப்பு

கைதட்டுகள் போதும் –  சிறுகதை வாசிப்பனுபவம் தயாஜி – மலேசியா கதை தொடங்கிய இடத்திலேயே முடிகிறது. அதற்குள் ஒரு கலைஞனின் இழப்புகளை பதிவு செய்துள்ளார் எஸ்.ரா. ‘கைதட்டுகள் போதும்’ என்று தலைப்பை வாசித்து கதைக்குள் நுழைந்தேன். ஆனால், ‘கைதட்டல் போதுமா?’ என்கிற கேள்வியோடு சிறுகதையை வாசித்து  முடித்தேன். கலை மீதான ஆர்வம் ஏதோ ஒரு வயதில் எவருக்கும் ஏற்படக்கூடியதுதான். சிலர் அதற்காகவே பிறந்தவர்கள் போலவும் பிரகாசிப்பார்கள். சிலர் துரதிஷ்டவசமாக காணாமல் போய்விடுவார்கள்.  இப்படி பிரகாசிப்பவர்களும்  காணாமல்  போகிறவர்களும் …

கலைஞனின் காத்திருப்பு Read More »

ஆனந்த விகடனில்

இன்று வெளியாகியுள்ள ஆனந்த விகடனில் காருகுறிச்சி அருணாசலம் அவர்கள் குறித்த சிறப்புக் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறேன்.

உடலின் அலைகள்

. பினா பாஷ்( Pina Bausch. )உலகப்புகழ் பெற்ற நடனக்கலைஞர். இவரது Orpheus and Eurydice – Dance opera என்ற நடனநிகழ்வினைப் பற்றிய படத்தைப் பார்த்தேன். மிகச்சிறப்பான அனுபவமாக இருந்தது. 1994ல் பினா பாஷ் சென்னையில் நடனநிகழ்ச்சி நடத்திய போது நேரில் கண்டிருக்கிறேன். மேடையமைப்பும் ஒளியும் நடனமிடும் கலைஞர்களின் உடல்திறனும் வியப்பில் ஆழ்த்தியது. நடனக்கலைஞர் சந்திரலேகாவின் புதுவகை நடனங்களைக் கண்டு ரசித்திருந்த எனக்குப் பினா ஒப்பற்ற சாதனையாளராகத் தோன்றினார். அவர் சந்திரலேகாவின் நண்பர். இருவரும் இணைந்து …

உடலின் அலைகள் Read More »

காலம் சொல்லும் பெயர்கள்

சென்னையும் நானும் காணொளித் தொடரின் மூன்றாவது பகுதி வெளியாகியுள்ளது. சென்னையின் இருமுக்கிய கல்விநிலையங்களைப் பற்றிய நினைவுகளும் வரலாற்றுச் செய்திகளும் கொண்ட பகுதியிது. காலம் சொல்லும் பெயர்கள்

‘ஆதலினால்’ – வாசிப்பனுபவம்

முனைவர் ப. சரவணன், மதுரை எளிமையை விரும்புபவர்களும் எளியோரை நேசிக்கத் தெரிந்தவர்களும் நிச்சயமாக வலியோர்தான். எளியோரின் உலகைப் புரிந்துகொண்டு, அவர்களுக்காக நம்மிடம் வாதாடும் மூத்த வழக்குரைஞராகத்தான் எழுத்தாளர் உயர்திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் ‘ஆதலினால்’ என்ற இந்தப் புத்தகத்தின் வழியாக எனக்குத் தெரிகிறார். அனைவரையும் தன்னில் ஒருவராகக் காணும் கருணைமிக்கவர்களுக்கே அவர்களைப் பற்றி விமர்சிக்கும் உரிமையும் அவர்களை அரவணைத்து அவர்களுக்கு ஆறுதல் கூறும் தகுதியும் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். நம்மைச் சுற்றி எத்தனை எத்தனை எளியவர்கள்! …

‘ஆதலினால்’ – வாசிப்பனுபவம் Read More »

தவற விட்ட மீச்சிறு தருணம்

துணையெழுத்து குறித்த வாசிப்பனுபவம் கோபி சரபோஜி ———————————————– எஸ். ராமகிருஷ்ணன் ஆனந்த விகடனில் தொடராக எழுதிய சமயத்தில் வாசித்தேன். அதன் பின் நூல் வடிவில் பல தடவை வாசித்தாயிற்று. சமீபத்தில் செய்திருந்த அறுவை சிகிச்சை முழு ஓய்வைத் தந்து கொண்டிருக்கிறது. அந்த நாட்களை நகர்த்தவும், வலியின் வேதனையை குறைக்கவும் வாசிப்பே ஆறுதலாய் இருக்கிறது. உறவினர்களும், நண்பர்களும் நலம் விசாரிக்க வந்து போவதைக் கண்ட போது துணை எழுத்தை வாசிக்கலாம் எனத் தோன்றியது. வாசிக்கும் ஒவ்வொரு முறையும் என்னைச் …

தவற விட்ட மீச்சிறு தருணம் Read More »