அறிவிப்பு

மறைக்கப்பட்ட இந்தியா

‘மறைக்கப்பட்ட இந்தியா’ – வாசிப்பனுபவம் முனைவர் ப. சரவணன், மதுரை இந்தியத்தீபகற்பம் நீண்ட, நெடிய வரலாற்றுப் பின்புலம் கொண்ட பெருநிலம். ஏறத்தாழ எல்லாப் பெரிய, வலிமையான நாடுகளாலும் எண்ணற்ற வந்தேறிகளான ஆட்சியாளர்களாலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆளப்பட்ட அடிமை பூமி இது. இன்று இது விழிப்படைந்து சுதந்திரம்பெற்ற பின்னரும்கூட இதன் உண்மை வலிமையை இந்தியர்களோ, உலக நாடுகளோ புரிந்துகொள்ளவில்லை. இந்தியாவின் தொல்வரலாறு மட்டுமல்ல நேற்றைய நிகழ்வுகூட யாராலோ, ஏதோ ஓர் அரசியல் காரணத்தை முன்னிட்டு மறைக்கப்படுகிறது. நெடுநாள் திறக்கப்படாத …

மறைக்கப்பட்ட இந்தியா Read More »

காலத்தின் அடையாளம்

சென்னையும் நானும் காணொளித் தொடரின் இரண்டாம் பகுதி ராயப்பேட்டையின் நினைவுகள் குறித்தது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை புதிய பகுதி ஒளிபரப்பாகும்.

அஞ்சலி

அன்பிற்குரிய நண்பரும் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகருமான விவேக் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இருபத்தைந்து ஆண்டுகளாக அவரை அறிவேன். சிறந்த பண்பாளர். அவரது மறைவு மிகுந்த துயரமளிக்கிறது. அவருக்கு எனது கண்ணீர் அஞ்சலி .

மை டியர் செகாவ்

எனது மகன் ஹரி பிரசாத் இயக்கிய மை டியர் செகாவ் குறும்படம் பூனேயில் நடைபெற்ற சர்வதேசக் குறும்படப் போட்டியின் இறுதிச் சுற்றில் கலந்து கொண்டு சிறப்புப் பரிசை பெற்றுள்ளது. எழுத்தாளர் ஆன்டன் செகாவைத் தீவிரமாக வாசிக்கும் ஒரு வாசகரின் வாழ்வினைச் சொல்லும் இந்தத் திரைப்படம் கவனம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஹரி பிரசாத் மற்றும் அவனது குழுவினர்களுக்கு எனது அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்

தெலுங்கில்

 ” எம்பாவாய்”  என்ற எனது சிறுகதையின் தெலுங்கு மொழியாக்கம் “neccheli.com என்ற மின் இதழில் வெளியாகி இருக்கிறது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் கௌரி கிருபானந்தன். அவருக்கு எனது மனம் நிரம்பிய நன்றி இணைப்பு

சென்னையும் நானும் -2

சென்னையும் நானும் காணொளித் தொடரின் இரண்டாம் பகுதி ஏப்ரல் 16 முதல் துவங்குகிறது. வாரம் வெள்ளிதோறும் இந்தக் காணொளித் தொடர் வெளியாகும். தேசாந்திரி யூடியூப் பக்கத்தில் இதனைக் காணலாம்

அன்பு மொழி

நேற்று எனது பிறந்த நாள். இந்நாளில் எனக்குத் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் முகநூலிலும் வாழ்த்து தெரிவித்த நண்பர்கள். அன்பர்கள். வாசகர்கள் அனைவருக்கும் மனம் நிரம்பிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் குடும்பத்தில் ஒருவரது பிறந்த நாளைக் கொண்டாடுவது போல வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. உங்கள் நேசமும் வாழ்த்துக்களும் தான் என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கின்றன. இத்தனை நல்ல உள்ளங்களின் அன்பைப் பெற்றிருக்கிறேன் என்பது எனது பேறு. அயல்நாட்டிலிருந்து மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் அழைத்துப் பேசி வாழ்த்து …

அன்பு மொழி Read More »

சென்னையும் நானும் – சீசன் 2

சென்னையும் நானும் காணொளித் தொடர் மிகுந்த வரவேற்பு பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்ற ஆண்டில் பெருந்தொற்றுக்கால ஊரடங்கின் காரணமாக அதைத் தொடர முடியாமல் போனது. தற்போது மீண்டும் அதன் இரண்டாம் பகுதி ஒளிபரப்பாக உள்ளது. இந்தப் பகுதியில் சென்னையில் நான் சந்தித்த எழுத்தாளர்கள், சினிமா உலக அனுபவங்கள். மற்றும் மறக்கமுடியாத கலை நிகழ்வுகள். ஆளுமைகள். சென்னையின் வரலாறு குறித்த விஷயங்கள் இடம்பெற உள்ளன இந்தத் தொடரை உருவாக்குவது எனது மகன் ஹரி பிரசாத் , இதனை ஒளிப்பதிவு …

சென்னையும் நானும் – சீசன் 2 Read More »