அறிவிப்பு

நூல் பேசுவோம்

மஞ்சுநாத் எழுதியுள்ள கர்னலின் நாற்காலி குறித்த சிறிய அறிமுகம். *** நூல் பேசுவோம் – கர்னலின் நாற்காலி பூங்காவிற்குள் நுழைந்தவுடன்  ஊஞ்சலில்  அமர்ந்தாடும் சிறுமியின் மகிழ்ச்சிக்கு ஒப்பீடாக சொல்லியிருக்கலாம் கை நிறைய கலர் மிட்டாய்கள்  வைத்திருக்கும் சிறுவனின்  கொண்டாட்டத்திற்கு  ஈடாக சொல்லியிருக்கலாம் ஆபூர்வ வைரக்கற்கள் கண்டடைந்த  பூரிப்பை முகத்தில் காட்டியிருக்கலாம், வியாபாரியாக இருந்திருந்தால் என்றைக்குமில்லாமல் பாதி பூக்களுடன் திரும்பி செல்லும் பூக்காரம்மாவிற்கு இன்று ஒரே ஒரு மனிதன் முழுவதையும் சொன்ன விலைக்கு பேரம் பேசாமல் வாங்கி கொண்டால், …

நூல் பேசுவோம் Read More »

சுபமங்களா இதழில்

சுபமங்களா இதழில் வெளியான எனது சிறுகதைகள் குறித்து வண்ணநிலவன் எழுதியுள்ள இந்தக் குறிப்பு சுபமங்களா நாட்களை நினைவுபடுத்தியது. கோமலின் அன்பு மறக்கமுடியாதது. சுபமங்களா இதழின் பங்களிப்பு பற்றி வெளியான சிறப்பு மலரில் இந்தக் கட்டுரையை வண்ணநிலவன் எழுதியிருக்கிறார். சுபமங்களா இதழ்கள் யாவும் இணையத்தில் வாசிக்க கிடைக்கிறது. https://www.subamangala.in/

ஆங்கிலத்தில் குறுங்கதைகள்

பிரண்ட்லைன் இதழில் எனது கர்னலின் நாற்காலி தொகுப்பிலிருந்து இரண்டு குறுங்கதைகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. இந்தக் கதைகளை மொழியாக்கம் செய்திருப்பவர் மாலினி சேஷாத்ரி. மினி கிருஷ்ணன் இதைத் தேர்வு செய்து அறிமுகம் செய்திருக்கிறார்.    Thanks Frontline Mini Krishnan Malini Seshadri ••

ஓம் முத்துமாரி

இணையத்தில் தற்செயலாகப் பாவலர் ஓம் முத்துமாரி நடத்திய கிராமிய நிகழ்ச்சி ஒன்றின் காணொளியைப் பார்த்தேன். அவரது பாடல் பழைய நினைவுகளைக் கிளரச் செய்துவிட்டது. கோவில்பட்டியிலிருந்து ராஜபாளையம் செல்லும் வழியிலுள்ள திருவேங்கடத்தில் வசித்து வந்தார் பாவலர் ஒம் முத்துமாரி. பெண் வேடமிட்டு நடிப்பதில் மிகச்சிறந்தவர். சிறந்த கூத்துக்கலைஞர். தானே பாடல்களைப் புனைந்து பாடுபவர். அவர் கொலை சிந்து பாடினால் உக்கிரம் கொப்பளிக்கும். அவரைச் சந்திப்பதற்காக நானும் கோணங்கி நாலைந்து முறை திருவேங்கடம் சென்றிருக்கிறோம். டவுனிலிருந்து தன்னைத் தேடி வந்திருக்கிறார்கள் …

ஓம் முத்துமாரி Read More »

வாழ்த்துகள்

இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் இமையத்திற்கு  செல்லாத பணம் நாவலுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள்

இலக்கியச் சிந்தனை விருது

மாதந்தோறும் தமிழில் வெளியான சிறந்த கதைகளை வாசித்து அதில் ஒரு கதையை அந்த மாதத்தின் சிறந்த கதையாக இலக்கியச்சிந்தனை தேர்வு செய்து வருகிறது. இந்த 12 கதைகளில் ஆண்டின் சிறந்த கதையாக ஒன்றை நடுவர் குழு தேர்வு செய்து விருதும் ஐந்தாயிரம் ரொக்கப்பணமும் வழங்குகிறது. சென்ற வருஷம் இலக்கியச்சிந்தனையின் ஆண்டின் சிறந்த கதையாகச் சிற்றிதழ் என்ற எனது கதை தேர்வு செய்யப்பட்டது. பெருந்தொற்றுக் காரணமாக ஏற்பட்ட ஊரடங்கால் விருது வழங்கும் விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு ஏப்ரல் …

இலக்கியச் சிந்தனை விருது Read More »

அன்பான நன்றி

புத்தகக் கண்காட்சி நேற்றோடு நிறைவு பெற்றது. இந்த 14 நாட்களில் எத்தனையோ விதமான வாசகர்களைச் சந்தித்தேன். உரையாடினேன். கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன். ஆசையாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். ஒரு எழுத்தாளன் மீது வாசகர்கள் காட்டும் அன்பை முழுமையாக உணரக்கூடிய தருணமிது. காலை 11 மணிக்கு தேசாந்திரி அரங்கிற்கு வந்து மாலை ஐந்துமணிக்கு நான் வரும் வரை காத்திருந்த வாசகருக்கு எப்படி நன்றியை வெறும் வார்த்தைகளால் சொல்வது. என்னிடம் ஒரு கையெழுத்து வாங்குவதற்காக மட்டுமே பெங்களூரில் இருந்து பயணம் …

அன்பான நன்றி Read More »

இரண்டு இளம் படைப்பாளிகள்

காளி பிரசாத்: ஆள்தலும் அளத்தலும் மராத்திய எழுத்தாளர் விலாஸ் சாரங் எழுதிய தம்மம் தந்தவன் நாவலை மொழியாக்கம் செய்த எழுத்தாளர் காளிபிரசாத் ஆள்தலும் அளத்தலும் என்ற தனது முதல் சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார். பதாகை மற்றும் யாவரும் வெளியீடாக வந்துள்ளது. இவரது கதைகளை முன்னதாகச் சொல்வனம் மற்றும் பதாகை இதழில் வாசித்திருக்கிறேன். இந்தத் தொகுப்பிலுள்ள ஆறு கதைகளை நேற்று படித்தேன். தினசரி வாழ்வின் நுண்தருணங்களைக் கதைகளாக எழுதுகிறார். சரளமான எழுத்து நடை. பழனி கதையில் வரும் கதாபாத்திரச் …

இரண்டு இளம் படைப்பாளிகள் Read More »