அறிவிப்பு

சர்வோத்தமன் சடகோபன்

தஸ்தாயெவ்ஸ்கியினைப் பற்றி மிகச்சிறப்பான கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார் சர்வோத்தமன் சடகோபன். இவரது பார்வையும் புரிதலும் அற்புதமானது. ஆங்கிலத்தில் இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டிருந்தால் நிச்சயம் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கும். பெங்களூரில் பணியாற்றிவரும் சர்வோத்தமன் தஸ்தாயெவ்ஸ்கியின் புத்தகச் சாலை என்ற வலைப்பக்கம் ஒன்றினையும் நடத்தி வருகிறார். http://sarwothaman.blogspot.com/ தற்போது முறையிட ஒரு கடவுள் என்ற அவரது முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. மணல்வீடு பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது. தஸ்தாயெவ்ஸ்கி பற்றி இவர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ஒரு …

சர்வோத்தமன் சடகோபன் Read More »

இந்தியக் கலைகள்

இந்தியக் கலைகள், நாடகம். நிகழ்த்துக் கலைகள், வரலாறு, அகழ்வாய்வு, இயற்கை வரலாறு, கட்டிடக்கலை, பண்பாடு குறித்த முக்கியக் கட்டுரைகளை வெளியிட்டு வரும் Marg இதழை நீண்டகாலமாகவே வாங்கி வாசித்து வருகிறேன். இது காலாண்டு இதழாக வெளிவருகிறது. ஒரு இதழின் விலை ரூ250. அழகான வண்ணப்படங்களுடன் சிறந்த கட்டுரைகளுடன் இதழ் வெளியாகிறது. மின்னிதழாகவும் இதை வாசிக்க இயலும். எழுத்தாளர் முல்க் ராஜ் ஆனந்த் 1946 ஆம் ஆண்டில் மார்க் பவுண்டேஷனை உருவாக்கினார். இந்தியக் கலைகள் குறித்த ஆய்வுமையமாக இது உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனமே மார்க் இதழை வெளியிடுகிறது. ஒவ்வொரு இதழும் ஒரு குறிப்பிட்ட மையப்பொருளைக் கொண்டு உருவாக்கப்படுகிறது. …

இந்தியக் கலைகள் Read More »

இந்து தமிழ் நாளிதழில்

இன்றைய இந்து தமிழ் நாளிதழில் புதிய சிறார் நூல்களை அறிமுகம் செய்திருக்கிறார்கள். அதில் எனது சிறார் நூல்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்கள். மாறுபட்ட நூல்கள் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ‘நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து’, ‘அபாய வீரன்’ ஆகிய சிறார் கதைத் தொகுப்புகள், ‘அண்டசராசரம்’ என்கிற நாவல் ஆகியவை வெளியாகியுள்ளன. (தேசாந்திரி வெளியீடு, தொடர்புக்கு: 9600034659). நன்றி இந்து தமிழ் நாளிதழ்

நானும் எனது இலக்கியத் தேடலும்.

(தினமணி நாளிதழில் இன்று வெளியான கட்டுரை.) எது நான் படித்த முதல் புத்தகம் என்று யோசித்துப் பார்த்தால் விடை காணமுடியவில்லை. ஆனால் மூன்று நான்கு வயதுகளிலே வண்ணப்படம் உள்ள புத்தகத்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்த நினைவு இருக்கிறது. என் வீட்டில் புத்தகம் படிக்கும் ஆர்வம் எல்லோரிடமும் இருந்தது. ஆகவே வார இதழ்கள், மாத இதழ்கள். புதிய புத்தகங்கள் வீட்டிற்கே வந்துவிடும். படித்த புத்தகங்களைப் பற்றி வீட்டில் காரசாரமாக விவாதிப்பார்கள். ஆகவே புத்தக வாசிப்பு வீட்டில் தான் முதலில் …

நானும் எனது இலக்கியத் தேடலும். Read More »

வல்லினம் இதழில்

வல்லினம் இணைய இதழில் எனது புதிய சிறுகதை கறுப்பு ரத்தம் வெளியாகியுள்ளது. https://vallinam.com.my/version2/?p=7442&fbclid=IwAR3oh6k5UlTlhF1ikVWqZmFgF8h1UwlZKltZ3zDDuCYjZGHBoAyU0zPt3tw

அஞ்சலி

காந்தியவாதியும் மிகச்சிறந்த சுற்றுச்சூழல் செயல்பாட்டாளருமான அருமை நண்பர் டாக்டர் ஜீவா ( ஈரோடு) இன்று காலமானார். எளிமையும் ஆழ்ந்த ஞானமும் கொண்ட அற்புதமான மனிதர். நிறைய மொழியாக்க நூல்களை வெளியிட்டுள்ளார். கூட்டுறவு மருத்துவமனைகளை உருவாக்கியதில் முன்னோடி. அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

புத்தகக் காட்சி துவங்கியது

இன்று காலை 44- வது சென்னை புத்தகக் காட்சி இனிதே துவங்கியது. தேசாந்திரி பதிப்பகம் அரங்கு எண் 494 & 495ல் தயாராகிவிட்டது. எனது புதிய நூல்களையும் தேசாந்திரியின் பிற வெளியீடுகள் அனைத்தையும் இந்த அரங்கில் பெற்றுக் கொள்ளலாம். புத்தகக் கண்காட்சியில் வாங்க வேண்டிய சிறந்த நூல்கள் குறித்த பரிந்துரைகளை தினமும் வெளியிட இருக்கிறேன். அத்துடன் காணொளி மூலமாகவும் எனது பரிந்துரைகளை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறேன். புத்தகக் கண்காட்சி நந்தனம் YMCA மைதானத்தில் தினமும் காலை 11 மணி …

புத்தகக் காட்சி துவங்கியது Read More »

ஒவிய நூல்கள்

தேசாந்திரி பதிப்பகம் எனது ஒவிய நூல்களின் புதிய பதிப்பினை வெளியிட்டுள்ளது. சென்னைப் புத்தகக் கண்காட்சி தேசாந்திரி அரங்கு எண் 494 & 495ல் இந்த நூல்களைப் பெறலாம்.

புதிய வெளியீடுகள்

தேசாந்திரி பதிப்பகம் சார்பில் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வெளியாகும் புதிய வெளியீடுகள். புத்தகக் கண்காட்சி அரங்கு எண் 494 & 495 ல் புதிய நூல்களைப் பெறலாம்.