அஞ்சலி

தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்பாளியான ஆ.மாதவன் காலமானார். அவரது மறைவிற்கு எனது இதயப்பூர்வமான அஞ்சலி .

திருவனந்தபுரத்தில் வாழ்ந்து வந்த ஆ. மாதவன் அவர்களை பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். மிகப் பண்பான மனிதர். அவரது சிறுகதைகள் தனித்துவமானவை. அவரைப் பற்றி கதாவிலாசத்தில் நான் எழுதிய கட்டுரையை வாசித்து விட்டு மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். நன்றி தெரிவித்தார்.

நகுலனைப் பார்க்கச் செல்லும் போதெல்லாம் அவரையும் காண்பது வழக்கம்.. வாசகர் வட்டம் வெளியிட்ட அவரது புனலும் மணலும் முக்கியமான நாவல். ஆ. மாதவன் கதைகள் என்ற தலைப்பில் அவரது சிறுகதைகளின் மொத்த தொகுப்பும் வெளியாகியுள்ளது

0Shares
0