தேவதச்சனின் கவியுலகம்
கவிதை சொற்களால் உருவாக்கபட்டிருந்த போதும் சொல்லைக் கடந்து செல்வதே அதன் முக்கியப் பணியாக இருக்கிறது. சொற்களை அது முடிந்த ஒன்றாக கருதுவதேயில்லை. மாறாக சொல்லை அதன் நேரடி அர்த்தம் சார்ந்து மட்டும் பிரயோகம் செய்யாமல் சொல்லுக்கும் பொருளுக்குமான இடைவெளியை, சாத்தியப்பாடுகளையும் எதிர்நிலைகளையும் உருவாக்க விளைகிறதுகவிஞன் கவிதையின் வழியாக உலகை ஒன்றிணைக்கவும் சிதறடிக்கவே ஒரே நேரத்தில் விரும்புகிறான். காட்சிகளையும் சப்தத்தையும் படிமங்களையும் கொண்டு உலகின் மீதான தனது வேட்டையை நிகழ்த்துகிறான். கதையாசிரியனைப் போல அவன் சம்பவங்களின் மீதும், சம்பவங்களை …