கவிதையும் கோவிலும்
புகழ் பெற்ற கவிஞர்களுக்கு சிலை வைக்கும் வழக்கம் உலகமெங்கும் உள்ளது. பல நாடுகளில் கவிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில் அவர்களது வாழ்விடங்கள் நினைவகமாக்கப்பட்டு மாதந்தோறும் சிறப்பு கூட்டங்கள், கவிதை வாசித்தல் என்று அக்கறையோடு செய்யப்படுகின்றன. இந்தியாவில் காந்திசமாதி போன்று ஒன்றிரண்டு நினைவிடங்களை தவிர மற்றவை முறையான பராமரிப்பின்றி கவனிப்பார் அற்றே கிடக்கின்றன. இதில் எழுத்தாளர்கள் கவிஞர்கள் நினைவிடங்களின் கதி எப்படியிருக்கும் என்பது உலகமறிந்த செய்தி. தமிழகத்தில் வள்ளுவர், ஔவை, …