இணையதளம்

விடுமுறைக் குறிப்புகள்

புத்தக வெளியீடுகள், கண்காட்சி என்று டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் பரபரப்பாக ஒடியாடியதில் இருந்து விடுபட்டு சில நாட்களாக கன்யாகுமரி மற்றும் திற்பரப்பு அருவி என்று ஒய்வில் இருந்தேன், எவ்வளவோ முறை கன்யாகுமரிக்கு வந்திருந்த போதும் அது புதியதாகவே இருக்கிறது, அறையின் ஜன்னலைத் திறந்தால் கடல். பின்னிரவில் கடற்கரையில் சுற்றி அலைந்தேன், கடல்காற்றைப் போல உன்னதமானது உலகில் வேறில்லை, கடல் மீது நட்சத்திரங்கள் ஒளிர்கின்றன,  பனியோடு கூடிய இரவு கடலின் நீல மயக்கம் மனதைப் பெரிதும் சாந்தம் …

விடுமுறைக் குறிப்புகள் Read More »

கணிதமேதையைப் பற்றிய பாடல்

கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்வை விவரிக்கும் இந்தப் பாடல் அற்புதமான இசையோடு அமைக்கப்பட்டுள்ளது, கேட்கையில் மிகுந்த உணர்ச்சிவசமாகிறது, இப்பாடலை டவுன்லோடு செய்து கேட்கலாம் ஆன்லைனில் கேட்க இணையப்பக்கத்தில் உள்ள ஆடியோ பிளேரை அழுத்தவும், பள்ளி. கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டிய முக்கிய பாடல் இது. https://www.archive.org/details/Ramanujan

கதை கேளுங்கள்

தமிழ் ஸ்டுடியோ இணைய தளத்தில் கதை சொல்லி என்ற புதிய பகுதி செயல்பட்டு வருகிறது, இதில் ஒவ்வொரு எழுத்தாளரும் தனக்குப் பிடித்தமான இரண்டு கதைகளை அவர்களது குரலில் பேசிப் பதிவு செய்து வருகிறார்கள், மிகுந்த பாராட்டிற்கு உரிய முயற்சியது இதில் எனது நண்பரும் தமிழின் முக்கிய கவிஞருமான மனுஷ்யபுத்திரன் தனக்குப் பிடித்த கதையாக எனது மிருகத்தனம் என்ற சிறுகதையைச்  சொல்லியிருக்கிறார், மிக நன்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கும் தமிழ் ஸ்டுடியோ நண்பர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் …

கதை கேளுங்கள் Read More »

மூன்று இணைய இதழ்கள்

இணையத்தில் நம்பிக்கையூட்டும் விதமாக தொடர்ச்சியாக செயல்படும் சில இணைய இதழ்களைக் குறிப்பிட விரும்புகிறேன், சொல்வனம் மாதமிருமுறை வெளிவரும் இணைய இதழ் , 36 இதழ்கள் வெளியாகி உள்ளன, சிறப்பான மொழிபெயர்ப்புகள். அரசியல், அனுபவம்.விஞ்ஞானம். உலக சினிமா மற்றும் நுண்கலை சார்ந்த கட்டுரைகள் எனத் தனித்துவத்துடன் வெளியாகி வருகிறது. சிற்றிதழ் மரபின்  அதே தீவிரம் மற்றும் அக்கறையுடன் செயல்பட்டு வரும் மிக முக்கியமான இணைய இதழ் https://solvanam.com/ வல்லினம் மலேசியாவிலிருந்து நவீன தமிழ் இலக்கியம் சார்ந்து காத்திரமான படைப்புகள். …

மூன்று இணைய இதழ்கள் Read More »

பிரபஞ்சன்

எனது அன்பிற்குரிய நண்பரும், நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி சாதனையாளருமான எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களுக்கென புதிய இணையதளம் துவங்கப்பட்டுள்ளது, பிரபஞ்சனின் கட்டுரைகள். நேர்காணல்கள். சிறுகதைகளை உள்ளடக்கிய பிரத்யேக இணையதளமாக  இது சிறப்பாக வடிவமைக்கபட்டிருக்கிறது.  பிரபஞ்சனுக்காக இந்த இணையதளத்தினை சிங்கப்பூரைச் சேர்ந்த நண்பர்  ஆர்.எம். பரணீதரன் உருவாக்கியிருக்கிறார், சங்க இலக்கியம் முதல் பிரெஞ்சு இலக்கியம் வரை ஆழ்ந்த இலக்கியரசனை கொண்ட கட்டுரைகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன, எனக்கு மிகவும் பிடித்தமான கட்டுரை பானு உன் புத்தகப்பை அண்ணனிடம் இருக்கிறது …

பிரபஞ்சன் Read More »

சினிமா இணையதளங்கள்

இரண்டு நாட்களின் முன்பாக டி.சுப்ரமணியம் எனும் திரைப்பட துணைஇயக்குனர் உலகத்திரைப்படங்கள், திரைப்பட இயக்குனர்கள் குறித்த இணையதளங்களை சிபாரிசு செய்யும்படியாக மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவருக்காக இந்த இணையதள சுட்டிகளை சிபாரிசு செய்திருந்தேன். அவரை போல ஆர்வம் உள்ளவர்கள் பலரும் இருப்பதால் அதே பட்டியலை முன்வைக்கிறேன். இந்தஇணையதளங்கள் ஒரளவு உலக சினிமாவின் முக்கிய போக்குகளை அறிந்து கொள்ள உதவக்கூடியவை. புகழ்பெற்ற இயக்குனர்கள். சினிமாகட்டுரைகள், சமகால இலக்கியத்திற்கும் சினிமாவிற்குமான தொடர்பு. பல்வேறு தொழில்நுட்ப தகவல்கள், அறிமுகங்கள் என இவை உலகசினிமாவின் பல்வேறு …

சினிமா இணையதளங்கள் Read More »

பத்து குறும்படங்கள்

சமீபத்தில் நான் இணையத்தில் பார்த்த குறும்படங்கள் இவை. இதில் ஹிந்தி திரையுலகின் முக்கிய இயக்குனரான அனுராக் காஷ்யப்பின் முதல்படம் உள்ளது. இப்படம் அவரது சமீபத்தைய தேவ் டி, குலால் போன்ற படங்களின் முன்னோடி முயற்சி என்பது தெளிவாக தெரிகிறது. அது போல ஈரானிய குறும்படங்களும் முக்கியமானவையே. மும்பை மற்றும் நியூ டெல்லியில் உள்ள தனியார் திரைப்படக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் ஹிந்தி குறும்படங்கள் சிலவற்றையும்  கண்டேன். இதில் ஒன்றிரண்டு மிக சிறப்பாக உள்ளது.  இந்த பட்டியலில் உள்ள மை …

பத்து குறும்படங்கள் Read More »

ஏழு குறும்படங்கள்

நேற்று பெரியார் திடலில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதை ஊடகத்துறையின் குறும்பட போட்டியின் துவக்கவிழாவில் கலந்து கொண்டேன். இதனை ஒருங்கிணைத்த பிரின்ஸ் பெரியார் இயக்கத்தின் துடிப்புமிக்க இளம்தலைமுறை தோழர்.சென்னை திரைப்படக்கல்லூரியில் பயின்றவர். இந்த திரையிடல் நிகழ்விற்கு ஐம்பதிற்கும் மேற்பட்ட குறும்பட இயக்குனர்கள் வந்திருந்தார்கள். நூறு குறும்படங்களுக்கு மேலாகவே போட்டிக்கு வந்திருந்தன. தமிழில் இவ்வளவு குறும்படங்கள் உருவாக்கபடுவது மிக ஆரோக்கியமான வளர்ச்சியாகும். இதன்வழியே மாற்றுசினிமா முயற்சிக்கான புதிய களம் உருவாகி வருவதை அறிய முடிகிறது.  தேர்ந்த தொழில்நுட்பம், கதைக்கரு, மிகையில்லாத …

ஏழு குறும்படங்கள் Read More »

எழுத்தின் நாயகர்கள்.

உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்களான காப்கா, ஆல்பெர் காம்யூ,  ஜேம்ஸ் ஐôய்ஸ், இசபெல் ஆலண்டே. டோல்கின், ஐசக் அசிமோவ், அல்டாக்ஸ் ஹக்ஸ்லி, ஹென்றி மில்லர், எக்ஸ்சுபரி, விளாதிமிர் நபகோவ், ஹருகி முராகமி, உம்பர்ந்தோ ஈகோ, சல்மான் ருஷ்டி, டோனி மாரிசன், மார்க்ரெட் அட்வுட் ரே பிராட்பரி. கார்சியா லோர்க்கா, வில்லியம் பாக்னர், டெரிதா, பூகோ, பாவ்லோ கொய்லோ, போன்ற ஆளுமைகளின் நேர்காணல்கள், அவர்களை பற்றிய ஆவணப்படங்கள், குறும்படங்களின்  பட்டியலிது. அவ்வப்போது இணையத்தில் தேடிப்பார்த்த இந்த படங்கள் எழுத்தாளர்கள் குறித்த …

எழுத்தின் நாயகர்கள். Read More »

பார்க்க- படிக்க-இணையதளங்கள்.

  சமீபத்தில் நான் பார்த்த, வாசித்த சில முக்கிய  இணையதளங்கள்.  1) வொங்கர் வாய் குறும்படம் உலகப்புகழ்பெற்ற ஹாங்காங் திரைப்பட இயக்குனர் வொங்கர் வாய் இயக்கிய குறும்படமிது. அற்புதமான ஒளிப்பதிவு. கனவுதன்மை மிக்க காட்சிகள். இசை சேர்ந்த நேர்த்தியான குறும்படம் https://www.dailymotion.com/video/k2uNhEnQzp8nYwooFR 2) சிமாந்தோ அடிஸின் நேர்காணல் ஆரஞ்சு பரிசு பெற்ற நாவலாசிரியையான சிமாந்தோ அடிஸின் நேர்காணல் உள்ளிட்ட பல முக்கிய எழுத்தாளர்களின் நேர்காணல்கள், கதைகள், கட்டுரைகள் கொண்ட இலக்கிய இணையமிது.  https://www.bookslut.com/features/2009_08_014928.php 3) போர்ஹே ஒரு ஆவணப்படம் லத்தீன் அமெரிக்க …

பார்க்க- படிக்க-இணையதளங்கள். Read More »