புர்ரா
– சிறுகதை. அந்த வார்த்தையை சுகு யாரிடமிருந்து கற்றுக் கொண்டாள் என்று தெரியவில்லை. பள்ளியிலிருந்து வீடு வந்ததும் சப்தமாக சொல்லத் துவங்கினாள். அதை சொல்லும் போது அவளது முகத்தில் சந்தோஷம் கொப்பளித்து கொண்டிருந்தது. கைகளை விரித்தபடியே அவள் புர்ரா என்று கத்தும் போது அவளை காண்பதற்கே விசித்திரமாக இருந்தது. என்ன சொல் அது என்று புரியாமல் திரும்பி பார்த்தேன். சுகு உற்சாகமாக புர்ரா புர்ரா என்று கத்திக் கொண்டிருந்தாள். அவளது உற்சாகத்திற்காக ஒரு நிமிசம் அதை அனுமதித்த என்னால் …