அப்பாவின் பெயர்
புதிய சிறுகதை பிப்ரவரி 9 2023 பேராசிரியர் அருண்சர்மா தொலைபேசியில் அவளை அழைத்தபோது இரவு ஒன்பது மணியிருக்கும். அவரது குரலில் அவசரம் தெரிந்தது “சகுந்தலா உங்கப்பா வீட்டுக்கு வந்துட்டாரா“ “இல்லை. ஏதோ மீட்டிங் இருக்குனு வெளியே போயிருக்கார் இன்னும் வரலை“ “அவர் ஐசிஎல் அவார்ட் செலக்சனுக்குப் போயிருக்கார். அதுல உன் பேரு இருக்கு. அவர் இதைப் பற்றி ஒண்ணும் சொல்லலையா“ “இல்லையே. “ “மூணு நடுவர்ல உங்கப்பாவும் ஒருத்தர். நிச்சயம் உனக்கு அவார்ட் கிடைக்கும்னு நினைக்குறேன்“ “லிஸ்ட்ல …