சிறுகதை

கறுப்பு ரத்தம்

புதிய சிறுகதை நர்மதா லிப்டை விட்டு வெளியே வந்தபோது இரண்டு கார்களுக்கும் நடுவில் இருந்த இடைவெளியில் அந்தக் கிழவர் தன் பேத்தியுடன் நிற்பதைக் காணமுடிந்தது. மூன்று நாட்கள் முன்பாக அந்தக் கிழவர் அவள் வேலை செய்யும் சேனலிற்கு வந்து தன்னுடைய பேத்தியின் கல்லூரிப் படிப்பிற்குத் தேவையான பண உதவி வேண்டி டிவி செய்தியில் ஒளிபரப்பும்படி கேட்டார். அப்படிச் செய்யமுடியாது என அவர்கள் மறுத்துப் பேசியதை அவர் கேட்டுக்கொள்ளவேயில்லை. கிழவருக்கு எழுபது வயதிருக்கும். தோளைவிட இறங்கிய கைகள் கொண்ட …

கறுப்பு ரத்தம் Read More »

காற்றில் பறக்கும் மலர்

புதிய சிறுகதை கரணின் டீசர்டை அபர்ணா துவைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. இப்படிக் காலை ஐந்து மணிக்கு பாதி உறக்கத்திலிருந்து எழுந்து வந்து அவனது டீசர்டை ஏன் துவைத்துக் கொண்டிருக்கிறாள் என வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். பின்கதவு பாதித் திறந்திருந்தது. வாழைமரத்தில் அசைவில்லை. அதன் விநோதநிழல் சரிந்து விழுந்த, மஞ்சள் வெளிச்சத்தில் இப்படி அபர்ணாவைப் பார்க்க கலக்கமாகவே இருந்தது. கலைந்த கூந்தலுடன் சேலையை இடுப்பில் தூக்கி சொருகியபடியே அவள் துணியினைக் கசக்கிக் கொண்டிருந்தாள். அருகிலிருந்த பிளாஸ்டிக் வாளியில் சோப் …

காற்றில் பறக்கும் மலர் Read More »

கிணற்றின் வயது

புதிய சிறுகதை அவர்கள் மூன்று பேர் வந்திருந்தார்கள். மூவரில் உயரமாக இருந்தவருக்கு வயது எழுபதிற்கும் மேலிருக்கும். ஈட்டி போன்ற உறுதியான உடற்கட்டு கொண்டிருந்தார். தோளில் ஒரு துண்டு. அழுக்கடைந்த வேஷ்டி. உடன் வந்திருந்த இரண்டு பேரும் இளைஞர்கள். பெரியவர் கையில் ஒரு மஞ்சள் பையிருந்தது. அதில் ஏதோ ஒரு பொருளைச் சுற்றி வைத்திருந்தார். வீட்டின் பின்புறமிருந்த கிணற்றடிக்கு அவர்கள் போய் நின்றபோது விசாலாட்சி பூக் கட்டிக் கொண்டிருந்தாள். அவளுக்கு எழுபது வயது நடந்து கொண்டிருந்தது. தலையில் ஒரு …

கிணற்றின் வயது Read More »

நிழல் கலைஞன்

புதிய சிறுகதை “பிகாசோ வெளியே வாருங்கள்“ என்று சப்தமாக அழைத்தாள் ஜாக்குலின் அவர் குளிப்பதற்காக வெற்றுடம்புடன் அரைக்கால் டிராயர் மட்டும் அணிந்தபடியே நின்றிருந்தார். அவரது காலை நேரம் மிகத் தாமதமாகவே துவங்குவது வழக்கம். பல நாட்கள் இரவில் நண்பர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு மிதமிஞ்சிய போதையில் வீடு திரும்புவதற்குப் பின்னிரவாகிவிடும். சில இரவுகளில் அவர் கடற்கரைக்குச் சென்று தனியே நடப்பதும் உண்டு. விருந்தில் வெளிப்படும் பகட்டும் போலியான உரையாடல்களும் அவரைச் சலிப்படையச் செய்திருந்தன. மனிதர்களின் பொய்யான …

நிழல் கலைஞன் Read More »

ஐந்து வருட மௌனம்

புதிய சிறுகதை பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. அந்த முசாபரி பங்களாவின் வெளியே அதிகாலையில் இவ்வளவு பேர் கூடிவிடுவார்கள் என்று ராஜன் எதிர்பார்க்கவில்லை. காந்தியைக் காண்பதற்காகக் கிராமவாசிகள் திரண்டிருந்தார்கள். தினசரி காலை நான்கு மணிக்குப் பிரார்த்தனை செய்வது காந்தியின் வாழ்க்கையில் என்றும் மாறாத பழக்கமாக இருந்தது. இன்னமும் சூரியன் உதயமாகவில்லை. இருளுக்குள்ளாகவே நடந்து கிராமவாசிகள் வந்திருந்தார்கள். இரண்டாயிரம் பேருக்கும் மேலிருக்கும். அதில் பாதிக்கும் மேல் பெண்கள். அவர்கள் முதன்முறையாகக் காந்தியோடு ஒன்றாகப் பிரார்த்தனை செய்கிறார்கள். யாருக்காக அந்தப் பிரார்த்தனை, …

ஐந்து வருட மௌனம் Read More »

வெயிலில் அமர்தல்

புதிய சிறுகதை நியூசிலாந்திலிருந்து கிளம்பும் போது வர்ஷினிக்கு அப்படி ஒரு யோசனை இருக்கவேயில்லை. அவள் பெங்களூரில் உள்ள தனது அபார்ட்மெண்டிற்குத் தான் போக வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள். விமான டிக்கெட் கூடப் பெங்களூருக்கே போட்டிருந்தாள். ஆனால் பயணம் கிளம்பும் முதல் நாள் டிக்கெட்டை சென்னைக்கு மாற்றினாள். அப்பா அம்மாவோடு சில நாட்கள் இருக்கலாம் என நினைத்து சென்னைக்குப் பயணம் செய்தாள். ஆனால் சென்னைக்கு வந்த இரண்டாம் நாள் அங்கே இருக்கப் பிடிக்கவில்லை. அப்பாவிடம் பெங்களூர் போவதாகச் …

வெயிலில் அமர்தல் Read More »

மழைப்பயணி.

புதிய சிறுகதை •• பைக்கை தள்ளிக் கொண்டு ராதிகா சாலையில் நடந்து கொண்டிருந்தாள்.. இப்படி வழியில் பைக் ரிப்பேர் ஆகிவிடும் என்று அவள் நினைக்கவில்லை. ராதிகாவிற்கு இருபத்திநான்கு வயது நடந்து கொண்டிருந்தது. கறுப்பு நிறத்தில் ஜெர்கின் அணிந்திருந்தாள். நீல நிற ஜீன்ஸ். மெலிந்த உடல்வாகு. கௌகாத்தியிலிருந்து ஷில்லாங் செல்லும் அந்த மலைப்பாதையில் ஆள் நடமாட்டமில்லை. நீண்டு வளைந்து செல்லும் பாதையில் மஞ்சள் வெயில் மினுங்கிக் கொண்டிருந்தது. மழைக்காலத்தின் மாலைநேரம் பேரழகு மிக்கது. அந்தப் பாதையில் இரண்டு வண்ணத்துப்பூச்சிகள் …

மழைப்பயணி. Read More »

மூடிய கண்கள்

புதிய சிறுகதை ••• கவிஞர் டேனியல் விநோதனுக்காக நிதி திரட்டுவது என்று அவர்கள் முடிவு செய்தார்கள். அது ரமணாவிற்கு ஏற்புடையதாகயில்லை என்றாலும் ஒத்துக் கொண்டான் மூன்று வாரத்திற்கும் மேலாக விநோதன் சிறுநீரகம் செயலற்றுப் போனதன் காரணமாக மருத்துவமனையிலிருந்தார். ஐம்பது வயதைக் கடந்திருந்த போதும் அவரது தோற்றம் எழுபது வயது போலாகியிருந்தது. அதுவும் சவரம் செய்யப்படாத நரைத்த தாடி கொண்ட முகமும் அழுக்கடைந்து போன வேஷ்டியும் வெளிர் நீல அரைக்கை சட்டையும் அணிந்திருந்த அவரது நிலையைக் காணும் போது …

மூடிய கண்கள் Read More »

சிவப்பு மச்சம்

– சிறுகதை “என்னைய இப்படி ஆறு மாசமா இழுத்தடிக்கிறீங்களே… உங்களுக்கே அநியாயமா தெரியலையா? நீங்க நல்லாயிருக்க மாட்டீங்க. உங்க புள்ளகுட்டி விளங்காமப்போயிரும். என் புருஷன் செத்த இடம் புல் முளைச்சுப்போயிருச்சு. இன்னும் என்னைய அலையவிடுறீங்களே… வயிறெரிஞ்சு சொல்றேன், என் சாபம் உங்களைச் சும்மா விடாது’’ என ராக்கி கத்திக் கொண்டிருந்தாள். வருவாய்த் துறை அலுவலகத்துக்குள் யாரோ அதைக் கேட்டுச் சிரித்தார்கள். “சாபமெல்லாம் வெளியே போய்க் குடு. இங்க நின்னு கத்தக் கூடாது” என ஒருவர் அவளை வெளியேற்றினார். …

சிவப்பு மச்சம் Read More »

உடைவாள்

சிறுகதை. கைகளால் அல்ல வாளால் கதவை தட்டிக் கொண்டிருந்தான் மாயநாதன். துருப்பிடித்த வாளது. குடையைக் கையில் எடுத்துச் செல்வது போல எங்கு சென்றாலும் அவன் பெருவாள் ஒன்றை கையோடு தூக்கிக் கொண்டு அலைந்தான். மிக நீண்ட வாளது. “நான் உன்னைக் கொல்லணும். ராமண்ணா கதவைத் திற“ என்ற அவனது குரல் உரத்துக் கேட்டது “நான் தூங்கிட்டேன். நாளைக்கு வா“ எனச் சப்தமிட்டேன் “இல்லை. நான் உன்னை இப்போ பாக்கணும்.. நீ கதவைத் திறக்காட்டி.. பக்கத்து வீட்டுக் கதவை …

உடைவாள் Read More »