புதிய சிறுகதை – மீறல்
சமீபத்தில் எழுதிய புதிய சிறுகதை. அச்சில் வராதது. •• மீறல் சுகந்தி பேருந்தை விட்டு இறங்கிய போது கோயம்பேட்டில் லேசான தூறலாக இருந்தது. இரவில் நல்ல மழை பெய்திருக்க வேண்டும். சாரலோடு ஒரு ஆட்டோ பிடித்துத் தனது தோழி கல்பனாவின் அறையைத் தேடிப் போனாள். கல்பனாவின் கணவன் துபாய் சென்றபிறகு அவள் வீட்டை காலி செய்துவிட்டு தன்னோடு வேலை பார்க்கும் மிதிலாவின் அபார்ட்மெண்டிற்கு மாறி விட்டாள். பெங்களுரில் இரவு புறப்பட்ட போது போனின் சார்ஜ் குறைந்து கொண்டுவந்தது. …