குறுங்கதை- 5 எவரது கண்ணீர்
திருமண வீட்டில் அந்த முதியவரைக் கண்டேன். திருமண மேடையைப் பார்த்தவாறு சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார். எண்பது வயதைத் தாண்டிய தோற்றம். கைகள் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தன. வீங்கிய பாதங்கள். பட்டு வேஷ்டியைத் தளர்வாகக் கட்டியிருந்தார். வேஷ்டி விலகி தொடை தெரிந்தது. சிறுவர்கள் அணிவது போலக் காலர் இல்லாத சட்டை. மணமகளின் தாத்தா என்றார்கள். அவரது கழுத்து ஒரு பக்கமாகச் சாய்ந்திருந்தது. அவர் பேசும் போது கிணற்றுக்குள்ளிருந்து சப்தம் வருவது போலத் தெளிவற்றுக் கேட்டது. வீட்டில் படுக்கையிலே கிடப்பவர் …