முகாம் புகைப்படங்கள்
ஜுன் 14 மற்றும் 15 தேதிகளில் திண்டுக்கல்லில் நடைபெற்ற நாவல் இலக்கிய முகாம் புகைப்படங்கள்
ஜுன் 14 மற்றும் 15 தேதிகளில் திண்டுக்கல்லில் நடைபெற்ற நாவல் இலக்கிய முகாம் புகைப்படங்கள்
எழுத்தாளர் ஷாஜகான் எனது விருப்பத்திற்குரிய நண்பர், அவரைக் காண்பதற்காக குடும்பத்துடன் சென்றிருந்தேன், திருமங்கலத்தில் வசிக்கும் அவரை இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அறிவேன், ஷாஜகான் சிறந்த சிறுகதை எழுத்தாளர்,காட்டாறு என்ற சிறுகதை தொகுப்பை வெளியிட்டிருக்கிறார், வம்சி பதிப்பக வெளியீடு, நல்ல பேச்சாளர், தீவிர இலக்கிய வாசகர், மாற்றுக் கல்வி குறித்த நூல்களை மொழியாக்கம் செய்து வருபவர்.பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார், ஷாஜகானும் எழுத்தாளர் கந்தர்வனும் ஜோடிகள், இருவரும் பேச ஆரம்பித்தால் சிரித்து உருள வேண்டியிருக்கும், கேலியும் கிண்டலுமாக பேசிக் …
சூழலியல் சார்ந்த கருத்துகளை முதன்மைப்படுத்தி மண்புழு என்றொரு அழகிய சிற்றிதழை திருவண்ணாமலையில் செயல்படும் குக்கூ அமைப்பு துவக்கியுள்ளது குக்கூ, குழந்தைகளின் படைப்பாளுமையை உருவாக்குவதில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அரிய அமைப்பாகும். மசானபு புகோகோவின் இயற்கைக்குத் திரும்பும் பாதை என்ற நூலை டாக்டர் வெ.ஜீவானந்தம் அவர்கள் மொழியாக்கம் செய்திருக்கிறார், அந்த நூலை தமிழ்நாடு பசுமை இயக்கத்துடன் இணைந்து குக்கூ விநியோகம் செய்கிறார்கள் இயற்கையைப் பாதுகாப்பது மற்றும் குழந்தைகளின் படைப்புலகம் சார்ந்த இதழாக மண்புழு உருவாக்கபட்டுள்ளதாக குக்கூ தெரிவிக்கிறது, முதல் …
எனக்கு இயல் விருது கிடைத்துள்ளதற்காக உயிர்மை நடத்திய பாராட்டுவிழா காமராஜர் அரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற்றது விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கவிப்பேரரசு வைரமுத்து , பேராசிரியர் ஞானசம்பந்தம், இறையன்பு ஐஏஎஸ், விஜயசங்கர்(எடிட்டர் பிரண்ட்லைன்) செம்மலர் ஆசிரியர் எஸ்ஏபெருமாள், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பாக உரையாற்றினார்கள் சூப்பர் ஸ்டாரின் உணர்ச்சிபூர்வமான உரை நிகழ்வின் தலையான விஷயமாக இருந்தது, எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியம் மீதான அவரது ஈடுபாடும் அக்கறையும் முன்னோடியான செயல்பாடு என்றே சொல்வேன் வைரமுத்து அவர்கள் எனது புத்தனாவது …
ஜனவரி 5ம் முதல் 17 வரை சென்னையில் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது, இதில் 6 தேதி முதல் 11ம் தேதி வரை தினமும் மாலை 4. 30 மணிக்கு உயிர்மை அரங்கிற்கு வருகை தருவேன், சந்திக்க விருப்பம் உள்ள வாசகர்கள் அவசியம் வரலாம் ••• இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர்களுடன் வாசகர்கள் சந்திக்கும் நேருக்கு நேர் நிகழ்ச்சியை பபாசி ஏற்பாடு செய்துள்ளது. விமர்சகர் க.நா.சு நூற்றாண்டையொட்டி அவர் பெயரிடப்பட்டுள்ள F 35 அரங்கில் இந்த …
நவம்பர் 21 முதல் 27 வரை சென்னை ருஷ்யக் கலாச்சார மையத்தில் ஏழு நாட்கள் உலக இலக்கியம் குறித்து தொடர் சொற்பொழிவு நடத்த இருக்கிறேன், தினமும் மாலை ஆறு மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும் அனைவரும் வருக.
உடற்கூறு வண்ணம் பாடலை எழுதியது அருணகிரி நாதர் இல்லை பட்டினத்தார் என்று நண்பர் கார்த்திகை பாண்டியன் சுட்டிக்காட்டி உள்ளார், என்னிடம் உள்ள பாவலர் சரித்திர தீபகம் அதை அருணகிரி நாதர் என்று அடையாளப்படுத்தியிருந்ததால் உருவான தவறு அது, மன்னிக்கவும் அருணகிரி நாதர் பற்றிய எனது அவதானிப்பு இந்த ஒருபாடலின் வழியாக மட்டும் உருவானதில்லை, அவரது திருப்புகழ் பற்றிய உயர்வெண்ணம் அப்படியே தானிருக்கிறது அது போலவே பட்டினத்தாரின் உடற்கூறு வண்ணம் மீதான வியப்பும் தீராமலேயிருக்கிறது இதன் ஆங்கில மொழியாக்கம் …
சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் வெளியான எனது நேர்காணலின் முதற்பகுதி •• சினிமா எக்ஸ்பிரஸின் தீபாவளி சிறப்பிதழ்க்காக, திரைப்படக் கல்லூரி மாணவர்களோடு ஒரு கலந்துரையாடலை நிகழ்த்தினால் என்ன? என்று தோன்றியது. அதன்விளைவாக எஸ்.ராமகிருஷ்ணன் உடன் ஒரு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தோம். சென்னை – கே.கே.நகர், பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகேயுள்ள “டிஸ்கவரி புக் பேலஸி’ல், ஒரு காலைப்பொழுதில் மனம் மயக்கும் புத்தகங்களோடும், ஆர்வம் தாங்கிய கேள்விகளோடு வந்திறங்கிய திரைப்படக்கல்லூரி மாணவர்களோடும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தன்னை பிணைத்துக் கொண்டார் விரிவான …
கொழும்பில் நடைபெற்ற தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் நீங்கள் கலந்து கொள்கிறீர்களா என்று கேட்டு எனக்கு நிறைய மின்னஞ்சல்கள் வந்தபடியே உள்ளன. நான் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. ** டிசம்பர் 10,11 ஆகிய இரண்டு தினங்கள் டெல்லி தமிழ்சங்கம் நடத்தும் தமிழ் இலக்கிய கருத்தரங்கில் கலந்து கொண்டு நவீன தமிழ்சிறுகதைகள் குறித்த கருத்துரை ஒன்றினை நிகழ்த்த இருக்கிறேன். ** விகடன் தீபாவளி மலரில் கண்ணகியோடு நடந்தேன் என்ற எனது நீண்ட பயண கட்டுரை வெளியாகி உள்ளது. சிலப்பதிகாரத்தை …
கிறிஸ்தபோர் நோலனின் இன்செப்ஷன் (Inception) திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தேன். ஒரு நிமிசம் எது நிஜம் எது கனவு என்று தெரியாதபடி நகரம் ஒளிர்ந்து கொண்டிருந்தது. கனவிற்குள் போய் எண்ணங்களை திருடி வருபவனை பற்றிய படம். ஒரு கனவினுள் மற்றொரு கனவை உருவாக்கி அதன்வழியே புதிதாக ஒரு எண்ணத்தை புகுத்த முடியுமா என்று கதைகளத்தை எடுத்து கொண்டு சர்ரியலிச சினிமா போல உருவாக்கியிருக்கிறார்கள். அற்புதமான முயற்சி, காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன, ஆனாலும் படம் சற்று குழப்பமானது. காட்சிகள் …