புத்தகக் கண்காட்சி

ஜனவரி 5ம் முதல் 17 வரை சென்னையில் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது, இதில்  6 தேதி முதல் 11ம் தேதி வரை தினமும் மாலை 4. 30 மணிக்கு உயிர்மை அரங்கிற்கு வருகை தருவேன், சந்திக்க விருப்பம் உள்ள  வாசகர்கள் அவசியம் வரலாம்

•••

இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர்களுடன் வாசகர்கள் சந்திக்கும் நேருக்கு நேர் நிகழ்ச்சியை பபாசி ஏற்பாடு செய்துள்ளது. விமர்சகர் க.நா.சு நூற்றாண்டையொட்டி அவர் பெயரிடப்பட்டுள்ள F 35 அரங்கில் இந்த சந்திப்புகள் நிகழ இருக்கின்றன. இதை பத்திரிக்கையாளர் ஞாநியும் பாரதி புத்தகாலயம் நாகராஜனும் இணைந்து ஒருங்கிணைக்கிறார்கள்

இந்த நிகழ்வில் ஜனவரி 8ம் தேதி மாலை ஆறு மணி முதல் எட்டு மணி வரை வாசகர்களுடன் கலந்துரையாட இருக்கிறேன்,

விருப்பமான நண்பர்கள், வாசகர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்

•••

ஜனவரி 11ம் தேதி தஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலின் தமிழ் மொழியாக்க வெளியீட்டு விழா தேவநேயப்பாவாணர் அரங்கில் மாலை ஐந்து மணிக்கு நடைபெற உள்ளது,

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டுள்ள இந்த நூலை புவியரசு  மொழியாக்கம் செய்திருக்கிறார், அதில் கலந்து கொண்டு கரமசோவ் சகோதரர்கள் நாவலைக் குறித்து பேச இருக்கிறேன்.

•••

ஜனவரி 12 முதல் ஒரு வாரகாலம் ஒரிசா மாநிலத்தின் ஊடாக பயணம் செய்ய இருக்கிறேன்.

•••

0Shares
0