கேள்வியின் நிழல்

புதிய சிறுகதை. ஜுலை 2022 கேமிரா ஓடிக்கொண்டிருந்தது. ராம்பிரசாத் கேமிராவைப் பார்க்கவில்லை. ஏதோ யோசனையில் ஆழ்ந்துவிட்டவரைப் போலிருந்தார். கேமிராவின் பின்புறமிருந்து திவ்யா சைகையால் அவரைப் பேசுமாறு சொன்னாள். அவர் அதைக் கவனித்ததாகத் தெரியவில்லை பேராசிரியர் ராம்பிரசாத்திற்குக் கணிதத்திற்கான உயரிய விருது ஒன்றை ஜப்பானிய அரசு அறிவித்திருந்தது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற அந்த விருதைப் பெற்ற முதல் தமிழர் என்பதால் அவரை நேர்காணல் செய்து  தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும் என்று நியூவிஷன் சேனல் முடிவு செய்திருந்தார்கள். விருது செய்தி …

கேள்வியின் நிழல் Read More »

ஜாக் லண்டன் நாவல்

ஜாக் லண்டனின் ஒயிட் ஃபேங் நாவலை டாக்டர் சந்திரமௌலி தமிழாக்கம் செய்திருக்கிறார். தேசாந்திரி பதிப்பகம் இந்த நூலை வெளியிடுகிறது ஜுலை 24 ஞாயிறு மாலை நான்கு மணிக்கு கோவை புத்தகக் கண்காட்சியின் தேசாந்திரி அரங்கில் இந்த நூல் வெளியிடப்படுகிறது. புதுமைப்பித்தன் மொழியாக்கம் செய்த அலெக்சாண்டர் குப்ரினின் யாமா நாவலையும், ஹெஸ்ஸேயின் சித்தார்த்த நாவலையும் தேசாந்திரி பதிப்பகம் பதிப்பித்துள்ளது. எனது சினிமா கட்டுரைகளின் தொகுப்பான சாமுராய்கள் காத்திருக்கிறார்கள் மறுபதிப்பினை தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

அஜந்தா கண்ணாடி.

புதிய சிறுகதை. ஜுலை 2022 அவன் கண்ணாடியை உடைத்தபோது மணி நான்கு இருபது. பள்ளிவிட்டுத் திரும்பியதும் எதற்காக முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்தான் என்று அவனுக்கே புரியவில்லை. ஆனால் அலமாரியின் நடுத்தட்டில் சாய்த்து வைக்கப்பட்ட கண்ணாடி கைதவறி விழுந்து சில்லுசில்லாகச் சிதறியதைக் கண்டதும் பயத்துடன் குனிந்து எடுத்து ஒட்டவைக்க முயன்றான். உடைந்த சில்லுகளில் துண்டுதுண்டாக அவனது உருவம் காட்சியளித்தது விநோதமாக இருந்தது. அம்மா வருவதற்குள் கண்ணாடியை ஒட்ட வைத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அடி வாங்கி முடியாது. அம்மா …

அஜந்தா கண்ணாடி. Read More »

சிரிக்கும் வகுப்பறையின் மாணவன்

ஜி.கோபி உலக இலக்கியத்தில் சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய டேவிட் காப்பர் பீல்டு, ஆலிசின் அற்புத உலகம், டோட்டோ சானின் ஜன்னலில் ஒரு சிறுமி, எக்சூபெரி எழுதிய குட்டி இளவரசன் போன்ற புத்தகங்கள் குழந்தைகளின் வாழ்வியலை பதிவு செய்ததில் முக்கியமானவை. அது போன்று தமிழில் எழுதப்பட்ட தேனி சீருடையானின் நிறங்களின் உலகம் புத்தகம் பள்ளி மாணவனின் வறுமையான வாழ்க்கை மற்றும் உளவியலை பேசக் கூடியது . அது போன்ற வரிசையில் வைத்து கொண்டாட வேண்டிய புத்தகம்தான் எழுத்தாளர். எஸ்.ரா …

சிரிக்கும் வகுப்பறையின் மாணவன் Read More »

கோவை புத்தகக் கண்காட்சியில்

கோவை புத்தகக் கண்காட்சி கொடீசியா அரங்கில் ஜுலை 22 முதல் 31 வரை நடைபெறுகிறது. இந்தப் புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது அரங்கு எண் 136, ஜுலை 24 ஞாயிறு கோவை வருகிறேன். மாலை 4 மணி முதல் தேசாந்திரி அரங்கில் இருப்பேன். விருப்பமான நண்பர்கள். வாசகர்கள் சந்திக்கலாம் ஜுலை 25 திங்கள் மாலை ஆறு மணிக்கு “ஏன் நாவல்கள் படிக்க வேண்டும்“ என்ற தலைப்பில் புத்தகக் கண்காட்சி அரங்கில் உரையாற்றுகிறேன் திங்கள் கிழமையும் …

கோவை புத்தகக் கண்காட்சியில் Read More »

கு.ப.ராவின் கடைசி நாட்கள்

கு.ப.ரா பற்றிக் கரிச்சான்குஞ்சு ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். இலக்கியச் சிந்தனையின் சார்பில் எழுதப்பட்ட இந்த நூலை வானதி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அதில் கு.ப.ராவின் வாழ்க்கை மற்றும் படைப்புகள் குறித்துச் சிறப்பாக எழுதியிருக்கிறார் கரிச்சான் என்ற பெயரில் கு.ப.ரா எழுதியிருப்பதால் அவரது சீடனாகத் தனது பெயரைக் கரிச்சான் குஞ்சு என்று மாற்றிக் கொண்டிருக்கிறார் நாராயணசுவாமி. கு.ப.ராவின் துயர்மிகுந்த வாழ்க்கையைப் படிக்கும் போது கண்ணீர் வருகிறது. இன்று நிகரற்ற சிறுகதையாசிரியராகக் கொண்டாடப்படும் கு.ப.ரா அன்று கண்டுகொள்ளப்படாத படைப்பாளியாக இருந்திருக்கிறார். ஆண் …

கு.ப.ராவின் கடைசி நாட்கள் Read More »

நேர் நோக்கும் கண்கள்.

இனிமையான பாடல். சிறப்பான காட்சிகள். கறுப்பு வெள்ளைக் காட்சிகள் மிகுந்த நெருக்கம் தருகின்றன. இந்தப் பாடலுக்குள் எத்தனையோ சொல்லப்படாத கதைகள் மறைந்திருப்பதை உணர முடிகிறது. Tony Allen – Go Back (feat. Damon Albarn) [Official Music Video] directed by Bernard Benant

கறுப்பும் வெள்ளையுமான வாழ்க்கை

– தமிழ்மதி நிமித்தம் நாவல் குறித்த விமர்சனம். தேவராஜ் எனும் சிறுவனுக்குத் தனது ஒன்பது வயதில் குளிர் காய்ச்சல் வந்ததில் இருந்து காது கேட்காது. அதனைத் தொடர்ந்து அவன் அனுபவிக்கும் தொடர் புறக்கணிப்புகளும், துரத்தும் அவமானங்களுமாக நித்தம் நித்தம் பெருங்கசப்பை அருந்தும் தேவராஜின் கதையே நிமித்தம். தன்னைச் சரிவரப் புரிந்து கொள்ளாத குடும்பம், தோசைக்கரண்டியால் அடிக்கும் தந்தை, இவர் தனது மூத்த மகனுக்கு மட்டும் பால்கோவா வாங்கி வருவார். காது கேட்க வேண்டி கோவில் கோவிலாக அலையும் …

கறுப்பும் வெள்ளையுமான வாழ்க்கை Read More »

முதல் நினைவு

இயக்குநர் இங்மர் பெர்க்மென் தான் பிறந்த சில நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகளைத் துல்லியமாக நினைவு கொண்டிருக்கிறார். அதைப் பற்றி தனது சுயசரிதையான The Magic Lantern நூலில் குறிப்பிடுகிறார். எனது நினைவில் மூன்று நான்கு வயதுகளில் நடந்த நிகழ்ச்சிகளே இருக்கின்றன. அதுவும் துல்லியமாக இல்லை. சில தெளிவற்ற காட்சிகள். சில முகங்கள். சில இடங்கள் மட்டுமே இருக்கின்றன. பெர்க்மென் பிறந்தபோது அவரது அம்மா உடல்நலமற்று இருந்த காரணத்தால் பால்புகட்டுவதற்கு தாதியை ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்தத் தாதியின் குறட்டைச் …

முதல் நினைவு Read More »