தஸ்தாயெவ்ஸ்கியின் ஓவியம்
ஃபியோதர் தஸ்தாயெவ்ஸ்கியின் புகழ்பெற்ற உருவப்படத்தை வரைந்தவர் ஓவியர் வசிலி பெரோவ். 1872-ல் வரையப்பட்ட இந்த ஓவியம் மாஸ்கோவில் உள்ள ட்ரெட்டியாகோவ் கேலரிக்காக வரையப்பட்டது. அப்போது தஸ்தாயெவ்ஸ்கியின் வயது 51. தனது இடியட் நாவலை எழுதிக் கொண்டிருந்தார். தொடராக அது வெளியாகிவந்தது. பேடன்பேடனுக்குச் சென்று சூதாடி பொருளை இழந்து அப்போது தான் ரஷ்யா திரும்பியிருந்தார். கடனில் தத்தளித்த காலமது. அவரது மனைவி அன்னாவும் உடல்நலமற்றிருந்தார். இந்த ஓவியத்தை வரைவதற்காக பெரோவ் ஒருவார காலம் தினமும் தஸ்தாயெவ்ஸ்கியை சந்தித்து அவரது …









