தமிழ் வாழ்க்கையின் புதிய பரிமாணம்.
கனகராஜ் பாலசுப்ரமணியம் கன்னடத்தில் எழுதும் தமிழ் எழுத்தாளர். இவரது வாட்டர்மெலன் என்ற சிறுகதைகளின் தொகுப்பினை நல்லதம்பி மொழியாக்கம் செய்திருக்கிறார். யாவரும் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார். சமீபத்தில் படித்த மிக முக்கியமான சிறுகதைத் தொகுப்பு. கனகராஜ் சிறந்த சிறுகதைகளுக்காக நிறைய விருதுகளைப் பெற்றிருக்கிறார் கனகராஜ். நூறு ஆண்டுகளுக்கு முன்பாக வேலையின் தமிழகத்திலிருந்து காரணமாகக் கர்நாடகாவிற்குப் புலம்பெயர்ந்து போய் அங்கேயே வேர்விட்டு வாழும் குடும்பத்தின் அகபுற உலகினை மிகச்செறிவாக எழுதியிருக்கிறார் கனகராஜ். இது ஒரு புதிய கதையுலகம். இதுவரை நாம் பதிவு …









