சிரிப்பை மறந்த இருவர்

. இத்தாலிய இயக்குநரான விட்டோரியா டி சிகா இயக்கிய two women 1960 ம் ஆண்டு வெளியான திரைப்படம். டி சிகாவின் மாஸ்டர் பீஸ் என்றே இதைச் சொல்ல வேண்டும். அவரது புகழ்பெற்ற பை சைக்கிள் தீவ்ஸ் படத்தினை விடவும் இப்படம் எனக்கு மிகவும் பிடித்தமானது. இதில் நடித்த சோபியா லாரன் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதினைப் பெற்றிருக்கிறார். நியோ ரியலிசப் படங்களில் முக்கியமான இப்படம் உலகச் சினிமாவின் காவியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நியோ ரியலிச திரைப்படங்கள் …

சிரிப்பை மறந்த இருவர் Read More »

சென்னையும் நானும் – சீசன் 2

சென்னையும் நானும் காணொளித் தொடர் மிகுந்த வரவேற்பு பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்ற ஆண்டில் பெருந்தொற்றுக்கால ஊரடங்கின் காரணமாக அதைத் தொடர முடியாமல் போனது. தற்போது மீண்டும் அதன் இரண்டாம் பகுதி ஒளிபரப்பாக உள்ளது. இந்தப் பகுதியில் சென்னையில் நான் சந்தித்த எழுத்தாளர்கள், சினிமா உலக அனுபவங்கள். மற்றும் மறக்கமுடியாத கலை நிகழ்வுகள். ஆளுமைகள். சென்னையின் வரலாறு குறித்த விஷயங்கள் இடம்பெற உள்ளன இந்தத் தொடரை உருவாக்குவது எனது மகன் ஹரி பிரசாத் , இதனை ஒளிப்பதிவு …

சென்னையும் நானும் – சீசன் 2 Read More »

வராத ரயில்

புதிய சிறுகதை அந்த ரயில் நிலையத்திற்கு மதுரை பாசஞ்சர்  பத்தரை மணிக்கு வந்து நிற்பது வழக்கம். சின்னஞ்சிறிய ரயில் நிலையமது. ஸ்டேஷன் மாஸ்டர் அறை புறாக்கூண்டு போல இருக்கும். அருகில் சிறிய ஸ்டோர் ரூம். அதையொட்டி கல்லால் ஆன இரண்டு பெஞ்சுகள். மூன்று தூங்குமூஞ்சி மரங்கள். ஒரு தண்ணீர்தொட்டி. அதில் எப்போதும் குடிதண்ணீர் இருக்காது. சிவப்பு ஒடு வேய்ந்த கட்டிடமது. சிவமணியை அழைத்துக் கொண்டு கிழவி அந்த ரயில் நிலையத்திற்கு வந்திருந்தாள். அவளை விட்டால் சிவமணிக்கு வேறு …

வராத ரயில் Read More »

நூல் பேசுவோம்

மஞ்சுநாத் எழுதியுள்ள கர்னலின் நாற்காலி குறித்த சிறிய அறிமுகம். *** நூல் பேசுவோம் – கர்னலின் நாற்காலி பூங்காவிற்குள் நுழைந்தவுடன்  ஊஞ்சலில்  அமர்ந்தாடும் சிறுமியின் மகிழ்ச்சிக்கு ஒப்பீடாக சொல்லியிருக்கலாம் கை நிறைய கலர் மிட்டாய்கள்  வைத்திருக்கும் சிறுவனின்  கொண்டாட்டத்திற்கு  ஈடாக சொல்லியிருக்கலாம் ஆபூர்வ வைரக்கற்கள் கண்டடைந்த  பூரிப்பை முகத்தில் காட்டியிருக்கலாம், வியாபாரியாக இருந்திருந்தால் என்றைக்குமில்லாமல் பாதி பூக்களுடன் திரும்பி செல்லும் பூக்காரம்மாவிற்கு இன்று ஒரே ஒரு மனிதன் முழுவதையும் சொன்ன விலைக்கு பேரம் பேசாமல் வாங்கி கொண்டால், …

நூல் பேசுவோம் Read More »

இரவின் சிறுபாடல்

புதிய சிறுகதை கடைசிப் பஸ்ஸைத் தவறவிட்டிருந்தான் ரகுபதி. வேலை தேடிச் சுற்றியலைகிறவன் சரியான நேரத்திற்கு வீட்டிற்குப் போய் என்ன ஆகப்போகிறது என்ற அவனது நினைப்பு தான் பேருந்தைத் தவறவிட முக்கியக் காரணம். இனி காலை ஐந்தரை மணிக்கு தான் அவனது கிராமத்திற்குச் செல்லும் பேருந்து வரும். அதுவரை இந்தப் பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டியது தான். என்ன செய்வது எனத் தெரியவில்லை. நேரத்தை கழிக்க வேண்டும். நெருக்கடியான சூழலில் காலம் நீண்டுபோய்விடக்கூடியது. அன்றைக்கும் அப்படித்தான். இப்போது தான் …

இரவின் சிறுபாடல் Read More »

சுழலும் பார்வைகள்-1

மராத்தி எழுத்தாளர் சரண்குமார் லிம்பாலேவிற்கு 2020ற்கான சரஸ்வதி சம்மான் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது டாடா நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்டது. பதினைந்து லட்ச ரூபாய் விருதுத் தொகை தருகிறார்கள். லிம்பாலே மராத்தியின் முக்கிய தலித் எழுத்தாளர். அவரது நான்கு நூல்கள் தமிழில் வெளியாகியுள்ளன. அவருக்கு எனது மனம் நிரம்பிய வாழ்த்துகள் தமிழ் இலக்கிய உலகிலிருந்து இந்த விருதினை இந்திரா பார்த்தசாரதி மற்றும் பேராசிரியர் மணவாளன் இருவரும் பெற்றுள்ளார்கள். •• எழுத்தாளர் உம்பர்த்தோ ஈகோவின் நூலகம் என்றொரு வீடியோவைப் பார்த்தேன். …

சுழலும் பார்வைகள்-1 Read More »

இந்திய இலக்கியத்தின் முகம்

.ரஷ்ய இலக்கியங்களையும் உலகின் சிறந்த படைப்புகளையும் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வரும் நீங்கள் ஏன் இந்திய இலக்கியங்களை அறிமுகம் செய்யவில்லை என்று நர்மதா என்ற இளம் வாசகி மின்னஞ்சலில் கேட்டிருந்தார். நேஷனல் புக் டிரஸ்ட் மற்றும் சாகித்ய அகாதமி மூலம் நிறைய இந்திய நாவல்கள், சிறுகதைகள் மொழியாக்கம் செய்யப்பட்டு மலிவு விலையில் வெளியிடப்பட்டுள்ளன. இதில் மிகச்சிறந்த சில நாவல்களுக்கு ஒரு விமர்சனம் கூட வெளியானதில்லை என்பது வருத்தமான விஷயமே என் கல்லூரி நாட்களில் எந்த எழுத்தாளரைச் சந்திக்கச் சென்றாலும் …

இந்திய இலக்கியத்தின் முகம் Read More »

உலோக விலங்குகள்

ஒவ்வொரு நாய்க்கும் அதன் இரவென்பதுண்டு -அய்யப்ப பணிக்கர் அவனது வீட்டின் வரவேற்பறை விலங்குகளால் நிரம்பியிருக்கிறது. விலங்குகள், வெண்கலம், எஃகு, பித்தளையில் வார்க்கப்பட்டவை.. அமைதியாக இருக்க அவை பழக்கப்படுத்தப்பட்டிருப்பினும், நேற்றிரவில் பெரும் அமளியை ஏற்படுத்திவிட்டன. நேற்று நாய்களின் முறை. ஒன்றின் குரைப்பு மற்றவைகளைத் தூண்டிவிட்டது. அதைக் கேட்டு நரிகள் அமைதியற்று ஊளையிடத் தொடங்குகின்றன. பித்தளைச் சிங்கம் கர்ஜிக்க எழுந்தது. பாடப் புத்தகங்களில் கர்ஜனை என்பதே சொல்; முயற்சித்து, ஆனால் சளியிருப்பதால், கைவிட்டுத் தானாகவே கூண்டுக்குத் திரும்பிவிட்டது. கச்சேரி முடிந்து …

உலோக விலங்குகள் Read More »

சுபமங்களா இதழில்

சுபமங்களா இதழில் வெளியான எனது சிறுகதைகள் குறித்து வண்ணநிலவன் எழுதியுள்ள இந்தக் குறிப்பு சுபமங்களா நாட்களை நினைவுபடுத்தியது. கோமலின் அன்பு மறக்கமுடியாதது. சுபமங்களா இதழின் பங்களிப்பு பற்றி வெளியான சிறப்பு மலரில் இந்தக் கட்டுரையை வண்ணநிலவன் எழுதியிருக்கிறார். சுபமங்களா இதழ்கள் யாவும் இணையத்தில் வாசிக்க கிடைக்கிறது. https://www.subamangala.in/

ஒளியை வாசிக்கிறவன்

அட்சரம் இதழில் வெளியான சிறுகதை – மீள்பிரசுரம். அந்த அறையில் அவனும் திமிங்கிலத்தையும் தவிர வேறு யாருமேயில்லை. கடலைவிட்டு வெளியேறி நாற்பதாண்டுகளாகி, உரு அழிந்து எலும்பு பொறியென நீண்டு நிசப்தித்திருக்கும் அந்தத் திமிங்கலத்தை எப்போது காணும் போதும் பிரம்மாண்டம் குறைவதேயில்லை. கோபாலராவ் திரும்பவும் அதன் வால் அருகே நின்றவனாக மொத்த திமிங்கலத்தையும் ஒருமுறை பார்த்தான். கண்களில் அடங்காத உருவம். மீனின் அடிவயிறு ஊஞ்சலென ஆடிக்கொண்டிருந்தது. இந்தத் திமிங்கலம் தன்னை விழுங்கியிருந்தால் இதே விலாவின் இரு எலும்புகளை பற்றியபடி …

ஒளியை வாசிக்கிறவன் Read More »