ஆங்கிலத்தில் குறுங்கதைகள்

பிரண்ட்லைன் இதழில் எனது கர்னலின் நாற்காலி தொகுப்பிலிருந்து இரண்டு குறுங்கதைகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. இந்தக் கதைகளை மொழியாக்கம் செய்திருப்பவர் மாலினி சேஷாத்ரி. மினி கிருஷ்ணன் இதைத் தேர்வு செய்து அறிமுகம் செய்திருக்கிறார்.    Thanks Frontline Mini Krishnan Malini Seshadri ••

இந்தியன் குக்

புதிய சிறுகதை அந்த வனவிடுதியில் கிளாவெல்லைத் தவிர வேறு எவரும் தங்கியிருக்கவில்லை அது விருந்தினர்களுக்கான விடுதி என்ற போதும் வால்டர் கிளாவெல் வனத்துறை அதிகாரியாக வந்தபிறகு அதைத் தன்வசமாக்கி வைத்துக் கொண்டான். வேட்டைக்கு வரும் ஜமீன்களுக்குக் கூட அந்த விடுதியில் தங்க இடம் கிடைப்பதில்லை. இங்கிலாந்திலிருந்து 1845ல் இந்தியாவிற்கு வந்த வால்டர் கிளாவெல் வன அதிகாரியாக அஸ்ஸாமில் தான் பணியில் அமர்த்தப்பட்டான். ஏழு வருஷஙகள் அங்கே பணியாற்றியபிறகே தென்வனம் எனப்படும் அந்தக் காட்டினை நிர்வாகம் செய்ய அனுப்பி …

இந்தியன் குக் Read More »

கறுப்பு ரத்தம்

புதிய சிறுகதை நர்மதா லிப்டை விட்டு வெளியே வந்தபோது இரண்டு கார்களுக்கும் நடுவில் இருந்த இடைவெளியில் அந்தக் கிழவர் தன் பேத்தியுடன் நிற்பதைக் காணமுடிந்தது. மூன்று நாட்கள் முன்பாக அந்தக் கிழவர் அவள் வேலை செய்யும் சேனலிற்கு வந்து தன்னுடைய பேத்தியின் கல்லூரிப் படிப்பிற்குத் தேவையான பண உதவி வேண்டி டிவி செய்தியில் ஒளிபரப்பும்படி கேட்டார். அப்படிச் செய்யமுடியாது என அவர்கள் மறுத்துப் பேசியதை அவர் கேட்டுக்கொள்ளவேயில்லை. கிழவருக்கு எழுபது வயதிருக்கும். தோளைவிட இறங்கிய கைகள் கொண்ட …

கறுப்பு ரத்தம் Read More »

காற்றில் பறக்கும் மலர்

புதிய சிறுகதை கரணின் டீசர்டை அபர்ணா துவைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. இப்படிக் காலை ஐந்து மணிக்கு பாதி உறக்கத்திலிருந்து எழுந்து வந்து அவனது டீசர்டை ஏன் துவைத்துக் கொண்டிருக்கிறாள் என வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். பின்கதவு பாதித் திறந்திருந்தது. வாழைமரத்தில் அசைவில்லை. அதன் விநோதநிழல் சரிந்து விழுந்த, மஞ்சள் வெளிச்சத்தில் இப்படி அபர்ணாவைப் பார்க்க கலக்கமாகவே இருந்தது. கலைந்த கூந்தலுடன் சேலையை இடுப்பில் தூக்கி சொருகியபடியே அவள் துணியினைக் கசக்கிக் கொண்டிருந்தாள். அருகிலிருந்த பிளாஸ்டிக் வாளியில் சோப் …

காற்றில் பறக்கும் மலர் Read More »

கிணற்றின் வயது

புதிய சிறுகதை அவர்கள் மூன்று பேர் வந்திருந்தார்கள். மூவரில் உயரமாக இருந்தவருக்கு வயது எழுபதிற்கும் மேலிருக்கும். ஈட்டி போன்ற உறுதியான உடற்கட்டு கொண்டிருந்தார். தோளில் ஒரு துண்டு. அழுக்கடைந்த வேஷ்டி. உடன் வந்திருந்த இரண்டு பேரும் இளைஞர்கள். பெரியவர் கையில் ஒரு மஞ்சள் பையிருந்தது. அதில் ஏதோ ஒரு பொருளைச் சுற்றி வைத்திருந்தார். வீட்டின் பின்புறமிருந்த கிணற்றடிக்கு அவர்கள் போய் நின்றபோது விசாலாட்சி பூக் கட்டிக் கொண்டிருந்தாள். அவளுக்கு எழுபது வயது நடந்து கொண்டிருந்தது. தலையில் ஒரு …

கிணற்றின் வயது Read More »

நிழல் கலைஞன்

புதிய சிறுகதை “பிகாசோ வெளியே வாருங்கள்“ என்று சப்தமாக அழைத்தாள் ஜாக்குலின் அவர் குளிப்பதற்காக வெற்றுடம்புடன் அரைக்கால் டிராயர் மட்டும் அணிந்தபடியே நின்றிருந்தார். அவரது காலை நேரம் மிகத் தாமதமாகவே துவங்குவது வழக்கம். பல நாட்கள் இரவில் நண்பர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு மிதமிஞ்சிய போதையில் வீடு திரும்புவதற்குப் பின்னிரவாகிவிடும். சில இரவுகளில் அவர் கடற்கரைக்குச் சென்று தனியே நடப்பதும் உண்டு. விருந்தில் வெளிப்படும் பகட்டும் போலியான உரையாடல்களும் அவரைச் சலிப்படையச் செய்திருந்தன. மனிதர்களின் பொய்யான …

நிழல் கலைஞன் Read More »

நானுமொரு திராட்சை

கீறல் பிரதிகளின் தனிமை என்ற கவினின் கவிதைத் தொகுப்பு சமீபமாக வெளியாகியுள்ளது. இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளைப் படித்து வியந்து அவரைப் பாராட்டுவதற்காகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றும் கவினின் இரண்டாவது கவிதை தொகுதி இது என்றார். பாஷோ என்ற கவிதை இதழ் ஒன்றினையும் கொண்டுவந்திருக்கிறார். அவற்றை நான் பார்த்திருக்கிறேன். கீறல் பிரதிகளின் தனிமையில் கவிஞர் தேவதச்சனின் பாதிப்பு நிறையவே இருக்கிறது என்றாலும் அசலான தருணங்களை, தனித்துவமான கவிமொழியில் கவின் எழுதியிருக்கிறார். அது பாராட்டிற்குரியது. வடிவ …

நானுமொரு திராட்சை Read More »

ஐந்து வருட மௌனம்

புதிய சிறுகதை பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. அந்த முசாபரி பங்களாவின் வெளியே அதிகாலையில் இவ்வளவு பேர் கூடிவிடுவார்கள் என்று ராஜன் எதிர்பார்க்கவில்லை. காந்தியைக் காண்பதற்காகக் கிராமவாசிகள் திரண்டிருந்தார்கள். தினசரி காலை நான்கு மணிக்குப் பிரார்த்தனை செய்வது காந்தியின் வாழ்க்கையில் என்றும் மாறாத பழக்கமாக இருந்தது. இன்னமும் சூரியன் உதயமாகவில்லை. இருளுக்குள்ளாகவே நடந்து கிராமவாசிகள் வந்திருந்தார்கள். இரண்டாயிரம் பேருக்கும் மேலிருக்கும். அதில் பாதிக்கும் மேல் பெண்கள். அவர்கள் முதன்முறையாகக் காந்தியோடு ஒன்றாகப் பிரார்த்தனை செய்கிறார்கள். யாருக்காக அந்தப் பிரார்த்தனை, …

ஐந்து வருட மௌனம் Read More »

காலி நாற்காலி

பண்டிட் ரவிசங்கரின் இசை குறித்த தேடுதலின் போது இணையத்தில் தற்செயலாக A Chairy Tale என்ற குறும்படத்தைப் பார்த்தேன். நார்மன் மெக்லாரன் என்ற கனேடிய அனிமேஷன் இயக்குநர் உருவாக்கிய படம். இதற்கு ரவி சங்கர் இசையமைத்திருக்கிறார்.. அற்புதமான இசை. சதுர்லாலுடன் இணைந்து இந்த இசைக்கோர்வையை உருவாக்கியிருக்கிறார் ரவிசங்கர். பரவசமூட்டுகிறது இசை ஒன்பது நிமிஷங்கள் ஓடும் இந்தக் குறும்படம் 1957ல் உருவாக்கப்பட்டிருக்கிறது. சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதிற்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. ஒரு நாற்காலியில் அமருவதற்காக ஒரு இளைஞன் முயல்கிறான். …

காலி நாற்காலி Read More »

தாகூரின் கூப்பிய கரங்கள்

மகாகவி தாகூரின் வாழ்க்கை குறித்துச் சத்யஜித் ரே எழுதி இயக்கிய ஆவணப்படம் Rabindranath Tagore. 1961 ஆம் ஆண்டுத் தாகூரின் நூற்றாண்டில் வெளியிடப்பட்டது. சத்யஜித் ரே, சாந்தி நிகேதனிலுள்ள விஸ்வபாரதியில் பயின்றவர். தலை சிறந்த இயக்குநராக மட்டுமின்றிச் சிறந்த இசையமைப்பாளராகவும் ஓவியராகவும் எழுத்தாளராகவும் வடிவமைப்பாளராகவும் விளங்கியவர். இந்தப் பன்முகத்தன்மை சாந்தி நிகேதனிலிருந்துதான் உருவானது. நேருவின் ஆலோசனைப்படியே இந்த ஆவணப்பட உருவாக்கம் திட்டமிடப்பட்டது. நேருவின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படமாக்க வேண்டும் என்ற எண்ணம் ரேயிற்கு இருந்தது. இதற்காக நேருவைச் …

தாகூரின் கூப்பிய கரங்கள் Read More »