ஒவிய நூல்கள்

தேசாந்திரி பதிப்பகம் எனது ஒவிய நூல்களின் புதிய பதிப்பினை வெளியிட்டுள்ளது. சென்னைப் புத்தகக் கண்காட்சி தேசாந்திரி அரங்கு எண் 494 & 495ல் இந்த நூல்களைப் பெறலாம்.

புதிய வெளியீடுகள்

தேசாந்திரி பதிப்பகம் சார்பில் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வெளியாகும் புதிய வெளியீடுகள். புத்தகக் கண்காட்சி அரங்கு எண் 494 & 495 ல் புதிய நூல்களைப் பெறலாம்.

தேசாந்திரி அரங்கு

சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது கடை எண் 494 மற்றும் 495. எட்டாவது நுழைவாயிலின் இறுதியில் அமைந்துள்ளது. பிப்ரவரி மாதம் 24ம் தேதி முதல் மார்ச் 9 வரை புத்தக் காட்சி நடைபெறுகிறது தினமும் காலை 11 மணி இரவு 8 வரை இந்தக் கண்காட்சி நடைபெறும். எனது எல்லா நூல்களையும் தேசாந்திரி அரங்கில் பெற்றுக் கொள்ளலாம். அனைவரும் வருக

கதையும் திரையும்

18வது சென்னைத் திரைப்படவிழாவில் நடைபெறும் மாஸ்டர் கிளாஸ் நிகழ்வில் நேற்று மதியம் திரைக்கதை எழுதுவது குறித்து உரை நிகழ்த்தினேன். அரங்கு நிரம்பிய கூட்டம். எண்பது சதவீதம் இளைஞர்கள். அந்த உரையில் இடம்பெற்ற சில விஷயங்கள் இவையே. சிட் பீல்டின் திரைக்கதை எழுதுவது எப்படி என்ற புத்தகம் காலாவதியான ஒன்று. நமக்கு அதன் கட்டமைப்பு மற்றும் வடிவாக்க முறை பொருத்தமானதில்லை. சிட் பீல்ட் எந்தப் படத்திற்கும் திரைக்கதை எழுதியவரில்லை. அவர் ஒரு ஆய்வாளர். பயிற்சி வகுப்பு எடுப்பவர். ஹாலிவுட் …

கதையும் திரையும் Read More »

ஸ்டான்லிக்கு ஆயிரம் வேலைகள்

நகைச்சுவை நடிகர் ஜெர்ரி லூயிஸ் படங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். சோர்வாக உணரும் நாட்களில் அவரது படங்களை மறுபடி பார்ப்பேன். உற்சாகம் தானே தொற்றிக் கொண்டுவிடும் சில நாட்களுக்கு முன்பு ஜெர்ரி லூயிஸ் நடித்த The Bellboy திரைப்படத்தைப் பார்த்தேன். படத்தின் துவக்கக் காட்சியில் பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கற்பனையான நிர்வாகத் தயாரிப்பாளர் ஜாக் ஈ. முல்ச்சர் படத்தை அறிமுகப்படுத்துகிறார் அப்போது இந்தப் படத்தில் கதை கிடையாது. திருப்பங்கள் எதுவும் கிடையாது. இது ஒரு கதாபாத்திரத்தின் சில …

ஸ்டான்லிக்கு ஆயிரம் வேலைகள் Read More »

நைல் நதியில் ஒரு பயணம்

புகழ்பெற்ற நைல் நதியின் ஊடாக வரலாற்றுப்பேராசிரியர் பெத்தனி ஹியூஸ் ஆயிரம் மைல் நீண்ட பயணம் ஒன்றை மேற்கொண்டிருக்கிறார். இந்தப் பயணம் நான்கு பகுதிகள் கொண்ட ஆவணப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. The Nile: Egypt’s Great River with Bettany Hughes என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். இதில் எகிப்தின் வரலாற்றையும் நைல் நதிக்கரை நாகரீகத்தையும் அழகாக, விரிவாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். பெத்தனியோடு நாமும் படகில் பயணம் செய்து பிரமிடுகளையும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களையும் பார்வையிடுகிறோம். விதவிதமான பாரம்பரிய உணவு வகைகளை, …

நைல் நதியில் ஒரு பயணம் Read More »

காலைக் குறிப்புகள் 30 சிறப்பு மௌனம்.

நோபல் பரிசு பெற்ற பின்பு  ஜப்பானிய எழுத்தாளரான கென்ஸாபுரோ ஒயி இனி தான் எழுதப்போவதில்லை. தன்னுடைய வேலை முடிந்துவிட்டது என்று ஒரு பேட்டி கொடுத்தார். ஏன் அப்படி சொல்கிறீர்கள் என பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு. என் எழுத்திற்கு அடிப்படையாக ஒரேயொரு காரணமிருந்தது அது என் மகன் ஹிக்காரி. மூளை வளர்ச்சியற்ற அவன் நலமடைய வேண்டும் என்பதற்காகவே எழுதினேன். அந்தப் பணியை சரியாக செய்துவிட்டதாக உணர்கிறேன். ஆகவே இனி எழுதத் தேவையில்லை என்று பதில் சொன்னார் உங்கள் மகனுக்காக மட்டும் …

காலைக் குறிப்புகள் 30 சிறப்பு மௌனம். Read More »

காட்டு வாத்துடன் பறந்து செல்வேன்

– ஜப்பானிய எழுத்தாளர் கென்ஸாபுரோ ஒயி நோபல் பரிசு ஏற்புரையின் ஒரு பகுதி தமிழில் எம்.எஸ். குழப்பம் நிறைந்த முதல் உலக மகா யுத்தத்தின் போது நான் ஒரு சிறு பையனாயிருந்தேன். இங்கிருந்து ஆயிரக்கணக்கான மைல் தொலைவில், ஜப்பான் தீவுக்கூட்டத்தில் ஷிக்கோகு தீவின் தனிமையான மரங்களடர்ந்த பள்ளத்தாக்கில் வசித்து வந்தேன். அப்போது இரண்டு புத்தகங்கள் என்னைக் கவர்ந்திருந்தன. The Adventures of Huckleberry Finn மற்றும் The Wonderful Adventures of Nils. இந்த உலகம் முழுவதையும் …

காட்டு வாத்துடன் பறந்து செல்வேன் Read More »

நீலம் இதழில்

ஓர் எழுத்தாளனும் சில கதாபாத்திரங்களும் என்ற தலைப்பில் தொடர்கட்டுரைகளை நீலம் இதழ் வெளியிட்டு வருகிறது. அதில் எனக்குப் பிடித்த தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனை நாவலின் நாயகன் ரஸ்கோல்நிகோவ் குறித்து எழுதியிருக்கிறேன். பிப்ரவரி 2021 நீலம் இதழில் வெளியாகியுள்ளது.

திரைப்படவிழாவில்

சென்னையில் நடைபெறும் சர்வதேசத் திரைப்படவிழாவின் மாஸ்டர் கிளாஸ் நிகழ்வில் பிப்ரவரி 19 மாலை மூன்று மணிக்கு உரையாற்றுகிறேன். சத்யம் திரையரங்கிலுள்ள சிக்ஸ் டிகிரி அரங்கில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.