திரைக்குப் பின்னால்

Mank என்ற டேவிட் பிஞ்சர் இயக்கிய படத்தைப் பார்த்தேன். இந்த ஆண்டு ஆஸ்கார் பரிந்துரை பட்டியலில் இருக்கிறது. நிச்சயம் விருது பெறும் என்றே நம்புகிறேன். கறுப்பு வெள்ளையில் மிகச் சிறப்பாகப் படமாக்கியிருக்கிறார்கள். ஆர்சன் வெல்ஸ் இயக்கிய சிட்டிசன் கேன் ஹாலிவுட் சினிமா வரலாற்றில் சாதனைப்படமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் படத்தை இயக்கியபோது ஆர்சன் வெல்ஸிற்கு 24 வயது. படத்திற்குச் சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார் விருது அறிவிக்கபட்ட போது அதைப் பெற்றுக்கொள்ள வெல்ஸ் நேரில் செல்லவில்லை. படத்தின் திரைக்கதையை அவர் …

திரைக்குப் பின்னால் Read More »

ரஸ்கோல்நிகோவ்வின் ட்வீட்

உலகம் முழுவதும் தஸ்தாயெவ்ஸ்கியை எப்படி எல்லாம் படிக்கிறார்கள். எப்படி எல்லாம் கொண்டாடுகிறார்கள் என்பது வியப்பளிக்கிறது. 1866ல் குற்றமும் தண்டனையும் (Crime and Punishment ) நாவல் தொடராக 12 மாதங்கள் வெளியானது. பின்பு 1867ல் அந்த நாவல் முழுமையான ஒரே நூலாக வெளியானது. அன்று முதல் இன்றுவரை எவ்வளவு பிரதிகள் இந்த நாவல் விற்றுள்ளது என்று துல்லியமாக எவராலும் சொல்ல முடியாது. நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியிருக்கிறது. 1867 முதல் 2021 வரை எத்தனை தலைமுறை அந்த …

ரஸ்கோல்நிகோவ்வின் ட்வீட் Read More »

கதைகளின் வேட்டைக்காரன்.

எடுவர்டோ காலியானோ லத்தீன் அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளர். வரலாற்றாசிரியர். இவரது வரலாறு என்னும் கதை மணற்கேணி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதனை ரவிக்குமார் தமிழாக்கம் செய்திருக்கிறார். காலியானோவின் லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்த நாளங்கள் என்ற வரலாற்று நூலும் தமிழில் வெளியாகியுள்ளது. காலியானோ வரலாற்றின் மையப்புள்ளிகளை, முக்கிய இயக்கங்களை, அறியப்படாத உண்மைகளை, பண்பாட்டு விநோதங்களைச் சிறிய துண்டுகளாகப் பதிவு செய்கிறார். அவை மின்மினிப்பூச்சியிடமிருந்து வெளிப்படும் வெளிச்சம் போன்றது. சர்வதேச அரசியல் மற்றும் பண்பாட்டு வரலாற்றை ஆழ்ந்து வாசித்த ஒருவரால் …

கதைகளின் வேட்டைக்காரன். Read More »

புத்தரின் சொற்கள்.

தீக நிகாயம் என்ற பௌத்த மறைநூலை மு.கு.ஜகந்நாத ராஜா மொழியாக்கம் செய்திருக்கிறார். திரிபிடகங்களில் ஒன்றான சுத்தபீடகத்திலுள்ள தீக நிகாயம் புத்தரின் போதனைகளை விரிவாக உணர்த்துகிறது. இராஜபாளையத்தில் வசித்து வந்த மு.கு.ஜகந்நாத ராஜா அவர்களை நேரில் சந்தித்துப் பழகியிருக்கிறேன். அவரது நூலகத்திற்குச் சென்று பௌத்தம் தொடர்பான நூல்களை வாசித்திருக்கிறேன். மணிமேகலை மன்றம் அமைப்பை நடத்தி வந்த மு.கு.ஜகந்நாத ராஜா சமஸ்கிருதம், பிராகிருதம். பாலி மொழிகளைக் கற்றவர். மணிமேகலையை ஆழ்ந்து படிப்பதற்காகவே தான் பாலி மொழியினைக் கற்றுக் கொண்டதாகக் கூறினார். …

புத்தரின் சொற்கள். Read More »

போர்ஹெஸின் பயணம்.

அமெரிக்க எழுத்தாளரான ஜெய் பரினி இதுவரை எட்டு நாவல்களை எழுதியுள்ளார், டால்ஸ்டாய் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இவர் எழுதிய தி லாஸ்ட் ஸ்டேஷன் நாவல் திரைப்படமாக வெளிவந்துள்ளது. நாவல் மற்றும் திரைப்படம் இரண்டும் மிகச்சுமாரானவை என்றே சொல்வேன். இரண்டிலும் டால்ஸ்டாயின் ஆளுமையும் வாழ்க்கை நிகழ்வுகளும் சரியாக வெளிப்படவில்லை. ஸ்டீன்பெக், வில்லியம் பாக்னர், ராபர்ட் பிராஸ்ட் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாற்றை ஜெய் பரினி எழுதியிருக்கிறார். தகவல் துணுக்குகள் என்பதைத் தாண்டி இந்த வாழ்க்கை வரலாற்று …

போர்ஹெஸின் பயணம். Read More »

சிரிப்பு பாதி அழுகை பாதி

எங்க வீட்டுப் பெண் படத்தில் இடம்பெற்ற சிரிப்பு பாதி அழுகை பாதிச் சேர்ந்ததல்லவோ மனித ஜாதி பாடல் திடீரெனக் காலையில் நினைவிற்கு வந்தது. பழைய பாடல்களில் எந்தப் பாடல் எப்போது நினைவில் கிளர்ந்து எழும் என்று சொல்ல முடியாது. அந்த நாள் முழுவதும் அந்தப் பாடல் மனதில் ஒடிக் கொண்டேயிருக்கும். கே.வி.மகாதேவன் இசையில் கண்ணதாசன் எழுதிய பாடல்.. : P.B.ஸ்ரீநிவாஸ் அற்புதமாகப் பாடியிருப்பார். எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. இந்தப் பாடலில் நாகையா மெய்யுருகப் பாடுகிறார். …

சிரிப்பு பாதி அழுகை பாதி Read More »

காதலின் ஆயிரம் ஆண்டுகள்

அது ஆயிரம் ஆண்டாக இருக்கலாம் அல்லது நேற்று தானா நாங்கள் பிரிந்தது. இப்போது கூட, என் தோளில், உன் நேசமான கையை உணர்கிறேன் என்ற கவிதையின் வழியே தான் யோசனோ அகிகோ அறிமுகமானார். ஜென் கவிதைகளை போன்ற வரிகளால் ஈர்க்கப்பட்டு RIVER OF STARS -Selected Poems of Yosano Akiko என்ற அவரது கவிதை தொகுப்பினை வாசித்தேன். கவிதை என்பது உண்மையான உணர்வுகளின் சிற்பம். என்கிறார் அகிகோ அவரது ஒரு கவிதையில் வெந்நீர் குளியலுக்குப் பின்பு …

காதலின் ஆயிரம் ஆண்டுகள் Read More »

தேவதைகளின் தோழன்

ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் Andersen. Zhizn bez lyubvi என்ற ரஷ்யத் திரைப்படத்தைப் பார்த்தேன். இரண்டு பாகங்களாக வெளியாகியுள்ளது சிறார்களுக்கான படமாக இதை உருவாக்கவில்லை. விசித்திரமான நிகழ்வுகளும் நிஜமான அனுபவங்களும் ஒன்று சேர்ந்த உளவியல் படைப்பாகவே படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆண்டர்சனின் நினைவுகளே படத்தை முன்னெடுக்கின்றன. சிறந்த ஒளிப்பதிவு மற்றும்  இசை படத்தின் தனித்துவமாகும். சிறுவர்களுக்கான தேவதை கதைகளை எழுதி உலகப் புகழ்பெற்றவர் ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன் .The Steadfast Tin Soldie, The …

தேவதைகளின் தோழன் Read More »

சென்னை புத்தகக் கண்காட்சி

44 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி துவங்குகிறது. நந்தனம் YMCA மைதானத்தில் பிப்ரவரி 24 முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை 14 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும் . அரசு விதித்துள்ள பாதுகாப்புக் கட்டுப்பாடுகளுடன் இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளதாகப் பபாசி அறிவித்துள்ளது

மேகம் போல வாழ்க்கை

போலந்தில் வாழ்ந்த ஜிப்ஸி இனக்குழுவைச் சார்ந்த கவிஞர் பபுஸ்ஸாவின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் Papusza திரைப்படத்தைப் பார்த்தேன். 2013ல் வெளியான படமிது. கறுப்பு வெள்ளையில் உருவாக்கப்பட்ட காவியம் என்றே இதைச் சொல்வேன். ஓவியங்களில் காணப்படுவது போல அகன்ற நிலக்காட்சியினை வெகு நேர்த்தியாகத் திரையில் பதிவு செய்திருக்கிறார்கள். முடிவற்ற நிலவெளியில் ஜிப்ஸிகள் குதிரைவண்டிகளில் பயணம் செய்வது, முகாமிட்டுத் தங்குவது. அவர்களின் இரவு வாழ்க்கை, நடனம், வாழ்க்கை நெருக்கடிகள். இரண்டாம் உலகப்போரின் போது உயிர்தப்பி அலைந்த போராட்டம் என ரோமா …

மேகம் போல வாழ்க்கை Read More »