இந்தி இதழில்
வாகர்த் என்ற இந்தி இலக்கிய இதழில் எனது கட்டுரை இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.
வாகர்த் என்ற இந்தி இலக்கிய இதழில் எனது கட்டுரை இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.
திரைப்பயணி காணொளித் தொடரின் எட்டாவது பகுதியில் The Last Emperor திரைப்படம் குறித்துப் பேசியுள்ளேன்
1893ல் வட இந்திய கிராமங்களில் மணப்பெண் கடத்தல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருமண வீட்டிற்குள் புகுந்து மணப்பெண்ணை யாரோ கடத்திப் போய்விடுகிறார்கள். யார் அவன் என்றோ, பெண்ணை எப்படிக் கடத்திக் கொண்டு போகிறான் என்றே கண்டறிய முடியவில்லை. இந்தக் கடத்தலுக்குப் பயந்து மணப்பெண் யார், எங்கே திருமணம் நடக்கிறது என்ற தகவல்களை ரகசியமாக வைத்துக் கொண்டார்கள். மணப்பெண்ணை ஊர்வலமாக அழைத்து வருவதை நிறுத்திக் கொண்டார்கள். குடும்பத்தினர் தவிர வேறு எவரும் திருமணத்திற்கு அழைக்கபடவுமில்லை. இவ்வளவு எச்சரிக்கையாக நடந்தாலும் …
உலக சினிமாவை அறிமுகப்படுத்தும் திரைப்பயணி தொடரின் 7 வது பகுதி வெளியாகியுள்ளது. இதில் சாப்ளின் நடித்து இயக்கிய லைம்லைட் திரைப்படம் குறித்துப் பேசியிருக்கிறேன்
ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படங்கள் பெரும்பாலும் விலங்குகளை மையப்படுத்தியோ, தேவதை கதைகளையோ, விஞ்ஞானப்புனைவுகளையோ மையப்படுத்தி உருவாக்கப்படுகின்றன. இதற்கு மாறாக இயற்கையின் பிரம்மாண்டத்தை, மனிதர்கள் இயற்கையோடு கொள்ள வேண்டிய உறவினை. போரின் விளைவுகளை, சிறார்களின் வியப்பூட்டும் கற்பனைகளை ஜப்பானிய அனிமேஷன் படமாக ஹயாவோ மியாசாகி உருவாக்குகிறார். அதே ஜப்பானில் வெளியாகும் அனீம் படங்கள் முற்றிலும் வேறுபட்டவை. அவை தனியொரு திரைப்பட வகைமையாகும். சீனா, பிரான்ஸ் மற்றும் ஈரானிலும் வரலாற்றுப் பின்புலத்தைக் கொண்ட அனிமேஷன் படங்களைச் சமீபமாக உருவாக்குகிறார்கள். அவை பெரிய …
புதிய சிறுகதை. ஆகஸ்ட் 20.2025 அது இரண்டரை நிமிஷ வீடியோ. விஜயராகவனின் வாட்ஸ்அப்பில் வந்திருந்தது. இரண்டு நாட்களுக்குள் பத்து முறைக்கும் மேலாகப் பார்த்துவிட்டிருந்தார். துனிசியாவைச் சேர்ந்த ஒரு இளம்பெண் தலையில் ஆப்பிள் ஒன்றை வைத்துக் கொண்டு ஆடுகிறாள். பூக்கள் நிரம்பிய அடர்நீல பாவாடை. முடிச்சிட்ட வெண்ணிற ஜாக்கெட். காதில் இரண்டுவகை காதணிகள். கையில் பட்டாம்பூச்சி உருவம் கொண்ட பிரேஸ்லெட். அவள் சுழன்றாடும் வேகத்திலும் ஆப்பிள் தலையிலிருந்து கீழே விழவில்லை. அந்தப் பெண்ணிற்கு இருபது வயதிற்குள் இருக்கக் கூடும். …
திரைப்பயணி காணொளித் தொடரின் ஆறாவது பகுதி வெளியாகியுள்ளது. இதில்12 Angry Men குறித்துப் பேசியிருக்கிறேன்
ஆகஸ்ட் 15 மாலை நாயகி 1947 என்ற நிகழ்வு நடைபெறுகிறது சுதந்திரப் போராட்டத் தியாகிகள் களத்தில் நிற்கையில் தங்களது வாழ்க்கையைத் தியாகம் செய்த அவர்களது மனைவியரின் நினைவைப் போற்றும் நிகழ்ச்சி. அரிதான இந்த நிகழ்வை அகிலா ஸ்ரீதர், ஜா.தீபா,பாலைவன லாந்தர் ,ஆர் காயத்ரி ,ரேவா, சவீதா ஜெயஸ்ரீ, தமிழ் பொன்னி ஆகியோர் இணைந்து ஒருங்கிணைப்பு செய்கிறார்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறேன் இடம் : கவிக்கோ மன்றம். சிஜடி காலனி. சென்னை 4 நாள் …
உலக சினிமாவை அறிமுகப்படுத்தும் திரைப்பயணி காணொளித் தொடரின் ஐந்தாம் பகுதி வெளியாகியுள்ளது. இதில் ரோமன் ஹாலிடே பற்றி பேசியிருக்கிறேன்
உலக சினிமாவை அறிமுகப்படுத்தும் திரைப்பயணி காணொளி தொடரின் நான்காம் பகுதியில் சைக்கோ திரைப்படம் பற்றி பேசியிருக்கிறேன்