சென்னையும் நானும் -8
சென்னையும் நானும் காணொளித் தொடரின் எட்டாவது பகுதி வெளியாகியுள்ளது தேசாந்திரி youtube channel ல் இதனைக் காணலாம் இணைப்பு : https://youtu.be/gwOEoFdBKjg ••
சென்னையும் நானும் காணொளித் தொடரின் எட்டாவது பகுதி வெளியாகியுள்ளது தேசாந்திரி youtube channel ல் இதனைக் காணலாம் இணைப்பு : https://youtu.be/gwOEoFdBKjg ••
தி இந்து தமிழ் நாளிதழில் வெளியாகிவரும் எனது வெண்ணிற நினைவுகள் என்ற பத்தி சென்னை புத்தகத் திருவிழா முடியும் வரை வெளியாகாது. புத்தகத் திருவிழா குறித்த சிறப்பு செய்திகள் நாளிதழில் அதிகம் இடம்பெறுவதால் ஆசிரியர் குழு இதனை முடிவு செய்திருக்கிறார்கள் ஜனவரி 21க்குப் பிறகு ஞாயிறு தோறும் பத்தி இடம் பெறும்.
புத்தகத் திருவிழா தேசாந்திரி அரங்கில் நிறைய வாசகர்களைச் சந்தித்தேன். அவர்கள் காட்டும் அன்பும் ஆதரவும் தீராத நன்றிக்குரியது.
எனது மகன் ஹரிபிரசாத் இயக்கிய மை டியர் செகாவ்- குறும்படம் சென்னை புத்தகத் திருவிழா அரங்கில் 16 ஜனவரி வியாழன் மாலை 6 மணிக்கு திரையிடப்படவுள்ளது. குறும்படங்களைத் திரையிடுவதற்காக புத்தக கண்காட்சி சிறப்பு அரங்கு ஒன்றை அமைத்துள்ளது. அங்கே இந்தக் குறும்படம் திரையிடப்படுகிறது. இந் நிகழ்வில் அனைவரும் பங்குபெற்று சிறப்பிக்க வேண்டுமென அழைக்கிறேன்
சென்னை புத்தகத் திருவிழா இன்று மாலை துவங்குகிறது. தேசாந்திரி அரங்கு எண் 396 & 397 தயாராகிவிட்டது. ஜனவரி 21 வரை எல்லா நாட்களும் புத்தகத் திருவிழாவிற்கு வருவேன். விருப்பமானவர்கள் தேசாந்திரி அரங்கில் என்னைச் சந்திக்கலாம்.
சுருக்கமான தென் இந்திய வரலாறு : நொபோரு கராஷிமா தமிழில் முனைவர் ப . சண்முகம். நொபோரு கராஷிமா தமிழக வரலாற்றைச் சிறப்பாக ஆராய்ந்து வரும் ஜப்பானிய வரலாற்று ஆய்வாளர். இவர் தென்னிந்திய வரலாற்றைக் கல்வெட்டு ஆதாரங்களுடன் ஆராய்ந்து விரிவாக எழுதியிருக்கிறார். A concise History of South India: Issues and interpretations. என்னும் ஆங்கில நூலின் மொழியாக்கம் இந்நூல். அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழி பெயர்ப்பு மையம், இதனை வெளியிட்டுள்ளது.
எழுதாப் பயணம் ஓர் அன்னையின் பார்வையில் ஆட்டிச உலகம் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் ஆட்டிசம் பாதிப்புக் கொண்ட கனி என்ற தனது மகனை வளர்ப்பதிலும் கல்வி நிலையத்திற்கு அனுப்பிப் படிக்க வைப்பதிலும் அவரது அன்னை லக்ஷ்மி பாலகிருஷ்ணன் பட்ட கஷ்டங்களையும் படிப்பினைகளையும் உணர்ச்சிப்பூர்வமாக எழுதியிருக்கிறார். இது ஒரு நிகரற்ற வாழ்க்கை சித்திரம். ஆங்கிலத்தில் அருண் ஷோரி எழுதிய Does He Know A Mothers Heart : How Suffering Refutes வாசித்தபோது கலங்கிப்போனேன். அதைவிடச் சிறப்பாகவே லக்ஷ்மி …
புன்னகைக்கும் பிரபஞ்சம் தேர்வு செய்யப்பட்ட கபீரின் கவிதைகளின் தொகுப்பு புன்னகைக்கும் பிரபஞ்சம் செங்கதிர் இதனைச் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கபீரின் பாடல்கள் வட இந்தியாவில் மிகவும் பிரபலமாக மக்களால் பாடப்படுபவை. எளிய மொழியில் நேரடியாக வெளிப்படும் கபீர் பாடலின். அபாரமான படிமங்கள், உவமைகள் வியப்பூட்டுகின்றன. ரேமண்ட் கார்வர். கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் போன்ற படைப்பாகளின் சிறுகதைகளைச் சிறப்பாக மொழியாக்கம் செய்தவர் செங்கதிர்.
எனது புதிய நாவல் புத்தகத் திருவிழா தேசாந்திரி பதிப்பகம் அரங்கு எண் 396 & 397ல் கிடைக்கும்