கதைகள் செல்லும் பாதை- 10

இரண்டு குற்றங்கள் போர்ஹேயின் சிறுகதைகள் சவாலானவை. குற்றவாளிகளின் உலகைப்பற்றிப் போர்ஹே நிறையக் கதைகளை எழுதியிருக்கிறார். இவரைத் தவிர வேறு எந்த இலக்கியவாதியும் இவ்வளவு குற்றப்பின்புல கதைகளை எழுதியிருப்பார்களா என்பது சந்தேகமே. A Universal History of Infamy தொகுப்பிலுள்ள கதைகள் நிஜமான குற்றவாளிகளைப் பற்றியது. அவர்களின் பெயர்கள். இடங்களை மாற்றிக் கதையாகப் போர்ஹே எழுதியிருக்கிறார். கொலை, கொள்ளை, வழிப்பறி. போதை மருந்து கடத்தல் போன்றவற்றை முதன்மையாக்கி பொழுது போக்கு எழுத்தாளர்களே அதிகம் எழுதியிருக்கிறார்கள். ஆனால் போர்ஹே அதே …

கதைகள் செல்லும் பாதை- 10 Read More »

துயில் : ஒரு பார்வை

டாக்டர் ராமானுஜம் •• துயில்: நோய்மையின் வரலாற்று, உளவியல் பதிவு மனிதனுக்கு நேரும் சிக்கல்களிலேயே அவன் மிகவும் அஞ்சுவது நோய்க்குத்தான். வேறு எதையும் விட அவனால் தாங்கமுடியாதது மர்மங்களை.மற்ற பிரச்சனைகளைத் தீர்க்க முடியாவிட்டாலும் ஏன் வந்தது என்ற காரணத்தையாவது அறிந்திருப்பான்.ஆனால் நோய் வந்தவுடன் அவன் மருத்துவரிடம் கேட்கும் முதல் கேள்வி ‘இது ஏன் வந்தது’ என்பதுதான்ஆனால் பெரும்பாலான நோய்கள் ஏன் வந்தன,அதிலும் தனக்கு மட்டும் ஏன் வந்தது என்ற கேள்விக்கு விடை தெரியாமலிருப்பது அவனால் தாங்கிக் கொள்ள …

துயில் : ஒரு பார்வை Read More »

ஈரோடு – வாசகர் சந்திப்பு

புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஆகஸ்ட் 8, புதன்கிழமை ஈரோடு வருகிறேன். அன்று மாலை புத்தகக் கண்காட்சியினுள் தேசாந்திரி பதிப்பகம் ஸ்டால் எண் 207ல் வாசகர்களைச் சந்திக்கிறேன். விருப்பமான நண்பர்கள், வாசகர்கள் சந்திக்கலாம். தொடர்புக்கு ஈரோடு கிருஷ்ணன் 9865916970

தர்மபுரியில்

தர்மபுரியில் நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சியில்  ஆகஸ்ட் 7  செவ்வாய்கிழமை மாலை ஆறுமணிக்கு உரையாற்றுகிறேன்.

பப்புவின் காலணி

புதிய சிறுகதை.  (அச்சில் வெளிவராதது.) “பப்பு உனக்காக இன்று காலையில் புது ஷு ஒன்று வாங்கியிருக்கிறேன். உனக்குப் பிடித்திருக்கிறதா“ என வாட்ஸ்அப்பில் புகைப்படத்துடன் என் மகளுக்குத் தகவல் அனுப்பி வைத்தேன். அவள் லண்டனில் வசிக்கிறாள். மருத்துவராக இருக்கிறாள். மறுநிமிசம் அவளிடமிருந்து பதில் தகவல் வந்தது “அப்பா.. என் வயது 37. நீங்கள் என்னை இன்னமும் சிறுமியாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் வாங்கிய ஷு பத்து வயது சிறுமி அணியக் கூடியது. இது இந்த ஆண்டில் நீங்கள் வாங்கிய …

பப்புவின் காலணி Read More »

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி

அழிசி மின்புத்தக வெளியீட்டகம் நடத்தும் விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 தமிழின் முக்கியமான ஆய்வு நூல்களையும் புனைவுகளையும் மின் புத்தகங்களாக மாற்றி அழிசி கிண்டிலில் வெளியிட்டு வருகிறது. இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. நாங்கள் வாசிப்பினை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நூல் விமர்சனப் போட்டி ஒன்றினை நடத்தி வெல்லும் வாசகருக்கு ஒரு கிண்டில் டிவைஸ் பரிசாக அளிக்க இருக்கிறோம். பரிசு விபரம்: Kindle Paperwhite Starter Pack – கிண்டில், அதற்கான உறை, …

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி Read More »

இந்திரன் 70

சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் எழுத்தாளர் இந்திரன் அவர்களின் 70-வது பிறந்தநாள்  விழா ஜுலை 29. ஞாயிறு மாலை நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்

ஒலிநூல்

பார்வையற்றவர்களுக்கு உதவும் படியாக நான் தேர்வு செய்து தொகுத்த தமிழின் நூறு சிறந்த சிறுகதைகள் நூல் ஒலிப்புத்தகமாக  வெளிவரவுள்ளது. இதனை வாசிப்போம் இணைய தளம் உருவாக்கியுள்ளது. இதன் வெளியீட்டு விழா 28 சனிக்கிழமை மாலை இக்சா மையத்தில் நடைபெறவுள்ளது.  அதில் கலந்து கொண்டு ஒலிப்புத்தகத்தை வெளியிடுகிறேன்

நன்றி

கோவை கொடீசியா புத்தகக் கண்காட்சியினர் அளித்த வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெற்றுக் கொண்டேன். திரளாக வந்து வாழ்த்திய வாசகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றி விருது அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் எனது எளிய அன்பையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன் கோவை கொடீசியா புத்தகக் கண்காட்சியில்  தேசாந்திரி பதிப்பக அரங்கு எண் 201ல் எனது நூல்கள் யாவும் விற்பனைக்கு உள்ளன

நம்பி கிருஷ்ணன்

சொல்வனம் இணைய இதழில் நம்பி கிருஷ்ணன் எழுதி வரும் உலக இலக்கியம் குறித்த கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். ஒரே வார்த்தையில் சொன்னால், அற்புதம். தீவிர வாசிப்பும், செறிவான புரிதலும்.  அந்தப் புரிதலை நூறு சதவீதம் தமிழில் வெளிப்படுத்தும் மொழித்திறனும், சிறந்த மொழியாக்கமும் கொண்ட ஒருவரை நான் கண்டதேயில்லை. அவரது எழுத்து வியக்க வைக்கிறது. நம்பி கிருஷ்ணன் யார். எங்கே வசிக்கிறார் என எதுவும் தெரியாது. ஆனால்  சொல்வனத்தில் அவர் எழுதியுள்ள கட்டுரைகளை நானே ஒரு PDF …

நம்பி கிருஷ்ணன் Read More »