கவிதையைப் பூசிக்கொள்ளுங்கள்

பாரசீகக் கவிஞரான ரூமியின் கவிதைகள் தாகங்கொண்ட மீனொன்று என்ற தலைப்பில் என். சத்யமூர்த்தி மொழியாக்கத்தில் வெளியாகியுள்ளது. இப்பதிப்பை காலச்சுவடு பதிப்பகம் விற்பனைசெய்கிறார்கள். இது சமீபத்தில் படித்த மிக முக்கியமான கவிதைத்தொகுப்பாகும். ரூமியின் சில கவிதைகள் தமிழில் பலராலும் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் தேர்வு செய்யப்பட்ட கவிதைகளின் ஒரே தொகுப்பாக, அதுவும் மிக நேர்த்தியாக, ஒவியங்களுடன் துணைக்குறிப்புகளுடன் வெளியாகியிருப்பது இதுவே முதல்முறை. அவ்வகையில் இதைச் சாத்தியமாக்கிய என். சத்யமூர்த்தி மிகுந்த பாராட்டிற்குரியவர்.. கோல்மன் பார்க்ஸ் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்த (THE …

கவிதையைப் பூசிக்கொள்ளுங்கள் Read More »

பதின் கலந்துரையாடல்

ஞாயிறு மாலை டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் நடைபெற்ற பதின் நாவலுக்கான கலந்துரையாடல் சிறப்பாக நடைபெற்றது.  கலந்து சிறப்பித்த எழுத்தாளர்கள், கவிஞர்கள். வாசகர்களுக்கு நன்றி. ஒருங்கிணைப்பு செய்த வேடியப்பனுக்கும், டிஸ்கவரி புக் பேலஸ் வாசகவட்டத்திற்கும் அன்பும் நன்றியும் நிகழ்வை ஸ்ருதிடிவி முழுமையாகப் பதிவு செய்துள்ளது. நண்பர் கபிலனுக்கு நன்றி. நிகழ்வின் காணொளிகள் அனைத்தும் ஒரே சுட்டியில் https://www.shruti.tv/?p=10678

குங்குமம் இதழில்

இவ்வார குங்குமம் இதழில் எனது குடும்பம் குறித்த சிறப்புக்கட்டுரை வெளியாகியுள்ளது. நேர்காணல் செய்து சிறப்பாக எழுதிய கதிர்வேலனுக்கும் வெளியிட்ட கே.என். சிவராமனுக்கும் நன்றி நேர்த்தியான புகைப்படங்களை எடுத்த வின்சென்டிற்கு  அன்பும் நன்றியும்

பதின் மதிப்புரை

இம்மாத செம்மலர் இதழில் தோழர் எஸ்.ஏ.பி பதின் நாவல் குறித்து மதிப்புரை எழுதியிருக்கிறார் நன்றி  : செம்மலர் எஸ். ஏ. பெருமாள்

பதின் கலந்துரையாடல்

பிப்ரவரி 12 ஞாயிறு மாலை 6 மணிக்கு  டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் எனது பதின் நாவல் குறித்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. வாசகர்கள், நண்பர்கள் அவசியம் கலந்து கொள்ளும்படி அழைக்கிறேன் நிகழ்வினை டிஸ்கவரி வாசகவட்டம் ஒருங்கிணைப்பு செய்துள்ளது

அஞ்சலி

எழுத்தாளர் க.சீ.சிவக்குமார் இன்று காலமாகிவிட்டார். சிவக்குமாரை கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அறிவேன். நல்ல எழுத்தாளன். வேடிக்கையாகப் பேசக்கூடியவன். அவனது மறைவு ஆறாத் துயரை உருவாக்குகிறது. எனது கண்ணீர் அஞ்சலிகள்

காணாமல் போனவன்

ஆஸ்கார் விருதிற்கான சிறந்த படம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது Lion திரைப்படம். ஆஸ்திரேலியத் தயாரிப்பான இப்படத்தின் கதைக்களம் இந்தியா.  ஸ்லம் டாக் மில்லினியர் படத்தில் நடித்த தேவ் படீல் முக்கிய நடிகர். படத்தின் இயக்குனர் Garth Davis.  இது இவரது முதற்படம் A Long Way Home / Saroo Brierley என்ற புத்தகத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கபட்டுள்ளது. ஐந்து வயதில் வீட்டை விட்டு ஒடி காணாமல் போய் ஆஸ்திரேலியத் தம்பதிகளால் தத்துப்பிள்ளையாக …

காணாமல் போனவன் Read More »