பூக்கும் பிளம்

சீன ஓவியங்கள் மற்றும் கவிதைகளுக்கான வழிகாட்டி நூலாகக் கருதப்படுகிறது Sung Po-jen எழுதிய Guide to Capturing a Plum Blossom. இந்த நூல் கி.பி 1238 இல் வெளியிடப்பட்டது, இது உலகின் முதல் அச்சிடப்பட்ட கலைப் புத்தகமாகும். கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக அச்சில் இல்லாத இந்த நூலைத் தேடிக்கண்டுபிடித்து மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார் ரெட் பைன். இவர் சீன செவ்வியல் கவிதைகள் மற்றும் ஞான நூல்களை மொழியாக்கம் செய்துவருபவர் பழைய புத்தகங்களை விற்கும் ஹாங்ச்சோவில் …

பூக்கும் பிளம் Read More »

ஸ்தானிஸ்லாவ் திகாத்

போலந்து எழுத்தாளர் ஸ்தானிஸ்லாவ் திகாத் (Stanisław Dygat) எழுதிய தாஸ்தயேவ்ஸ்கியின் வாழ்வில் ஓர் அறியப்படாத நிகழ்ச்சி என்ற சிறுகதையைக் கவிஞர் சுகுமாரன் மொழியாக்கம் செய்திருக்கிறார். கல்குதிரை தஸ்தாயெவ்ஸ்கி சிறப்பிதழில் இக்கதை வெளியாகியுள்ளது. இந்தக் கதை வெளியான நாட்களிலே தஸ்தாயெவ்ஸ்கியை இவ்வளவு வியந்து எழுதியுள்ள திகாத் வேறு என்ன சிறுகதைகள் எழுதியிருக்கிறார். தஸ்தாயெவ்ஸ்கி பற்றி ஏதேனும் கட்டுரை அல்லது நூல் எழுதியிருக்கிறாரா என்று தேடினேன். எதுவும் கிடைக்கவில்லை. An Unknown Fragment from Dostoevsky’s Life என்ற திகாத்தின் …

ஸ்தானிஸ்லாவ் திகாத் Read More »

தொடர் பயணங்கள்

கடந்த மாதம் 25 முதல் அக்டோபர் 10 வரை இடைவிடாத பயணம். அன்றாடம் இருநூறு முதல் நானூறு கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்திருக்கிறேன். அதுவும் மலேசியா பயணம் முடித்துவிட்டுச் சென்னை திரும்பிய மறுநாள் புத்தகக் கண்காட்சி நிகழ்வுகளுக்காகப் பயணம். பயணத்தின் ஊடே மழையில் நனைந்து காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டது. ஆயினும் ஒத்துக் கொண்ட நிகழ்வுகளைத் தவிர்க்க இயலவில்லை. விருதுநகரில் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொண்ட போது முழுமையான ஓய்வு தான் உங்களுக்கான மருந்து …

தொடர் பயணங்கள் Read More »

நிசார் கப்பானியின் காதல் கவிதைகள்

கவிஞர் நிசார் கப்பானியின் (Nizar Qabbani) அராபிய காதல்கவிதைகள் தொகுப்பினை வாசித்தேன். மிகச்சிறந்த காதல்கவிதைகள். காதலிப்பவர்களுக்கு வழக்கிலுள்ள சொற்கள் போதுமானதாகயில்லை. புதிய சொற்களை தேடுவதை விடவும் சொற்கள் இல்லாமல் காதலிக்க முயலுகிறார்கள் என்கிறார் கப்பானி. இவரது கவிதைகள் எளிமையானவை. ஆனால் வியப்பூட்டுபவை. காதலின் பித்து கவிதையாக மலருகிறது. குறிப்பாக முட்டாள் பெண்ணின் கடிதம் போன்ற கவிதையில் வரலாற்று நினைவுகளின் வழியே காதலைப் பேசுகிறார். விளக்கை விடவும் வெளிச்சம் முக்கியம், குறிப்பேடினை விடவும் அதில் எழுதப்பட்ட கவிதை முக்கியம், …

நிசார் கப்பானியின் காதல் கவிதைகள் Read More »

இளையராஜா திரைப்படம்.

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் பணியாற்றுகிறேன். அதன் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் மூன்று மாதங்களுக்கு முன்பாக அழைத்திருந்தார்.  திரைப்படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் பணியாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.  அதைத் தொடர்ந்து  திரைக்கதை உருவாக்கப் பணியில் இணைந்து கொண்டேன். இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைபுரத்திற்கு இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர்களுடன் சென்று அவரது சொந்த வீடு, அவர் படித்த பள்ளிக்கூடம், அவர் விளையாடி மகிழ்ந்த இரட்டை ஆலமரம்  உள்ளிட்ட பல்வேறு இடங்களைக் கண்டோம். அத்துடன் ஊர்மக்களைச் …

இளையராஜா திரைப்படம். Read More »

விருதுநகரில்

விருதுநகரில் எனது நண்பரும் தொழில் அதிபருமான அம்பாள் முத்துமணி தனது அம்பாள் ராமசாமி புஷ்பமணி அறக்கட்டளை சார்பில் சிறுகதைப் போட்டி ஒன்றினை நடத்துகிறார் இதன் பரிசளிப்பு விழா அக்டோபர் 6 மாலை விருதுநகர் அம்பாள் ராமசாமி புஷ்பமணி அரங்கில் நடைபெறுகிறது இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பரிசுகளை வழங்குவதுடன் வரலாற்றின் வெளிச்சம் என்ற தலைப்பில் உரையாறறுகிறேன்.

திருச்சி புத்தகத் திருவிழாவில்

திருச்சி நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் அக்டோபர் 4 வெள்ளிக்கிழமை மாலை மகத்தான இந்திய நாவல்கள் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன். திருச்சி புத்தகத் திருவிழாவில் அரங்கு எண் 26 மற்றும் 27ல் எனது அனைத்து நூல்களும் விற்பனைக்கு கிடைக்கின்றன.

மலேசியப் பயணம்

ஒரு வார கால மலேசியப் பயணம் முடித்து இன்று சென்னை திரும்பினேன். பினாங்கு துவங்கி கூலிம்,  சுங்கைசிப்புட்  ரிஞ்சிங், மலாக்கா என ஐந்து நிகழ்ச்சிகள். கோலாலம்பூரிலிருந்து பினாங்கு வரையான நீண்ட தூரக் கார் பயணம். அதுவும் மழையோடு பயணம் செய்தது மறக்க முடியாத அனுபவம். எல்லா நிகழ்ச்சிகளிலும் அரங்கு நிரம்பிய கூட்டம். எனது மலேசியப் பயணத்தை நண்பர் பி.எம். மூர்த்தி சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தார். இவர் மலேசிய கல்வி அமைச்சகத்தின் தேர்வு வாரிய அதிகாரியாகப் பணியாற்றியவர். சிறந்த கல்வியாளர். …

மலேசியப் பயணம் Read More »

ரொட்டியில் எழுதப்பட்ட கவிதை

பிரிட்டிஷ் கவிஞர் வெர்னான் ஸ்கேன்னல் (Vernon Scannell ) ரொட்டியில் கவிதை எழுதும் கவிஞரைப் பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறார். காகிதத்திற்குப் பதிலாக ரொட்டியில் ஒருவர் கவிதை எழுத விரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதில் கவிதை உண்ணப்படும் பொருளாக மாறுகிறது.  ரொட்டியில் எழுதுவதற்கான மையாக ஜாமை மாற்றுகிறார் கவிஞர். அதுவும் விரலால் ஜாமைத் தொட்டு ரொட்டி மீது சிறிய கவிதை எழுதுவதாகச் சொல்கிறார். கவிதை எழுதுவது குழந்தை விளையாட்டு போல மாறுகிறது.  ரொட்டி மீது எழுதப்பட்ட கவிதையை …

ரொட்டியில் எழுதப்பட்ட கவிதை Read More »