பாஷோவின் மேகம்.
Each day is a journey, and the journey itself home,” ஜென் கவிஞரான பாஷோ இயற்கையை நெருங்கி அறிவதற்காக ஒரு நீண்ட நடைபயணம் ஒன்றினை மேற்கொண்டார். அந்த பயண அனுபவம் குறித்து அவர் எழுதிய குறிப்புகளையும் பயணத்தின் ஊடே அவர் எழுதிய கவிதைகளையும் வாசித்த போது அற்புதமாக இருந்தது. இவை அவரது பயணத்தின் குறிப்புகள் சிலவற்றின் மொழியாக்கங்கள்.***நீண்ட சாலையின் துவக்கம்முடிவில்லாத காலத்தின் நித்ய பயணிகளே நாட்களும் மாதங்களும். கடந்து போன வருசங்களும் அப்படியானதே. …