கவனிக்க மறந்த மனிதர்கள்
(கிதார் இசைக்கும் துறவி சிறுகதைத் தொகுப்பு குறித்த வாசிப்பனுபவம்) டாக்டர் இரா.மௌலிதரன் கிதார் இசைக்கும் துறவி இந்த வருடம் வெளியான பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சிறுகதைத் தொகுப்பு , அதற்குக் காரணம் அதன் ஆசிரியர் . எஸ் ரா அவர்கள் சிறுகதையில் ஒரு மாஸ்டர் என்றுதான் சொல்ல வேண்டும் . இத்தனை வருடங்களுக்குப் பிறகும் இத்தனை கதைகளுக்குப் பிறகும் அவருக்கு எழுதுவதற்கு ஒரு சிறுகதையாக என்ன மிஞ்சியிருக்கிறது என்ற கேள்வியே என்னை இந்தப் புத்தகத்தை நோக்கிய பெரும் …









