குள்ளனும் டாவின்சியும்
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான பர்லாகர் க்விஸ்டின் குள்ளன் நாவலை தி.ஜானகிராமன் மொழியாக்கம் செய்திருக்கிறார். சிறப்பான மொழியாக்கம். நாவலின் கவித்துவமான வர்ணனைகள் மற்றும் தத்துவ எண்ணங்களை நேர்த்தியாகத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். The Dwarf நாவல் 1944ல் ஸ்வீடிஷ் மொழியில் வெளியானது. 1945ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. 1986 அக்டோபரில் சமுதாயம் பதிப்பகம் குள்ளன் நாவலை வெளியிட்டிருக்கிறது. இந்த நாவலில் ஓவியர் லியோனார்டோ டாவின்சி முக்கியக் கதாபாத்திரமாக இடம்பெற்றுள்ளார். மிலன் பிரபுவான லுடோவிகோ ஸ்ஃபோர்சாவின் அழைப்பில் …









