கதவைத் தட்டிய கதை
குறுங்கதை தனது வீட்டுக்கதவைத் தட்டிய கதையைப் பற்றி அந்தக் கவிஞன் எழுதியிருந்தான். புதுடெல்லியின் குளிர்கால இரவு ஒன்றில் அவனது வீட்டினைக் கதை தட்டியது. தொலைதூரத்திலிருந்து வந்த விருந்தாளியை வரவேற்பது போலக் கதையை வரவேற்றான். கதை ஒரு முதியவரின் தோற்றத்திலிருந்தது. கிழிந்த சட்டை, கவலை படிந்த முகம், கதைக்கு உறுதியான கால்களும் கைகளும் இருந்தன. கதை மூச்சுவிட்டுக் கொண்டுமிருந்தது. கதையின் கண்கள் மட்டும் தொல்சுடரென ஜொலித்தன. “நீண்ட தூரம் பயணம் செய்திருப்பீர்கள் போலிருக்கிறதே“ என்று கேட்டான் “கதைகள் நடந்த …









